Search Posts

வரதட்சணையால் பெருகும் மிரட்டல் திருமணங்கள்

வரதட்சணையால் பெருகும் மிரட்டல் திருமணங்கள் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. குறிப்பாக வரதட்சணை வாங்குவதன் மூலம் சாதி, மத பேதமின்றி அனைவராலும் பெண்கள் கொடுமைப் படுத்தப்படுகின்றனர். திருமணம் ஆகி ஆண்டுகள் பல ஆன பின்பும் கூட வரதட்சணை கேட்டு பெண்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதும், ஸ்டவ் வெடித்து கொல்லப்படுவதும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. பல குற்றங்களை குற்றம் என மக்கள் ஒத்துக்கொண்டாலும், வரதட்சணையை மட்டும் இன்னும் இந்திய சமூகம் குற்றமாகக் கருதுவதில்லை. அதனை சமூக அந்தஸ்தாகக் கருதுகிறது. அதனால் தான் குற்ற உணர்வே இல்லாமல் வரதட்சணையாக வழங்கப்படும் பொருள்கள் சில சமுதாய திருமணங்களில் காட்சிப்பொருளாக வைக்கப்படுகிறது. தமிழகத்தில் தவ்ஹீத் பிரசாரத்தின் வாயிலாக வரதட்சணை […]

இந்தியாவை விட்டு யார் வெளியேற வேண்டும்?

இந்தியாவை விட்டு யார் வெளியேற வேண்டும்? இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தான்காரர்கள் – பாகிஸ்தானின் ஏஜெண்டுகள் என்று காவி அமைப்பினர் அவதூறாகப் பேசி வருகிறார்கள். இப்படி அவதூறு சுமத்துபவர்கள் மீது கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் மஜ்லிஸ் கட்சியின் எம்.பி. அஸதுத்தீன் உவைஸி கூறினார். இப்படி இவர் சொன்னதில் நியாயம் இருக்கத் தான் செய்கிறது. இந்திய நாடு இரண்டாகப் பிளவு பட்ட போது இங்குள்ள முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் செல்லலாம் என வழி திறந்து விடப்பட்டது. ஆனால் இந்திய நாட்டின் மீது பற்று கொண்ட இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை. செல்லவும் விரும்பவில்லை. காரணம் இந்திய நாட்டின் மீது அவர்கள் வைத்திருந்த மாறாத […]

சமூக வலைதளங்களால் சீரழியும் குடும்பங்கள்

சமூக வலைதளங்களால் சீரழியும் குடும்பங்கள் சமூக வலைதளம் என்பது தற்போதைய சமூகத்தில் அசைக்க முடியாத ஒன்றாக ஆகி விட்டது. ஒரு செய்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல உள்ளங்கையில் இருக்கும் தொலைபேசியே போதுமானதாக ஆகிவிட்டது. இதற்கு சமூக வலைதளங்களே முக்கிய காரணமாக உள்ளன. மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக சக மனிதர்களைத் தொடர்பு கொள்வது எளிதாக ஆகிவிட்டது. இப்படி இதனுடைய நன்மைகள் பலவாறு இருந்தாலும் அதனால் ஏற்படும் தீமைகளும் மற்றொரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது. குடும்பத் தொடர்பைத் துண்டிக்கும் சமூக வலைதளங்கள் இதன் விளைவாக ஒரே வீட்டிலே இருக்கக் கூடிய அனைவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி, அகமகிழ்ந்து பேசிக் கொள்ளாமல் ஆளுக்கொரு மூளையில் அமர்ந்து இணையதளத்தில் […]

எதிர்ப்புகளால் வளரும் இஸ்லாம்

எதிர்ப்புகளால் வளரும் இஸ்லாம் –  மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டுப் போர்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக சிரியாவில் பல லட்சம் மக்கள் தங்கள் நாட்டைத் துறந்து அகதிகளாக அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். இதில் அதிகமானோர் ஜெர்மனி மற்றும் ஃப்ரான்ஸ் நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். ஜெர்மனி நாடு மனிதாபிமானத்தோடு பல லட்ச மக்களை அரவணைத்தது. ஜெர்மனிக்குள் அகதிகள் அனுமதிக்கப்பட்ட விஷயத்தில் அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டின் பெரும் நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்தது. ஏஞ்சலா மெர்கல் மிகப்பெரும் வரலாற்றுப் பிழை புரிந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார். மற்ற நாடுகளின் எதிர்ப்பு ஒர் புறமிருக்க உள்நாட்டிலும் எதிர்ப்பைச் […]

இந்தியாவில் அதிகரித்து வரும் பெண் கொடுமைகள்!

இந்தியாவில் அதிகரித்து வரும் பெண் கொடுமைகள்! ஆய்வு தரும் அதிர்ச்சித் தகவல்கள்!! உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளிலும் பல கொடுமைகள், அடக்குமுறைகள், சித்ரவதைகள் இருப்பது போல இந்திய நாட்டிலே பெண்களுக்கு நிகழும் வன்கொடுமை காலம் காலமாக நடந்து வந்தது என்பதை யாரும் மறுக்க இயலாது. குறிப்பாக தேவதாசி முறை தேவை எனப் பேசிய சுப்புலட்சுமி ரெட்டி, சத்தியமூர்த்தி கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைக் காக்க, கலைகளைப் பேண தேவதாசி முறை தேவை என்று பேசினார். “தாசி (தேவதாசி) குலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பலருக்கு இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் வருகிறது. பெண்களுக்கு எதிரான கொடுமை […]

தும்மலை அடக்கினால் ஆபத்து

தும்மலை அடக்கினால் ஆபத்து இஸ்லாத்தை மெய்ப்படுத்தும் ஆய்வு! ஒரு மனிதன் ஒரு முறை தும்மினால் அது அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்பதைக் குறிக்கும். ஆனால் இன்றைய நாகரீக சமூகம் பொது இடங்களில் சப்தமிட்டு தும்முவது அநாகரீகச் செயல் என்று கருதுகிறது. எனவே தான் பொது சபைகளில் ஒருவர் தும்மினால் “எக்ஸ்க்யூஸ் மி” – என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லுவது பொது சபைகளில் நடந்து கொள்ளும் ஒழுங்கு முறையாக சொல்லித் தரப்படுகிறது. மேலும் தும்மல் மூலம் தான் ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்கு நோய் தொற்றுகிறது எனவும் பெரும்பாலானோர் நம்புகின்றனர். எனவே தான் பொது இடங்களில் தும்முவது ஒரு கெட்ட காரியம் என்று கருதும் […]

ஹஜ் மானியம் ரத்து:

