Tamil Bayan Points

Category: நாஸிக் – மன்ஸூக்

a110

05) நாஸிக் எத்தனை வகைகள்?

நாஸிக் எத்தனை வகைகளில் இருக்கும்? மாற்றப்பட்ட முந்தைய சட்டத்திற்கு ‘‘மன்ஸூக்” என்றும் முந்தைய சட்டத்திற்கு மாற்றாக தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் ‘‘நாஸிக்” என்றும் குறிப்பிடப்படும் என்பதை முன்னர் கண்டோம். இந்த ‘‘நாஸிக்” பின்வரும் வகைகளில் இருக்கும். குர்ஆனின் வசனத்தை குர்ஆன் வசனமே மாற்றுதல் திருமறைக்குர்ஆனில் ஒரு வசனத்தில் கூறப்பட்ட சட்டத்தை மற்றொரு திருக்குர்ஆன் வசனம் மாற்றிவிடும். இதற்கு உதாரணமாக 8:65 வசனத்தில் கூறப்பட்ட சட்டத்தை 8:66 வது வசனம் மாற்றிவிட்டதைக் கூறலாம். இது பற்றி நாம் […]

04) எவ்வாறு முடிவு செய்வது?

சட்டம் மாற்றப்பட்டுவிட்டது என்பதை எவ்வாறு முடிவு செய்வது? ஒரு சட்டம் மாற்றப்பட்டுவிட்டது என்பதைப் பின்வரும் அடிப்படைகளின் அடிப்படையில் நாம் முடிவு செய்யலாம். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர்களின் நேரடி வாசகத்திலிருந்து அறிந்து கொள்ளலாம் முத்ஆ திருமணம் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறிய வாசகத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “மக்களே! நான் “அல்முத்ஆ” (தவணை முறைத்) திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு அனுமதியளித்திருந்தேன். (இப்போது) அல்லாஹ் அத்திருமணத்திற்கு மறுமை நாள்வரைத் தடை விதித்துவிட்டான். […]

03) மாற்றம் அடையாத அடிப்படைகள்

மாற்றம் அடையாத அடிப்படைகள் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் எடுத்துரைத்த சில அடிப்படையான அம்சங்களில் மாற்றம் என்பது ஒரு போதும் வராது. அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்திக் கூறலாம். வரலாற்றுத் தகவல்கள். வஹியின் மூலம் உறுதி செய்யப்பட்ட வரலாற்றுத் தகவல்கள் மற்றும் செய்திகளில் மாற்றம் என்பது ஏற்படாது. ஒரு நிகழ்ச்சி 2002ல் நடந்தது எனக் கூறி விட்டு, 1967ல் தான் அந்த நிகழ்ச்சி நடந்தது என்று இன்னொரு நாள் கூறக் கூடாது. ஏனெனில் இது வரலாறு. நடந்ததை மாற்ற முடியாது. […]

10) ருகூவில் கைகளை வைக்கும் முறை

முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ்  அவர்கள் கூறியதாவது: நான் (தொழுகையில்) இவ்வாறு (கைகளைக் கோத்து என் தொடைகளுக்கிடையே வைத்துக் கொண்டு) ருகூஉச் செய்தபோது என் தந்தை, “நாங்கள் இவ்வாறுதான் செய்து கொண்டிருந்தோம். பின்னர் கைகளை முழங்கால்கள் மீது வைத்துக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டோம்’’ என்று சொன்னார்கள்.  (முஸ்லிம்-932) தொழுகையில் ருகூவின் போது கைகளைத் தொடைகளுக்கு மத்தியில் வைக்க வேண்டும் என்ற சட்டம் முதலில் இருந்தது. பின்னர்  அது மாற்றப்பட்டு முழங்கால்கள் மீது வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

06) குர்பானி இறைச்சியை 2 நாட்களுக்கு மேல் சேமிக்க அனுமதி

இஸ்லாத்தில் ஆரம்பத்தில் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்துவைக்க தடுக்கப்பட்டிருந்தது. பின்னர்,  நபி (ஸல்) அவர்கள் அதை அனுமதித்தார்கள். பழைய சட்டம் மாற்றப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களை அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாமென்று தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அவற்றைச் சந்தியுங்கள். குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்துவைக்க வேண்டாமென உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் விரும்பும் நாட்கள்வரை சேமித்துவையுங்கள். பழச்சாறு மதுபானங்கள் ஊற்றிவைக்கப் பயன்படும் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்று […]

09) கப்ரு ஜியாரத் செய்வதற்கு அனுமதி!

