Tamil Bayan Points

மிகப்பிரம்மாண்டமான சூரியன்

பயான் குறிப்புகள்: அறிவியல் உண்மைகள்

சூரியன் என்றால் என்ன ?

இது பூமிக்கு மிக அருகிலுள்ள விண்மீன் ஆகும்.இது பிளாஸ்மா நிலையில் உள்ள மிகவும் வெப்பமான வாயுக்களைக் கொண்டதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய கோளமாகவும் காணப்படுகிறது. நாம் சுவாசிக்கும் காற்றான ஆக்சிஜனும் பலூனில் அடைக்கப்பட்டிருக்கும் ஹீலியம் வாயுவுமே இதில் காணப்படும் முக்கிய பிரதான வாயுக்களாகும். சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலை 5,500°C க்கும் அதிகமாகும்,அது மட்டுமின்றி இதன் மத்திய பகுதியின் வெப்பநிலை 15 மில்லியன்°C க்கும் அதிகமாகும். இது அதிகளவில் ஹைட்ரஜன் (70%) மற்றும் ஹீலியத்தால் (28%) ஆக்கப்பட்டுள்ளது.

சூரியனில் இருந்து பெறப்படும் ஒளிச்சக்தி தாவரங்களின் வளர்ச்சியில் பங்களிக்கிறது. நாம் தாவரங்களில் இருந்து உணவை பெற்றுக் கொள்கிறோம். நாம் தாவரங்களின் மற்றைய பாகங்களை சமையலில் எரிப்பதற்குப் பயன்படுத்துகிறோம். ஆகவே எமது அன்றாட வாழ்க்கைக்கு சூரியன் மிக அவசியமாகும்.

சூரியன் எவ்வாறு தோன்றியது

பிரபஞ்சத்தின் தூசு எனப்படும் அடர்ந்த வாயுப் படலத்தில் இருந்து 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்பு நமது சூரிய குடும்பம் தோன்றியது. சில நூறு ஆண்டுகளுக்கு முன் நமது சூரியனே பிரபஞ்சத்தின் மையம் என கருதப்பட்ட போதும் ஹபிள் போன்ற நவீன தொலைகாட்டிகளின் புகைப்படங்கள் மூலம் தெளிவாக்கப் படுவது என்னவென்றால் பால்வெளி அண்டத்தின் மையத்தில் இருந்து அண்ணளவாக (27, 200 )ஒளிவருடங்கள் தூரத்தில் அதன் கரையிலேயே அமைந்திருக்கிறது என்பதாகும்.

சூரிய குடும்பத்தில் சூரியனுடன் ஒன்பது கிரகங்கல் காணப்பட்டாலும் அவற்றில் மிகப் பெரியதும் நடு நாயகமானதும் சூரியனே ஆகும். பால்வெளி அண்டத்தைப் போலவே சூரியனும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சாதாரண நட்சத்திரமே ஆகும்.

சூரியன் எவ்வளவு பெரியது?

சூரியனின் விட்டம் 14,00,000 கிலோ மீட்டர்களாகும். அதாவது புவியின் விட்டத்தைப் போல் 109 மடங்குகளாகும். சூரியனின் புவியின் ஈர்ப்பு சக்தி யைப் போல் 28 மடங்கு அதிகமாகும். சூரியன் அது இருக்கும் அண்டத்தின் மையத்திலிருந்து சுமார் 32,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

சூரியனின் தோற்றம்

வட்ட உருளை எனும் (Disk) ஆகவும் உருளை எனப்படும் (sphere) ஆகவும் இரு பரிமாணங்களில் ஆராயப்படும் பால்வெளி அண்டம் 75 000 ஒளி வருடங்கள் நீளமான விட்டம் உடையது. கிட்டத்தட்ட 200 பில்லியன் நட்சத்திரங்களை உள்ளடக்கிய இப் பால்வெளி அண்டம் பிரபஞ்சத்தில் உள்ள ஏனைய அண்டங்களுடன் ஒப்பிடுகையில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது. 