உண்மையும், பொய்யும் கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி ஹஜ் புனிதப் பயணம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்ற நீதிபதிகள் அப்தாப் ஆலம், ரஞ்சனா தேசாய் கொண்ட அமர்வு 10 ஆண்டுகளுக்குள் ஹஜ் மானியத்தை படிப்படியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் ஹஜ் புனித பயணக் கொள்கையை பரிசீலனை செய்யவும், புனித ஹஜ் கொள்கையை வகுக்கவும் மத்திய பி.ஜே.பி. அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழு மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியிடம் தனது பரிந்துரையை அளித்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரையின் பேரில் ஹஜ் மானியம் படிப்படியாக ரத்து […]

மாமனிதர் நபிகளாரின் உணவு

 உண்டு சுகிக்கவில்லை மனிதனின் முதல் தேவை உணவு தான். உணவு சுவைபட இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் மனிதன் அதிகம் சம்பாதிக்கிறான். முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் உயர்ந்து நின்ற காலத்தில் அவர்கள் எத்தகைய உணவை உட்கொண்டார்கள் என்பதை முதலில் ஆராய்வோம். மாமன்னர்கள் உண்ட உணவுகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்களால் கூட கண்டதில்லை; சராசரி மனிதன் உண்ணுகின்ற உணவைக் கூட அவர்கள் உண்டதில்லை என்பதற்கு அவர்களின் வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன. எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்புப் பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) […]

காந்தியை கோட்சே சுட்டுக் கொல்லவில்லையா?

காந்தியை கோட்சே சுட்டுக் கொல்லவில்லையா? 1948 ஆம் ஆண்டு காந்தியடிகளை காவி அமைப்பைச் சேர்ந்த நாதுராம் விநாயக கோட்சே சுட்டுக் கொன்றான். தேசத் தலைவர்கள் அனைவரின் பிறந்த நாள், நினைவு நாள் ஆகிய இரு நாள்களும் கொண்டாடப்படுகின்றன. காந்தி கொல்லப்பட்ட நாளை நினைவு தினமாக கொண்டாடினால் காந்தியை கோட்சே கொன்றது நினைவுக்கு வரும். இந்த நினைப்பு யாருடைய உள்ளத்திலும் வந்து விடக் கூடாது என்பதற்காக காந்தி கொல்லப்பட்ட நாளை தீண்டாமை ஒழிப்பு தினமாக அனுசரித்து, காந்தியின் கொலையை மறைத்து வருகிறார்கள். இந்நிலையில் கோட்சேவின் குண்டு துளைத்து காந்தி இறக்கவில்லை. மாறாக நான்காவது குண்டை ஒருவர் சுட்டார். அந்தக் குண்டு துளைத்து தான் காந்தி இறந்தார் எனக் […]

கண்களை இழந்த காஷ்மீர் மாணவியின் சாதனை..?

பெல்லட் குண்டால் கண்களை இழந்த காஷ்மீர் மாணவியின் சாதனையும் வேஷம் போடும் ராணுவமும்! இந்தியக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காஷ்மீர் பகுதியில் 2016 ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் இந்திய ராணுவம் பெல்லட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. பயன்படுத்துவதற்கான காரணம் என்ன? பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களைக் காயப்படுத்தி, உடல் வேதனைக்கு உட்படுத்துதலே இவ்வகை துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்கான முதல் காரணம். குறிப்பிட்ட தூரத்தில் இருந்து இதைப் பயன்படுத்தினால் மட்டுமே சேதம் ஏற்படாது. அருகாமையில் பயன்படுத்தினால் கண், காது போன்ற பாகங்கள் பாதிக்கப்படலாம். பெல்ட்டுகள் மெல்லிய திசுக்களை துளைத்துச் செல்லும். பெல்லட் ரக துப்பாக்கிகளை தேவை ஏற்படும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதுவும் இடுப்புப் […]

நிறவெறியின் உச்சம்:

நிறவெறியின் உச்சம்: கறுப்பின மக்களை இழிவுபடுத்திய டிரம்ப் ஆப்ரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘சிட்ஹோல் நாடுகளில் இருந்து வருபவர்களை அமெரிக்கா ஏன் அனுமதிக்க வேண்டும்? என்று எதிர்க் கேள்வி எழுப்பினார். சிட்ஹோல் என்றால் அழுக்கு படிந்தவர்கள் என்பது பொருள். இது இழிவுபடுத்தும் வார்த்தையாகும். ஆப்ரிக்க கறுப்பின மக்களை இழிவு படுத்தும் வகையில் பேசிய டிரம்ப், இதற்காக ஆப்ரிக்க மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆப்ரிக்க நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.வுக்கான ஆப்ரிக்க பிரதிநிதிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் எபா கலோண்டா ‘டிரம்பின் பேச்சு, ஆப்பிரிக்கர்கள் […]

காலத்தை வென்ற திருக்குர்ஆன்

14 நூற்றாண்டுகளாய்… உலகில் உள்ள எந்த ஒரு பொருளும் காலத்தை வென்றதில்லை. அது போல் எந்த ஒரு கொள்கையும், எந்தத் தத்துவமும் காலத்தில் நிலைத்து நின்றதில்லை. அவை அனைத்தையுமே காலம் அழித்துவிடும். ஆனால் பதினான்கு நூற்றாண்டுகளாய் காலத்தால் அழிக்க முடியாத வேதமாய் திருக்குர்ஆன் திகழ்கிறது. எழுதப்படிக்கத் தெரியாத அரபு மக்களிடம், எழுதப் படிக்கத் தெரியாத முகமது நபியிடம் அருளப்பட்ட குர்ஆன் எவ்வித மாற்றமும் இன்றி, தற்போது உள்ளது உள்ளவாறே வந்து சேர்ந்துள்ளது. இந்தக் குர்ஆனை அழிக்க உலகமே திரண்டு வந்த போதும் கூட, மக்களின் உள்ளத்தில் இறைவன் பாதுகாத்து வைத்துள்ளதால்,அது காலத்தால் அழியாமல் இருக்கின்றது. பாதுகாக்கப்பட்ட வேதம் எத்தனையோ புத்தகங்கள் ஒவ்வொரு காலத்திலும் உருவாகியுள்ளன. ஆனால் […]

அசுர வளர்ச்சியில் இஸ்லாம்

அசுர வளர்ச்சியில் இஸ்லாம்: அதிர்ச்சியடையும் அமெரிக்கா அமெரிக்காவின் பிரபல ஆராய்ச்சி நிறுவனமான பி யு ரிசர்ச் செண்டர் (Pew Research Center)  பல ஆராய்ச்சி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்த அமைப்பு ஓர் நடுநிலையான ஆய்வு மையம் என அறிமுகப்படுத்தி கொள்கிறது. இந்த அமைப்பின் சார்பாக நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சனைக்கு மக்கள் கருத்துக்கணிப்பு நடத்துதல், மக்கள் தொகை ஆய்வு, பகுப்பாய்வு மற்றும் தரவு சார்ந்த சமூக அறிவியல் ஆராய்ச்சி (Data Driven Social Research ) ஆகிய துறையில் அதற்குரிய வல்லுனர்களை கொண்டு ஆராய்ச்சி செய்யும் அமைப்பாகும். இந்த அமைப்பு சென்ற வாரம் அமெரிக்காவில் முஸ்லிம்களின் மக்கள் தொகை பற்றிய ஆய்வை மேற்கொண்டது. அமெரிக்காவில் முஸ்லிம்களின் […]

