Tamil Bayan Points

134. இஸ்திஹாளா தொடர் உதிரப் போக்கு இருந்தால், தொழுகை, தவாஃப், ஸயீ செய்யலாமா?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

Last Updated on July 7, 2017 by Trichy Farook

தொடர் உதிரப்போக்கு போல் நாள் கணக்கின்றி தொடர்ந்து, அதே சமயம் அதிகமாகவும் இல்லாமல் மிகக் கொஞ்சமாக தொடர்ந்து மாதவிடாய் இருப்பதை இஸ்திஹாளா (தொடர் உதிரப் போக்கு) கணக்கில் எடுத்துக் கொண்டு தொழுகை, தவாஃப், ஸயீ போன்ற அமல்களை செய்யலாமா?

பதில்

மூன்று அல்லது ஏழு என ஒரு பெண்ணுக்கு வழக்கமாக வரக்கூடிய நாட்களைத் தாண்டி அதிகமான நாட்கள் உதிரப் போக்கு ஏற்பட்டால் அது இஸ்திஹாளா தான். இரத்தம் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் எனும் பெண்மணி நபி (ஸல்) அவர்கüடம் (வந்து), “நான் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) உடையவளாக இருக்கின்றேன்; (தொடர்ந்து இரத்தப் போக்கு ஏற்படுவதால்) நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை. இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும். (மாதவிடாயன்று). ஆயினும் (மாதத்தில்) வழக்கமாக உனக்கு மாதவிடாய் ஏற்படும் நாட்கள் அளவிற்குத் தொழுகையை விட்டுவிடு! பிறகு குüத்துவிட்டு (ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்து) தொழுதுகொள்!” என்றார்கள்.

நூல்: புகாரி 325