சூரியன் பூமியில் இருந்தான தூரம்

1.00 AU(Astronomical unit) or (1.495979 * 10 இன் வலு 8) Km

சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள தொலைவு

14 ,95 ,97 ,900 கி.மீ. ஆகும்

சூரியனை பூமியில் இருந்து நோக்கும் போது தெரியும் சராசரி கோண விட்டம்

0.53 பாகை

சூரியனின் வயது

500 கோடி ஆண்டுகள்

 சூரியன் தன்னைத் தானே சுற்ற எடுக்கும் நேரம்

25.38 நாட்கள்

சூரியனின் சுற்று வேகம்

நொடிக்கு 250 கி.மீ

 சூரியன் புவியைப் போல் மடங்கில்

13,00,000

சூரியனின் விட்டம்

(6.9599 * 10 இன் வலு 5) Km

சூரியனின் விட்டம் எத்தனை கிலோ மீட்டர் ஆகும்

14,00,000 கிலோ மீற்றர்களாகும். அதாவது புவியின் விட்டத்தைப் போல் 109 மடங்குகளாகும்

சூரியனின் நிறை

(1.989 * 10 இன் வலு 30) Kg

சூரியனின் சராசரி அடர்த்தி

1.409 g/cm3

சூரியனின் மேற் பரப்பில் தப்பு வேகம்

617.7 km/S

சூரியனின் ஓளிச்சக்தி

(3.826 * 10 இன் வலு 26) j/S

சூரியனின் மேற்பரப்பு வெப்பம்

5800 K(கெல்வின்)

சூரியனின் மைய வெப்பம்

(15 * 10 இன் வலு 6) K

சூரிய வெள்ளொளியில் உள்ள நிறங்கள்

ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு

சூரிய குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களுக்கும் கிட்டத் தட்ட எத்தனை சந்திரன்கள் உள்ளன.

140 சந்திரன்கள்

சூரியன் அது இருக்கும் அண்டத்தின் மையத்திலிருந்து சுமார் எத்தை ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது ?

32,000 ஒளி ஆண்டுகள்

சூரியனில் அடங்கியுள்ள வாயுக்களின் வீதம் வருமாறு :

Hydrogen – 73.46%

Helium – 24.85%

Oxygen – 0.77%

Carbon – 0.29%

Iron – 0.16%

Neon – 0.12%

Nitrogen – 0.09%

Silicon – 0.07%

Magnesium- 0.05%

Sulfur – 0.04%

சூரியனைச் சுற்றியுள்ள வெளிப்பகுதி மூன்று படலங்களாக பிரிக்கப் பட்டுள்ளது.

1.போட்டோ ஸ்பியர் (photosphere)

2.குரோமோ ஸ்பியர் (chromosphere)

3.கொரோனா(corona)

போட்டோ ஸ்பியர் (photosphere)

சூரியனின் கண்ணுக்குத் தெரியும் மேற்பரப்பு photosphere எனப்படுகின்றது. சூரியனை ஒரு டென்னிஸ் பந்தாக கருதினால் அதைச் சுற்றிக் காணப்படும் திசுப் பேப்பரை விட அடர்த்தி குறைந்தது இப்படை என கணிக்கப் பட்டுள்ளது. இதன் தடிப்பம் 500 Km இலும் குறைந்தது ஆகும். மேலும் இதன் வெப்பநிலை 5800 K(கெல்வின்) ஆகும். போட்டோ ஸ்பியருக்கு கீழே காணப்படும் பகுதியில் இருந்து அதிகளவு போட்டோன்கள் (ஒளிக்கதிர்கள்) வெளியான போதும் இதன் வாயுப்படை அதில் பெரும்பகுதியை தடுத்து விடுகின்றது.

மேலும் பூமியின் வளி மண்டலத்தின் அடர்த்தியுடன் ஒப்பிடுகையில் போட்டோ ஸ்பியரின் அடர்த்தி 3400 மடங்கு குறைந்தது எனவும் கூறப்படுகின்றது. வருங்காலத்தில் மிக உறுதியான உலோகத்தினால் ஆக்கப்படும் விண்கலமொன்று சூரியனின் இப்படையில் (7 * 10 இன் 4 0ஆம் வலு) Km வரை அதாவது மையத்தை நோக்கி 10 வீதம் வரை உள்ளே செல்ல முடியும் என விஞ்ஞானிகளால் கருதப்படுகின்றது.