புவியின் மீது கதிரவனின் ஆற்றல்

புவியின் மீது கதிரவனின் ஆற்றல் கதிரவ ஒளியே புவியில் கிடைக்கும் ஆற்றலின் மூல ஆதாரமாகும். கதிரவ மாறிலி (solar constant) என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் கதிரவ ஒளியின் காரணமாக கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். கதிரவ மாறிலி, கதிரவனில் இருந்து ஒரு வானியல் அலகு தூரத்தில் கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். இது தோராயமாக 1368 வாட்/சதுர மீட்டர் ஆகும். கதிரவ ஒளி புவியின் மேற்பரப்புக்கு வந்தடைவதற்கு முன்பு வளி மண்டலத்தால் பெரிதும் மட்டுப்படுத்தப் படுகிறது. இதனால் குறைந்த அளவிலான வெப்பமே தரைக்கு வந்தடைகிறது. ஒளிச் சேர்க்கையின் போது தாவரங்கள் கதிரவ ஒளி ஆற்றலை வேதியல் ஆற்றலாக மாற்றுகின்றன. கதிரவ மின்கலனில், கதிரவ ஒளியாற்றல்/வெப்பம் மின்சார ஆற்றலாக மாற்றப்படுகிறது.  பெட்ரோலியம் சார்ந்த எரிபொருள்களில் இருந்து கிடைக்கும் ஆற்றலும் கதிரவ ஒளியில் […]

சூரியன்..?

சூரியன் என்றால் என்ன ? இது பூமிக்கு மிக அருகிலுள்ள விண்மீன் ஆகும்.இது பிளாஸ்மா நிலையில் உள்ள மிகவும் வெப்பமான வாயுக்களைக் கொண்டதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய கோளமாகவும் காணப்படுகிறது. நாம் சுவாசிக்கும் காற்றான ஆக்சிஜனும் பலூனில் அடைக்கப்பட்டிருக்கும் ஹீலியம் வாயுவுமே இதில் காணப்படும் முக்கிய பிரதான வாயுக்களாகும். சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலை 5,500°C க்கும் அதிகமாகும்,அது மட்டுமின்றி இதன் மத்திய பகுதியின் வெப்பநிலை 15 மில்லியன்°C க்கும் அதிகமாகும். இது அதிகளவில் ஹைட்ரஜன் (70%) மற்றும் ஹீலியத்தால் (28%) ஆக்கப்பட்டுள்ளது. சூரியனில் இருந்து பெறப்படும் ஒளிச்சக்தி தாவரங்களின் வளர்ச்சியில் பங்களிக்கிறது. நாம் தாவரங்களில் இருந்து உணவை பெற்றுக் கொள்கிறோம். நாம் தாவரங்களின் மற்றைய பாகங்களை சமையலில் எரிப்பதற்குப் பயன்படுத்துகிறோம். […]

கோள்கள்…?

கோள்கள் கோள் (planet) விண்மீனைச் சுற்றிவரும் வான்பொருளாகும். இதுதனது ஈர்ப்பு விசையாலுருண்டையாகத் திரளத் தக்க அளவு பொருண்மை மிக்கதாகும்; வெப்ப அணுக்கருப் பிணைவு நிகழ்வை உருவாக்க இயலாத அளவு பொருண்மை கொண்டதாகும்;மேலும் இது தன் வட்டணையின் வட்டாரத்தில் கோளெச்சம் ஏதும் அமையாமல் நீக்கியிருக்கவேண்டும். கோள் எனும் சொல் வரலாறு, கணியவியல், அறிவியல், தொன்மவியல், சமயம் சார்ந்த பண்டைய சொல்லாகும். சூரியக் குடும்பத்தில் உள்ள பல கோள்களை வெற்றுக் கண்ணால் பார்க்கலாம். இவை பல பண்டைய நாகரிகங்களால் தெய்வீகத் தன்மையோடும் தெய்வங்களால் அனுப்பப்பட்டனவாகவும் உணரப்பட்டன. அறிவியல் அறிவு வளர்ந்த்தும், கோள்கள் பற்றிய கண்ணோட்டம் மாறலானது. பன்னாட்டு வானியல் ஒன்றியம் 2006 ஆம் ஆண்டில் சூரியக் குடும்பக் கோள்களுக்கான ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. […]

நண்பர்களின் கடமை..?

நட்பு ஒவ்வொரு மனிதனும் இந்த உலக வாழ்க்கையில் பலவிதமான உறவுகளைப் பெறுகின்றான். ஒரே மனிதன் கணவனாகவும் மகனாகவும் தந்தையாகவும் நண்பனாகவும் இன்னும் பல நிலையைக் கொண்டவனாகவும் இருக்கிறான். இது போன்ற உறவுகளில் சிலதை அவன் பெறாவிட்டாலும் நட்பு என்ற உறவையாவது பெற்றிருப்பான். ஏனென்றால் சிறியவர்கள் பெரியவர்கள் கொடியவர்கள் நல்லவர்கள் ஆகிய அனைவரும் யாரையாவது ஒருவரை நண்பர்களாக தேர்வுசெய்யாமல் இருப்பதில்லை. நட்பினால் பல பயன்களை மனிதன் அடைவதால் நாம் எல்லோரும் நட்பு கொள்கிறோம். பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் தனிமையை விரும்புவதில்லை. துணைக்கு நண்பன் வந்து விட்டால் நேரம் போவதே தெரியாமல் எதையாவது பேசிக் கொண்டே இருக்கிறோம். நண்பர்கள் அதிகமாக கூடிவிட்டால் நம் முகத்தில் கவலையையே பார்க்க இயலாது. சந்தோஷமாக […]

மறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்..?

மறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள் இந்தப் பூமியில் மனிதன் ஏராளமான பாவங்களைச் செய்கிறான். அவன் தன்னால் முடிந்த அளவு இப்பாவங்களை விட்டு விலகி அல்லாஹ்வைப் பயந்து நல்லவனாக வாழ்வதற்காக, அவனது பாவங்களுக்குத் தண்டனை இருப்பதாக அல்லாஹ்வும் அவனது தூதர் நபி (ஸல்) அவர்களும் நமக்குத் தெளிவு படுத்தியுள்ளனர். இவ்வாறு மனிதன் செய்யும் பாவங்களில் சில சிறியவையாகவும் சில பாவங்கள் மிகப் பெரியவையாகவும் அமைந்துள்ளன. பெரிய பாவங்கள் எவை? என்பதை அதற்குரிய தண்டனைகளை வைத்து நாம் அறிந்து கொள்ளலாம். இந்த வகையில் மிகப் பெரும் பாவங்களில் உள்ளவையாகக் கருதப்படும் சில குற்றங்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் தண்டனை அவன் நம்மைப் பார்க்காமலும் நம்மிடம் பேசாமலும் நமது பாவக் கறைகளைச் […]