இஸ்லாத்தில் ஆரம்பத்தில் கப்ரு ஜியாரத் செய்வது தடுக்கப்பட்டிருந்தது. பின்னர்,  நபி (ஸல்) அவர்கள் அதை அனுமதித்தார்கள். பழைய சட்டம் மாற்றப்பட்டது. அடக்கத்தலங்களை சந்திப்பதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். முஹம்மதுக்கு அவரின் தாயாருடைய அடக்கத்தலத்தை சந்திப்பதற்கு அனுமதி தரப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் மண்ணறைகளை சந்தியுங்கள். அவை உங்களுக்கு மறுமையை நினைவூட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ) அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: திர்மிதீ-1054 (974)

01) நாஸிக் மன்ஸூக் முன்னுரை

புதிய சட்டம் – பழைய சட்டம் நாஸிக், மன்ஸூக் இறைவன் மனிதர்களைப் படைத்து வெறுமனே விட்டுவிடாமல் அவர்கள் இந்த உலகில் எவ்வாறு வாழவேண்டும் என்பதற்குரிய வாழ்வியல் சட்டங்களை அளித்துள்ளான். அவ்வாறு சட்டங்களை அளிக்கும் போது ஆரம்பத்தில் ஒரு சட்டத்தைக் கூறிவிட்டுப் பின்னர் அவன் அதை மாற்றி விடுவான். அதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே பின்வரும் வசனத்தில் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் கூறுகிறான்: مَا نَنْسَخْ مِنْ اٰيَةٍ اَوْ نُنْسِهَا نَاْتِ بِخَيْرٍ مِّنْهَآ اَوْ مِثْلِهَا ‌ؕ اَلَمْ تَعْلَمْ […]

02) நாஸிக் மன்ஸூக் ஏன்? எதற்கு?

ஹதீஸ் கலை துறையிலும், உசூலுல் ஃபிக்ஹ் எனும் சட்டக் கலைத் துறையிலும் நாஸிக், மன்ஸூக் என்பது பற்றிய அறிவு மிக முக்கியமான ஒன்றாகும். ‘‘நாஸிக்” ‘‘மன்ஸுக்” என்ற சொற்கள் ‘‘நஸக” என்ற மூலச் சொல்லிருந்து தோன்றியவையாகும். ‘‘நஸக” என்ற அரபி வார்த்தைக்கு ‘‘நீக்குதல்” ‘‘பிரதியெடுத்தல்” என்று பொருளாகும். ‘‘இறைவனால் முதலில் விதியாக்கப்பட்ட ஒரு மார்க்கச் சட்டம் இறுதியாக விதியாக்கப்பட்ட மற்றொரு சட்டத்தின் மூலம் மாற்றப்படுவதை” இஸ்லாமிய சட்டக் கலைத் துறையில் ‘‘நஸ்க்” என்று கூறப்படும். மாற்றப்பட்ட முந்தைய […]

07) குளிப்பது எப்போது கடமையாகும்?

விந்து வெளியாகாமல் உடலுறவு கொண்டால் குளிப்பது கடமையா? விந்து வெளியாகாமல் உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையில்லை என்று பின்வரும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளதே? صحيح البخاري 179- حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ، أَخْبَرَهُ أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ، أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ عُثْمَانَ بْنَ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قُلْتُ أَرَأَيْتَ إِذَا جَامَعَ فَلَمْ يُمْنِ، قَالَ […]

08) பயணத்தொழுகை சுருக்கப்பட்டது!

அல்லாஹ் தொழுகையை கடமையாக்கிய போது ஊரிலிருந்தாலும் பிரயாணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான். பிரயாணத்தில் தொழுகை இரண்டு ரக்அத்தாகவே ஆக்கப்பட்டு பிரயாணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது.  அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி-350 இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது பிரயாணத்தொழுகை எந்த விதமான மாற்றத்திற்கும் உள்ளாகாமல் தொழுகை கடமையாக்கப்பட்ட காலத்திலிருந்து இரண்டு ரக்அத்தாகவே இருந்தது என்றக் கருத்தைத் தருகிறது. ஆனால் திருக்குர்ஆன் பயணத்தொழுகையைப் பற்றி பேசும்போது நான்கு ரக்அத்துகளிலிருந்து இரண்டு ரக்அத்துகளாக பயணத்தொழுகை சுருக்கப்பட்டது […]