குரோமோ ஸ்பியர் (chromosphere)

அடுத்த படலம் இதற்கு மேலே அமைந்துள்ள குரோமோ ஸ்பியர் ஆகும். இது போட்டோ ஸ்பியரை விட அடர்த்தி குறைந்தது. வெறும் கண்களால் பார்க்க முடியாத ஒளிப் படலமான இது சூரிய கிரகணத்தின் போது மறைக்கப்பட்ட சூரியனின் எல்லை வட்டத்தில் மிகுந்த பிரகாசமாக நாவல் நிற கோட்டை அடுத்து தென்படும். நாவல் என்பது சூரிய ஒளியிலுள்ள சிவப்பு,நீலம்,வயலெட் ஆகியவற்றின் கலவை ஆகும். குரோமோ ஸ்பியர் ஆனது அதன் நிற மாலை காரணமாக வானியலாளர்களால் விரும்பி ஆராயப் படுகின்றமை குறிப்பிடத் தக்கது. நாம் சுவாசிக்கும் வாயுவை விட குரோமோ ஸ்பியர் (10 இன் வலு 8) மடங்கு அடர்த்தி குறைவானது.

கொரோனா(corona)

இறுதியாக கொரோனா(corona) பற்றி நோக்குவோம். சூரியனின் மையத்தில் இருந்து மிகப்பெரிய பரப்பளவுடைய குரோமோ ஸ்பியருக்கு மேலாகவும் உள்ளேயிருந்து படர்ந்துள்ள பகுதி கொரோனா படலம் எனப்படுகின்றது.கிரேக்க நாகரிக மக்களால் கிரவுன் என அழைக்கப்பட்ட ஓளி அலைகளை உள்ளடக்கியுள்ள இப்பகுதி சூரியனில் இருந்து பூமிக்கான தூரத்தின் 10 வீதத்தை உடையது என்பதுடன் 20 சூரிய விட்ட ஆரையைக் கொண்டது.

மையத்தில் இருந்து புறப்படும் கொரோனோ இன் ஒளிக்கதிர்களின் சராசரி வெப்ப நிலை 1 மில்லியன் கெல்வின் அதாவது போட்டோ ஸ்பியரை விட பல நூறு மடங்கு அதிகமானது. அதிகளவான இந்த வித்தியாசம் பல விஞ்ஞானிகளை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இது பற்றி மேலும் ஆராய்வதற்காக நாசா விண்வெளி ஆய்வு மையம் SOHO எனப்படும் செய்மதியை ஏவியுள்ளமை குறிப்பிடத் தக்கது. மேலும் இச்செய்மதி சூரியனின் வெளிப்படலமான போட்டோ ஸ்பியர் பற்றி தீவிரமாக ஆராய்ந்து பல தகவல்களை வழங்கி வருகின்றது.

சூரியனில் செயற்பாடு

சூரியனில் எவ்வகையான செயற்பாடு நிகழ்கின்றது என்பது குறித்து இப்போது நோக்குவோம். சூரியனில் நிகழும் முக்கிய கருத்தாக்கமானது ஐதரசனின் உட்கரு பிளவுற்று ஹீலியம் அணுக்களாக மாறுவதே ஆகும். எனினும் மேலும் சில தாக்கங்களும் நிகழ்கின்றன என விஞ்ஞானிகள் கருதக் காரணம் சூரியனின் மையப் பகுதியிலிருந்து வெளியாகும் சிறியளவான நியூட்ரினோக்களே ஆகும். சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் சேர்ன் நகரில் மேற் கொள்ளப்பட்ட கடவுள் துணிக்கை குறித்த ஆராய்ச்சியின் போது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் கண்டு பிடிப்பாக ஓளியை விட நியூட்ரினோக்கள் வேகம் கூடியவை என அறிவிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது…

 Source :https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D