நபியவர்களைச் சாராதவர்கள்

நபியவர்களைச் சாராதவர்கள் நபிகளார் அவர்களின் அறிவுரைகளில், அவர்களது வார்த்தைப் பயன்பாட்டை வைத்து அதன் கடுமையையும் நன்மையையும் மதீப்பிடு செய்து விடலாம். சாதாரணமாகக் கண்டித்த வார்த்தைகள், கடுமையாகக் கண்டித்த வார்த்தைகள் என்று நபிமொழித் தொகுப்புகளில் நபிகளாரின் வார்த்தைப் பயன்பாட்டில் நாம் பார்க்கலாம். அந்த வகையில் சில குறிப்பிட்ட செயல்களை நபி (ஸல்) அவர்கள், ‘இந்தச் செயலைச் செய்தவன் என்னைச் சார்ந்தவன் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். கடும் கோபம் ஏற்படும் போது எப்படி ஒரு தந்தை தன் பிள்ளையைப் பார்த்து, ‘என் பிள்ளையே கிடையாது’ என்று கூறுவாரோ அதைப் போன்று சில காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து, ‘என்னைச் சார்ந்தவன் இல்லை’ என்று கடுமையான வாசகத்தை நபிகளார் பயன்படுத்தியுள்ளார்கள். எனவே […]

சிந்தித்து செயல்படவே திருக்குர்ஆன்!

சிந்தித்து செயல்படவே திருக்குர்ஆன்! புகழ் அனைத்தும் அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது. குர்ஆனின் சிறப்புகளைப் பற்றியும் அதை முறைப்படி ஓதி வருவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் ஒரு எழுத்திற்குப் பத்து நன்மை கிடைக்கும் என்றெல்லாம் நாம் படித்து வைத்திருக்கின்றோம். அதனால் தான் ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு பொருளாதாரத்தையே மையமாகக் கொண்ட இவ்வுலகில் உலகியல் தேவைகளை நிறைவேற்ற உலகக் கல்வியைப் பயில்விக்கின்றனர்.அதே நேரத்தில் சிறிது நேரம் ஒதுக்கி குர்ஆனையும் கற்றுக் கொடுத்து குர்ஆனை ஓத வைக்கின்றோம். இன்னும் சிலரோ குர்ஆனை மனனம் செய்வதற்கு கூட தமது குழந்தைகளை அனுப்புகின்றனர். இவ்வாறு பலவாறு குர்ஆனின் சிறப்புகளை அறிந்து வைத்திருக்கின்ற நாம் அது அருளப்பட்டதன் நோக்கத்தை மட்டும் மறந்து விடுகின்றோம். […]

காலத்தே பயிர் செய் !

காலத்தே பயிர் செய் மனிதன் இவ்வுலகத்தில் இறைவனை அறிந்து கொள்ளவும் இறைச் சட்டங்களைச் செயல்படுத்தவும் அவனது அறிவுரைகளின் படி நடக்கவும் போதிய காலங்களை அல்லாஹ் வழங்கியுள்ளான். ஆனால் மனிதன் நேரமில்லை, நேரமில்லை என்று கூறிக் கொண்டு இறைக் கட்டளைகளையும் நற்காரியங்களையும் அலட்சியப்படுத்தி வருகின்றான். நேரமில்லை என்று சொல்பவர்கள், உண்மையாக இவ்வாறு சொல்கிறார்களா? அல்லது தட்டிக் கழிப்பதற்காக இவ்வாறு சொல்கிறார்களா? என்பதை அவர்களின் செயல்பாடுகள் தெளிவுபடுத்துகின்றன. நேரமில்லை என்று சொல்பவர்கள் மணிக்கணக்கில் நாடகங்களைப் பார்க்கிறார்கள் பல மணி நேரம் கிரிக்கெட் பார்க்கிறார்கள் விடிந்தது கூடத் தெரியாமல் உறங்குகிறார்கள் நண்பர்களுடன் அரட்டை அடிக்கிறார்கள்ளூ சின்னத்திரை, பெரிய திரைகளில் பல மணி நேரம் சினிமா பார்க்கிறார்கள். இப்படி ஏராளமான நேரங்களை […]

அதிகரிக்கும் குற்றங்கள் !

அதிகரிக்கும் குற்றங்கள் ! தடுக்கும் வழியென்ன ? தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் வன்முறை, திருட்டு, கொலை, விபச்சாரம், கடத்தல் எனப் பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றனர். அவற்றைத் தடுக்க இயலாமல் காவல் துறையும், அரசாங்கமும் தடுமாறி வருகின்றன. குற்றங்கள் அதிகரிக்கும் போக்கைச் சென்றவாரம் நடைபெற்ற சில குற்றச் செயல்களைப் பட்டியலிடுவதின் மூலம் அறியலாம். செல்போனால் நடந்த கொலை வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே வேப்பங்கல் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்(13) என்ற மாணவன், பொய்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்புப் படித்து வந்தார். சந்தோஷ் படிக்கும் பள்ளியில் சக மாணவர்களிடம் செல்போன் வாங்குவதில் […]

ஜும்ஆ தொழுகையின் சிறப்புகள்

ஜும்ஆ தொழுகையின் சிறப்புகள் மிக முக்கிய கடமையான ஜும்ஆ தொழுகையின் சிறப்புகள், அதை விடுவதால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை இந்த உரையில் காண்போம். இன்று உலகில் ஒருவரிடம் ஒட்டகம், மாடு, ஆடு, கோழி, முட்டை ஆகியவற்றைக் கொடுத்து, இதில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அவர் எதைத் தேர்வு செய்வார்? ஒட்டகத்தைத் தான் தேர்வு செய்வார். ஏனெனில் அது தான் இருப்பதிலேயே அதிக விலை மதிப்பு கொண்டது. இது உலக விவகாரத்தில்! ஆனால் மறுமை விஷயத்திலோ அவர் இவ்வாறு தேர்வு செய்வதில்லை. ‘ஒருவர் ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி […]

விலகாமல் செல்லும் கோள்கள்!

