Tamil Bayan Points

அசுர வளர்ச்சியில் இஸ்லாம்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on April 18, 2019 by

அசுர வளர்ச்சியில் இஸ்லாம்: அதிர்ச்சியடையும் அமெரிக்கா

அமெரிக்காவின் பிரபல ஆராய்ச்சி நிறுவனமான பி யு ரிசர்ச் செண்டர் (Pew Research Center)  பல ஆராய்ச்சி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்த அமைப்பு ஓர் நடுநிலையான ஆய்வு மையம் என அறிமுகப்படுத்தி கொள்கிறது. இந்த அமைப்பின் சார்பாக நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சனைக்கு மக்கள் கருத்துக்கணிப்பு நடத்துதல், மக்கள் தொகை ஆய்வு, பகுப்பாய்வு மற்றும் தரவு சார்ந்த சமூக அறிவியல் ஆராய்ச்சி (Data Driven Social Research ) ஆகிய துறையில் அதற்குரிய வல்லுனர்களை கொண்டு ஆராய்ச்சி செய்யும் அமைப்பாகும்.

இந்த அமைப்பு சென்ற வாரம் அமெரிக்காவில் முஸ்லிம்களின் மக்கள் தொகை பற்றிய ஆய்வை மேற்கொண்டது. அமெரிக்காவில் முஸ்லிம்களின் மக்கள் தொகை தொடர்ச்சியாக வளர்ச்சி அடைந்து வருகிறது என ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு வெளிவந்தவுடன் அனைத்து தரப்பிலும் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இந்த அமைப்பின் ஆய்வின்படி தற்போது அமெரிக்காவில் வாழும் 3.45 மில்லியன் ( 34.5 லட்சம்) முஸ்லிம்கள் சட்டப்பூர்வமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட அதிகமாகும். கடந்த ஆண்டு 33 லட்சமாக இருந்தது என குறிப்பிட்டுள்ளது.

அதாவது ஓர் ஆண்டில் மட்டும் 1.5 (ஒன்றரை லட்சம் )முஸ்லிம்கள் அதிகமாகியுள்ளனர். அதே போல் ஆண்டு தோறும் சராசரியாக 1 லட்சம் பேர் அதிகரித்த வண்ணம் உள்ளனர். அமெரிக்க- இஸ்லாமிய உறவுகளின் கவுன்சில் Council on American-Islamic Relations (CAIR) இந்த ஆய்வை பற்றி கூறும் பொது, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 80 லட்சம் என தெரிவித்துள்ளது. Council on American-Islamic Relations (CAIR) (அமைப்பின் கூற்றின்படி அமெரிக்காவில் யூதர்களை பின்னுக்கு தள்ளி கிறிஸ்துவ மதத்தினருக்கு அடுத்த இடத்தில் 2ம் இடத்தில் முஸ்லிம்கள் உள்ளனர்.

பள்ளிவாசல்கள் அதிகரிப்பு

இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு சான்றாக இருப்பது அங்கு பெருகும் பள்ளிவாசல்கள். ஆயிரக் கணக்கான பள்ளிவாசல்கள் புதிதாக உருவாகியுள்ளது. தற்போது நூற்றுக் கணக்கான பள்ளிவாசல்களின் கட்டுமானம் நடைபெற்றுவருகிறது. அதே போல் கிறிஸ்துவர்கள் அதிக அளவில் இஸ்லாத்தை ஏற்பதால் அங்குள்ள கிறிஸ்துவ ஆலயங்கள் அப்பகுதி மக்களால் பள்ளிவாசல்களாக மாற்றம் பெற்று வருகின்றன. தற்போது 3200 பள்ளிவாசல்கள் உள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2200 க்கும் மேற்பட்ட பள்ளிகள் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற உலக வர்த்தக மையம் இரட்டை கோபுர தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வின் படி அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம், எங்கெல்லாம் இஸ்லாத்திற்கு எதிரான அடக்குமுறைகளும் சூழ்ச்சிகளும் கட்டவிழ்த்து படுகின்றதோ அங்கு இஸ்லாம் வேகமாக வளரும் இது தான் உலகம் கண்ட வரலாறு, தற்போதைய அதிபர் ட்ரம்பின் இஸ்லாத்திற்கு எதிரான அடக்குமுறைகளால் இன்னும் வீரியமாக இஸ்லாம் வளரும். இறைவன் நாடினால் அமெரிக்கர்கள் மேலை நாட்டு கலாச்சாரத்தை தூக்கி எறிந்து விட்டு ஏக இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ முன்வருவார்கள். விரைவில் அமெரிக்க இஸ்லாமிய நாடாக மாறும் இதில் எந்த ஆச்சரியமுமில்லை