விலகாமல் செல்லும் கோள்கள்! பேரண்டத்தில் (Universe) பல கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களும் (Galaxies) அவற்றில் எண்ணற்ற நட்சத்திரங்களும் (Stars) அந்த நட்சத்திரங்களின் ஈர்பற்றலில் பல கோடிக்கணக்கான கோள்களும் (Planets) இருக்கின்றன. பேரண்டத்தில் உள்ள கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களுள் ஒன்றுதான் நமது பூமி மற்றும் சூரியன் இருக்கும் பால்வெளி நட்சத்திர மண்டலம் (Milkyway Galaxies) ஆகும். இந்த பால்வெளி நட்சத்திர மண்டலத்தில் நமது சூரியக் குடும்பமும் இதைப் போன்ற இன்னும் ஏராளமான நட்சத்திரங்களும் இருக்கின்றன. நமது சூரியக்குடும்பத்தில் நாம் வசிக்கும் பூமியும் இன்னும் மெர்குரி, வீனஸ், மார்ஸ், ஜுபிடர், நெப்டியூன், புளுட்டோ, சனி போன்ற கோள்களும் அவற்றிற்கு பல சந்திரன்களும் இருக்கின்றன. இந்த சந்திரன்கள் கோள்களின் ஈர்ப்பாற்றலால் […]

குர்ஆன் கூறும் கருவியல்

குர்ஆன் கூறும் கருவியல் – மனிதப் படைப்பின் அற்புதம் நிச்சயமாக நாம் மனிதனை களி மண்ணிலுள்ள சத்தினால் படைத்தோம்: பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்: பின்னர் அந்த இந்திரியத்துளியை அலக் என்ற (ஒட்டிக் கொண்டு தொங்கும்) நிலையில் ஆக்கினோம்: பின்னர் அந்த அலக்கை ஒரு (சவைக்கப்பட்ட மாமிசம் போன்ற ஒரு) தசைப் பிண்டமாக ஆக்கினோம்: பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாக ஆக்கினோம்: பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்: பின்னர் நாம் அதை வேறு ஒரு படைப்பாக (மனிதனாக) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவனும் படைப்பாளர்களுக் கெல்லாம் மிக அழகான படைப்பாளன் .    (அல்-குர்ஆன் […]

வானம்

வானம் வானம் அல்லது ககனம் பூமியின் மேற்புறத்திலிருந்து குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் விரிந்திருக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய பரந்த வெளியைக் குறிக்கும். பொதுவாக இது வளிமண்டலத்தையும்,அதற்கு அப்பாலுள்ள விண்வெளியையும் சேர்த்து உள்ளடக்கியதாகும். வானியலில் வானமானது வானக்கோளம் எனவும் அழைக்கப்படும். இந்த வெளியிலே சூரியன், நிலா, விண்மீன்கள் போன்றவற்றின் அசைவுகளை நாம் அவதானிக்கிறோம். முகில், வானவில், வடமுனை ஒளி என்பன வானத்தில் காணக்கூடிய இயற்கையான சில தோற்றப்பாடுகளாகும். பொழிவு (வானிலையியல்), மின்னல் என்பனவும் வானத்துடன் தொடர்புடைய தோற்றங்களே.  பகலில், முகில்களற்ற வானம் இருக்கையில் சூரியன் தெரியும். அத்துடன் முகில்களற்ற வானம் நீல நிறமாக இருக்கும். இதற்குக் காரணம் வளிமண்டலத்தில் இருக்கும் வளிமமானது, சூரிய ஒளியிலிருந்து வரும் வெவ்வேறு நிறங்களில், நீல நிற ஒளியை அதிகமாகச் சிதறடிக்கின்றது. நீலநிறத்தை விடவும் அலைநீளம் குறைவான ஊதா, கருநீலம் ஆகிய நிறங்கள் அதிகமாகச் சிதறடிக்கப்பட்டாலும், நமது கண்களில், குறிப்பிட்ட நிறக் கதிர்களைப் பெற்றுக் கொள்ளுவதற்கான உணர்திறன் குறைவாக இருப்பதனால் நீல நிறமே, பார்வையில் ஆதிக்கம் செலுத்துகின்றது. அந்திநேரத்தில், அல்லது […]

பாவத்தை கழுவும் தொழுகை

பாவத்தை கழுவும் தொழுகை ‘உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உடலிலுள்ள) அழுக்குகளில் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?’ என்று கேட்டார்கள். ‘அவரது அழுக்குகளில் எதையும் தங்க விடாது’ என்று மக்கள் பதிலளித்தார்கள். ‘இது தான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும் இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185) உடலை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தும் ஆற்றுக்கு தொழுகையை நபி (ஸல்) அவர்கள் உதாரணம் காட்டியுள்ளார்கள். பாவப் பரிகாரத்திற்கு உடலை வருத்த வேண்டும் நீண்ட தூரம் பயணம் […]

வெற்றி பெற்றோர் யார்?

வெற்றி பெற்றோர் யார்? இந்த உலகத்தில் வாழும் மக்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை மறுத்தும் அவனுக்கு இணை வைத்தும் வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் சொற்ப நபர்களே அவனை நம்பிக்கை கொண்டு அவனது தூதருக்குக் கீழ்ப் படிந்து வருகிறார்கள். இந்தச் சொற்பக் கூட்டத்தைச் சார்ந்தவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியுள்ளான். அவனுக்கே புகழனைத்தும்! இஸ்லாத்தின் சட்டங்களை மக்களுக்குக் கற்றுத் தந்த நபி (ஸல்) அவர்கள், சில காரியங்களைத் தங்கள் வாழ்நாளில் செய்தவர்களைக் குறித்து வெற்றியாளர்கள் என்று கூறியுள்ளார்கள். மறுமையில் வெற்றி பெறுவதற்கு அந்த முக்கியமான காரியங்களை நபிமொழிகளிலிருந்து தொகுத்துத் தருகிறோம். அக்காரியத்தைச் செயல் படுத்தி நாமும் வெற்றி பெற்றோராக மாறுவோம். கடமையான காரியங்களைச் சரியாக நிறைவேற்றுவோர் நஜ்த் என்ற ஊரைச் […]

பொறுப்புள்ள பெற்றோர்களாக ஆகுவோம்!

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! இஸ்லாம் நம் மீது ஏராளமான பொறுப்புகளை சுமத்தியிருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஓர் ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். ஒரு பெண், தன் கணவனின் இல்லத்துக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் […]

கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் படுகொலைகள்

கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் படுகொலைகள் கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் படுகொலைகள் (Christchurch mosque shootings) 2019, மார்ச் 15 வெள்ளிக்கிழமை அன்று நியூசிலாந்து, கிறைஸ்ட்சேர்ச் நகரில் பிற்பகல் 1:40 மணியளவில் அல் நூர் பள்ளிவாசல், லின்வுட் இசுலாமிய மையம் ஆகியவற்றில் இடம்பெற்றது. வெள்ளி தொழுகையின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர், 50 பேர் காயமடைந்தனர்.இந்நிகழ்வு தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டார். இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என நியூசிலாந்து பிரதமர் யெசிந்தா அடர்ன் தெரிவித்தார். இப்படுகொலைகளை நிகழ்த்தியவர் பிரெண்டன் டராண்ட் என்ற ஆத்திரேலியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர் தனது தாக்குதலை முகநூலில் நேரலையாகப் பதிவு செய்திருக்கிறார். 1943 ஆம் ஆண்டில், நியூசிலாந்து பெதர்ஸ்டன் போர்க்குற்றவாளிகள் முகாம் கலவரங்களில் 49 பேர் […]

பலியான ரசிகர்! பதறாத தலைவர்!

பலியான ரசிகர்! பதறாத தலைவர்! சினிமா அரசியல் ஆன்மீகம் என அனைத்து துறைகளிலும் பிரபலமானவர்களுக்கு ரசிகர்கள் இருப்பார்கள். ரசிகர்கள் என்றால், தன் தலைவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அது எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் அவருக்குப் பின்னால் கொடி தூக்கி தோள் கொடுப்பவர்களே உண்மையான ரசிகர்கள் என்று அழைக்கப் படுவார்கள். என் தலைவனுக்காக உயிரையே கொடுப்பேன் என்று வாயளவில் சொல்லும் ரசிகர்கள் சிலர் இருந்தாலும் தன் தலைவனுக்காக எது குறித்தும் சிந்திக்காமல் உண்மையிலேயே உயிரைக் கொடுக்கும் முட்டாள் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சில சம்பவங்கள் விபத்தாக அமைந்து அதில் ரசிகர்கள் உயிரை விடும் சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது. சமீபத்தில் தன் தலைவரின் கட் அவுட்டுக்கு […]

வெளிநாட்டு வேலை வேதனையா? விடியலா?

வெளிநாட்டு வேலை வேதனையா? விடியலா? இரவு குளிரில் நடுங்கும் நாய் நினைக்குமாம் கண்டிப்பாக விடிந்தவுடன் ஒரு போர்வை வாங்கிக்கொள்ள வேண்டும் என்று, மறுநாள் காலையில் வெயிலை பார்த்ததும் போர்வை வாங்க வேண்டும் என்பதையே மறந்துவிடுமாம் அன்று இரவு மீண்டும் நினைக்குமாம் நாளைக்கு கண்டிப்பாக போர்வை வாங்க வேண்டும் என்று இப்படியே ஒவ்வொரு இரவும் நினைக்குமாம் அந்த நாய், கிராமங்களில் இப்படியரு கதை சொல்வார்கள் அது போன்றது தான் வெளிநாட்டு வாசிகளின் வாழ்க்கை! குடும்பத்தை, குழந்தைகளை விட்டு கண்ணீருடன் விமானம் ஏறுபவர்கள் இதுதான் என்னுடைய இறுதி பயணம் அடுத்த முயற்சி ஊரிலே செட்டில் ஆவதுதான் என்று நினைப்பவர்கள் வெளிநாடு வந்ததும் அதற்கான முயற்சியை எடுக்காமல் வேறு பல […]

இளம்வயதினரை அடிமையாக்கும் டிக் டாக்: அதிர்ச்சி ரிப்போர்ட்

இளம்வயதினரை அடிமையாக்கும் டிக் டாக்: அதிர்ச்சி ரிப்போர்ட் இன்றைய நவீன காலகட்டத்தில் அறிவியலின் வளர்ச்சி நாளுக்கு நாள் தாறுமாறாக வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. ஏராளமான கருவிகள், உபகரணங்கள் நாளுக்கு நாள் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்ற அறிவியல் கருவிகளினால், செயலிகளினால் மக்களுக்கு அதிகமான நன்மைகள் கிடைப்பதை விட அதிகப்படியான தீமைகளையே நவீன உபகரணங்கள் வழிகாட்டுவதைப் பார்க்கின்றோம். அதிலும் குறிப்பாக சமீப காலமாக இளம் வயதினரிடத்தில் காட்டுத் தீயாய் பரவிக் கொண்டிருக்கின்ற செயலி டிக் டாக். இந்த செயலி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அத்துணை நபர்களையும் தனக்கு கீழ் அடிமையாக்கி விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்தளவிற்கு […]

செல்போன் மூலம் ஏற்படும் 35 சதவிகித சாலை விபத்துகள்.

செல்போன் மூலம் ஏற்படும் 35 சதவிகித சாலை விபத்துகள் இந்தியாவில் சாலை விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தமிழகத்தில் தினசரி வாகன விபத்துக்களில் பலர் உயிரிழந்து வருகின்றார்கள். விபத்தில் காயமடைவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. பொதுவாக சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது மது,போதை. வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகள், மதுபோதையில் இருப்பதன் காரணமாக அவர்களின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளாகின்றது என்பதை பல ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. இரு சக்கர வாகனம் மட்டுமல்லாது, நான்கு சக்கர வாகனங்களும் அதிகமான விபத்தில் சிக்குவதற்கு மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதே காரணமாக கூறப்படுகின்றது. வாகன விபத்துக்கள் ஏற்படுவதற்கு […]

பீரோவுக்குள் குட்டிச் சாத்தான்: அதிர வைத்த மோசடி!

பீரோவுக்குள் குட்டிச் சாத்தான்: அதிர வைத்த மோசடி! நாடு முன்னேற முன்னேற விஞ்ஞாமும் வளர்ச்சியடைந்து வருகின்றது. அதற்கு சரிசம விகிதத்தில் மோசடிகளும் புதிது புதிதாய் தோன்றி அதில் மக்கள் ஏமாந்து வருகின்றார்கள். மக்கள் எத்தனையோ மோசடிகளில் ஏமாந்து போயிருந்தாலும் அவ்வப்போது புதியது புதியதாக மோசடிகள் நடக்கும் போதும் அதையும் உண்மை என நம்பி மக்கள் குப்புற விழுந்து ஏமாந்து போகும் காட்சிகள் பல புறங்களிலும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் கடந்த வாரம் மதுரை வட்டாரத்தை கலக்கிய பீரோவுக்குள் குட்டிச்சாத்தான் மோசடி விவகாரம் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு நவீனமான காலத்தில் இன்னமும் மக்கள் மந்திரவாதிகளிடம் ஏமாந்து தங்களின் பணத்தையும் பொருளாதாரத்தையும் பறி […]

பாலியல் விவகாரங்களில் சட்டம் கடுமையாக வேண்டும்

பாலியல் விவகாரங்களில் சட்டம் கடுமையாக வேண்டும் தற்போது உலகம் சந்தித்துவரக்கூடிய மிகப்பெரிய பிரச்சினை,எய்ட்ஸ் என்னும் பாலியல் நோய்ப் பரவல் ஆகும். எய்ட்ஸ் நோயாளிகள்அதிகம் வாழும் நாடுகளில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தில் இருக்கின்றது. அதற்கு அடுத்தஇடத்தை நைஜீரியா பிடித்துள்ளது.உலக அளவில் எய்ட்ஸ்நோயாளிகள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. எய்ட்ஸ் நோயாளிகள் வாழும் நூறு நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைப்பார்த்த ஆய்வாளர்களுக்கு ஒருஆச்சரியம் காத்திருந்தது.எய்ட்ஸ் நோய் பாதித்த மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் இஸ்லாமிய சட்டத்தை சரியாக கடைபிடிக்க்கும் நாடுகள் முதல் நூறு இடங்களில் இல்லை. இஸ்லாமிய சட்டத்தைமுறையாக கடைபிடிக்கும் நாடுகளில் விபச்சாரத்தின் விகிதம் குறைந்து போய் விடுகின்றது. விபச்சாரத்தினை கட்டுக்குள் கொண்டு […]

விருத்தசேதனம் செய்ய வலியுறுத்திய பெண் எம்.பி.

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள் விருத்தசேதனம் என்ற சுன்னத் அனைத்து ஆண்களும் அவசியம் செய்ய வேண்டும் என்று பெண் எம்.பி ஒருவர் நாடாளுமன்றத்தில் கூறியிருப்பது உலகையே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. அதுமட்டுமின்றி முதற்கட்டமாக இந்த அவையில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்று அந்தப் பெண் உறுப்பினர் பேசியுள்ளது உலக அளவில் பிரபலமாகியுள்ளது. இப்ராஹிம் நபியை பின்பற்றச் சொல்லி முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் கட்டளையிடுகின்றான். இப்ராஹிம் நபியவர்களின் 5 வழிமுறைகளில் ஒன்றுதான் இந்த விருத்தசேதனம் என்னும் சுன்னத் ஆகும். இஸ்லாம் விருத்தசேதனம் செய்வதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வழிகாட்டியதையே தற்போது உள்ள அறிவியல் உலகம் உண்மைப்படுத்தி வருகின்றது. விருத்தசேதனம் […]

போதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்

போதுமென்ற மனமே பொன் செய்யும் மனம் இன்று எங்கும் பணம், எதிலும் பணம் என்று பணப் பேராசையும் பணத்திற்காகக் கொலை, கொள்ளை போன்றவை பெருகி வருவதையும் நாம் காண்கிறோம். இதற்குக் காரணம், இருப்பதை வைத்து வாழ்க்கைத் தேவையை பூர்த்தி செய்யாமல், அடுத்தவரின் சொத்துக்கோ, பணத்துக்கோ ஆசைப்படும் எண்ணம் தான்.பெரும் பணக்காரர்கள், தங்களிடம் உள்ள சொத்து போதாதென்று மக்களை ஏமாற்று வேலைகள் பலவற்றால் கொள்ளையடிகிறார்கள். இவை நமது நாட்டில் அன்றாடச் செய்திகளாகி விட்டன. இது போன்ற சமூகத் தீமைகளைத் தடுப்பதற்காகவும் இன்னும் பிற நன்மைகளுக்காவும் நபி (ஸல்) அவர்கள் ஓர் உபதேசத்தை உதாரணமாகக் கூறுகிறார்கள். நபியவர்கள் ஒரு நாள் மிம்பரில் அமர்ந்திருந்தார்கள். நாங்கள் அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். […]

செல்வம் ஒரு சோதனையே

செல்வம் ஒரு சோதனையே உலகில் வாழும் எந்த மனிதனிடமும் பணத்தாசை இல்லாமல் இருக்காது. இதனால் தான் பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்று கூறுவார்கள். ஆனால் இந்த ஆசையை ஒரு சோதனையாக அல்லாஹ் அமைத்துள்ளான். பெண்கள், ஆண் மக்கள், திரட்டப் பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய மன விருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது. (அல்குர்ஆன் 3:14) உங்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் சோதனை என்பதையும், அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 8:28) […]

கடன் தள்ளுபடி

கடன் தள்ளுபடி மனிதனை இவ்வுலகில் படைத்த அல்லாஹ், அவர்களை செல்வந்தர்களாகவும் ஏழைகளாகவும், நடுத்தர வர்க்கத்தினராகவும் படைத்துள்ளான். இவ்வாறு படைத்த இறைவன் செல்வந்தர்களாக இருப்பவர்கள், ஏழைகளாக இருப்பவர்களுக்கு உதவுமாறும் கட்டளையிட்டுள்ளான். ‘ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன்ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான். அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டுவிடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்’ என்று […]

ஈமானின் சுவை

ஈமானின் சுவை இன்றைய காலத்தில் வாழும் முஸ்லிம்களில் அதிகமானோர் தங்களை அறியாமலேயே தவறுகள் செய்வதற்குக் காரணம், அவர்களுக்கு ஈமான் என்றால் என்ன? என்பது தெரியாதது தான்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈமானைப் பற்றி அழகிய முறையில் சொல்லிக் காட்டுகிறார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் இறை நம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை:) 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்ற அனைத்தையும் விட அதிக நேசத்திற்குரியோராவது. 2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது. 3. இறை மறுப்பிலிருந்து அல்லாஹ் தம்மை விடுவித்த பின், அந்த இறை மறுப்பிற்கே திரும்பிச் செல்வதை ஒருவர் நெருப்பில் வீசப்படுவதைப் போன்று வெறுப்பது. அறிவிப்பவர்: […]

படைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்

படைப்புகளைப் பார்! படைத்தவனை அறிந்து கொள்! பல துறைகளில் வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தி விட்ட மனிதன் மன நிம்மதிக்காக ஓர் தெளிவான வாழ்வு நெறியைத் தேடி அன்று முதல் இன்று வரை அலைந்து கொண்டே இருக்கிறான். இந்த வாழ்வு நெறி தேடலில் சிலருக்கு இஸ்லாமிய மார்க்க போதனைகள் கிடைக்கப் பெற்று, அதனைத் தன்னுடைய வாழ்வு நெறியாக ஏற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர்கள், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணங்களைப் பார்க்கும் போது, பரம்பரை முஸ்லிம்களாகிய நமக்கு அப்பொழுது தான் இஸ்லாத்தின் அருமையும் பெருமையும் புரிகிறது. அது மட்டுமில்லாமல், அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கான காரணங்கள் நமக்குப் பல படிப்பினைகளைத் தருகின்றன. சொகுசாக வாழ […]

இறுதி நபித்துவம்

இறுதி நபித்துவம் ‘எனக்கும், எனக்கு முன் சென்ற நபிமார்களுக்கும் உதாரணம் அழகாக அலங்கரித்து ஒரு வீட்டைக் கட்டி விட்டு ஒரு மூலையில் செங்கல் அளவிற்கு இடத்தை விட்ட ஒரு மனிதனைப் போன்று. மக்கள் அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்து ஆச்சரியம் அடைந்து ‘அந்த செங்கல் பதிக்கப்பட்டு இருக்கக்கூடாதா?’ என்று கேட்கலானார்கள். நான் தான் அந்த செங்கல்! நானே நபிமார்களின் முத்திரையானவன்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (3535) தனக்கு பின்னால் வஹியோ தூதரோ வர வேண்டியதில்லை என்பதை முன்னறிவிப்புச் செய்யும் விதமாக, வீட்டை தூதுத்துவத்துக்கும் குறையை முழுமைப்படுத்துகின்ற செங்கலை தனக்கும் உதாரணமாகக் கூறியுள்ளார்கள். இன்னும் நபிமார்களின் […]

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் படைத்து அவற்றிற்குத் தேவையான வசதிகளையும் அல்லாஹ் ஏற்படுத்தித் தந்துள்ளான். இதன் அடிப்படையில் அவன் மற்ற உயிரியினங்களைக் காட்டிலும் மனிதனுக்கு ஏராளமான பாக்கியங் களை கூடுதலாக வழங்கியுள்ளான். அவன் வழங்கிய அந்தப் பாக்கியங்களில் ஒன்றான செல்வம் மக்களால் அதிகம் நேசிக்கப்படுகிறது. பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழிக்கேற்ப, நீதியைக் காக்க வேண்டிய நீதித் துறையும், நாட்டில் சட்டம் ஒழுங்கைச் சீர் செய்ய வேண்டிய காவல் துறையும் தாங்கள் வீற்றிருக்கும் உயர்ந்த பணியின் மகத்துவத்தை மறந்து அற்ப பணத்திற்காக விலை போய் விடுகிறார்கள். 50 ரூபாய் மதிப்புள்ள ஒரு வெள்ளி மோதிரத்திற்காக ஒருவன் மூன்று நபர்களைக் கொலை […]

முதலிடம்

முதலிடம் மண்ணறையிலிருந்து எழுப்பப்படுவர்களில் முதலாமவர் ‘முதன் முதலில் மண்ணறை பிளந்து (உயிர்த்து) எழுபவன் நானே!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். – அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 4575 மனிதர்களின் தலைவர் ‘மறுமை நாளில் ஆதமின் மக்கள் அனைவருக்கும் தலைவன் நானே!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். – அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 4575 சொர்க்கத்தின் கதவை முதன் முதலில் தட்டுபவர் ‘நானே மறுமை நாளில் இறைத் தூதர்களிலேயே அதிமானவர்களால் பின்பற்றப்படுபவன் ஆவேன். நானே சொர்க்கத்தின் வாசலை முதன் முதலில் தட்டுபவன் ஆவேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். – அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 331 ‘நான் மறுமை […]

நன்றி உணர்வே நல்வாழ்வின் அடிப்படை

நன்றி உணர்வே நல்வாழ்வின் அடிப்படை இன்று ஒரு தனி மனித அளவில் ஏற்படும் பிரச்சனையாக இருந்தாலும், அல்லது குடும்ப அளவிலான பிரச்சனையாக இருந்தாலும் அல்லது ஒரு நாட்டளவிலான பிரச்சனையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குமே அடிப்படையாக அமைவது ஒரு வகையான பொறாமை உணர்வு தான்.ஒரு தனி மனிதன் தன்னை விட மேலுள்ளவனையும், ஒரு குடும்பம் தனக்கு மேலுள்ள குடும்பத்தையும், ஒரு நாடு தனக்கு மேலுள்ள நாட்டையும் பார்ப்பது தான் பெரும்பாலான பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளதைப் பார்க்கிறோம். என்றைக்கு மேற்கூறப்பட்டவர்கள் தமக்குள்ளதை மட்டும் கொண்டு தன்னிறைவு அடைவது மட்டுமில்லாமல், தனக்குக் கீழுள்ளவரைப் பார்த்து ஆறுதல் அடைகின்றாரோ அன்றைக்கு அவர்களது பிரச்சனைகள் தீர்ந்து அவரிடம் குடிபுகுந்த பொறாமை குடிபெயர்ந்து அங்கு அமைதி […]

முதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்

முதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் மற்ற உயிரினங்களை விட மனிதனுக்கு இறைவன் அறிவை அதிகமாகக் கொடுத்திருந்தாலும் அவனை நல்வழிப்படுத்த பிறரின் வாயிலாக உபதேசங்களும் விதிமுறைகளும் அவனுக்குத் தேவைப்படுகின்றது.எனவே தான் எல்லா நாடுகளிலும் குடிமக்கள் பேண வேண்டிய ஒழுக்கங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை அவ்வப்போது அந்நாடு அவர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. மனிதனுடைய அறிவை நம்பி அந்நாடு அவற்றை வலியுறுத்தாமல் விட்டு விட்டால் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விடும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை. அவனுடைய அறிவு நல்லதையும் தீயதையும் தனித்தனியே பிரித்துக் காட்டினாலும் அவன் தன் மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு, தவறான வழியில் செல்பவனாக இருக்கிறான். இவற்றைக் கவனத்தில் கொண்டு தான் இஸ்லாமிய […]

மார்க்க அறிஞருக்கு ஓர் உதாரணம்

மார்க்க அறிஞருக்கு ஓர் உதாரணம் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் என்னை நேர்வழியுடனும் மார்க்க அறிவுடனும் அனுப்பியதற்க்கு உதாரணம் ஒரு பெருமழையைப் போல அது பூமியில் பெய்கிறது அந்த மழையால் நீரை உறுஞ்சி சேகரித்து வைத்து அதிலிருந்து புற்பூண்டுகள் முளைக்கக்கூடிய தரைகளும் உண்டு. அந்த நிலங்களில் நீரை தேக்கி வைத்து மக்கள் அதனை பருகியும் நீர்பாய்ச்சி விவசாயம் செய்தும் பயன்பெறக்கூடிய நிலங்களும் உண்டு. அல்லாஹ்வின் மார்கத்தில் விளக்கம் பெற்று அல்லாஹ் என்னுடன் அனுப்பிய நேர்வழி அவருக்கு பயன்பெற்று மார்க்க அறிவை கற்றுக் கொண்டும் பிறருக்கும் கற்றுக் கொடுக்கிறவர் இவ்வாறு இருப்பார் ஆனால் அந்த மழைத்துளிகள் வேறு வகையான இடங்களில் பொழிகிறது.அவைகள் தண்ணீரை தேக்கி வைக்காத புற்பூண்டுகள் […]

பிள்ளைகளின் கடமை

பிள்ளைகளின் கடமை பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வது கட்டாயக் கடமையாகும் ‘என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!’ என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ| எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு! அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! ‘சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!’ என்று கேட்பீராக! (அல் குர்ஆள் 17:23,24) மனிதனுக்கு அவனது பெற் றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் […]

தவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்….

தவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்…. ‘ஆணவம், மோசடி, கடன் ஆகிய மூன்றும் நீங்கிய நிலையில் ஒருவரின் உயிர் பிரிந்தால் அவர் சொர்க்கத்தில் இருப்பார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி), நூல்கள்: அஹ்மத் (21356), திர்மிதீ (1497) மனிதர்களிடம் நல்ல காரியங்கள் இருக்க வேண்டும் என்று கட்டளையிடும் இஸ்லாம் பல விஷயங்கள் இருக்கக் கூடாது என்று கட்டளையிடுகிறது. அதில் முக்கியமாக மூன்று விஷயங்கள் இருக்கக் கூடாது. அவை இருந்தால் அவர் சொர்க்கம் புக முடியாமல் போய் விடும். அதே நேரத்தில் இந்த மூன்றும் இல்லாவிட்டால் அவர் கண்டிப்பாக சொர்க்கம் போவார். அவை: 1. தற்பெருமை,      2. மோசடி, 3. […]

Next Page »