Search Posts

Category: 10 நிமிட உரைகள்

b110

முன்னுரை

ஏன் இந்த பகுதி? 10 நிமிட உரைகள் பகுதி மிகவும் பயனுள்ளது. பெரும்பாலும் 1 மணி நேர, 2 மணி நேர உரைகள் என்றால், பேச்சாளாருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு விடும். எனவே, குறிப்புகளை தேடி எடுத்து, தொகுக்க நேரம் கிடைக்கும். ஆனால், 10 நிமிட உரை என்பது, எதாவது சபையில் இருக்கும் போது  தீடீரென தரப்படும். பல வருடங்கள் அனுபவம் இருப்பினும், பல்வேறு சிந்தனைகளுக்கு மத்தியில் இருக்கும் போது, எதை பேசுவதென்று நினைவிற்கு வராது. எனவே […]

பரக்கத்தை அடைவதற்கான வழிமுறைகள்

அருள் வளம் பரக்கத்தை அடைவதற்கான வழிமுறைகள் இறைவனிடமிருந்து கிடைக்கப்பெறும் மறைமுக அருளான பரக்கத்தை அடைவதற்கான வழிகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். طَعَامُ الْوَاحِدِ يَكْفِي الِاثْنَيْنِ، وَطَعَامُ الِاثْنَيْنِ يَكْفِي الْأَرْبَعَةَ،… நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவருடைய உணவு இருவருக்கு போதுமானது. இன்னும் இருவருடைய உணவு நான்கு நபர்களுக்கு போதுமானது. அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்-4182 , 4183 (3837, 3836) பரக்கத் என்பது நம்முடைய லாஜிக்கிற்கு அப்பாற்பட்டது. அதாவது ஒருவருக்குத் தேவையான உணவைப் […]

அபாய உலகில் ஓர் அபய பூமி

அபாய உலகில் ஓர் அபய பூமி இன்று உலகெங்கிலும் கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள், கற்பழிப்புக்கள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. அவ்வப்போது சுற்றியும் சூழவும் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. ஆனால் மக்கா நகரம் மட்டும் அமைதி, அபய நகரமாகத் திகழ்ந்து  கொண்டிருக்கின்றது. ஏன்? இதற்கு அல்லாஹ்வே பதிலளிக்கின்றான். اَوَلَمْ يَرَوْا اَنَّا جَعَلْنَا حَرَمًا اٰمِنًا وَّيُتَخَطَّفُ النَّاسُ مِنْ حَوْلِهِمْ‌ ؕ اَفَبِالْبَاطِلِ يُؤْمِنُوْنَ وَبِنِعْمَةِ اللّٰهِ يَكْفُرُوْنَ‏ இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் […]

குடும்பத்தைப் பிரிந்து இருப்பது?

குடும்பத்தைப் பிரிந்து இருக்கலாமா? பசி, தூக்கம், பாலுணர்வு போன்ற விஷயங்களை மனிதனின் இயல்புத் தன்மைகளாக இறைவன் ஆக்கியுள்ளான். மனிதனின் பாலுணர்வுக்கு வடிகாலாகத் திருமணம் என்ற முறையை மார்க்கம் கற்றுத் தந்துள்ளது. دَخَلْتُ مَعَ عَلْقَمَةَ، وَالأَسْوَدِ عَلَى عَبْدِ اللَّهِ، فَقَالَ عَبْدُ اللَّهِ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَبَابًا لاَ نَجِدُ شَيْئًا، فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ […]

அடமானமும் அமானிதமும்

அடமானமும் அமானிதமும் அடமானம் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் அவர்கள், ஒரு யூத மனிதனிடம் அடமானப் பொருள் கொடுத்து கொஞ்சம் கோதுமை வாங்கினார்கள்.  அதைத் திருப்பி வாங்காமலேயே மரணித்தார்கள் என்ற ஹதீஸை  பார்க்கிறோம்.  அது வட்டிக்கு இல்லை. அடமானப் பொருளுக்கும் வட்டிக்கும் வித்தியாசம் இருக்கிறது. அடமானப் பொருள் ஒரு பொருளை வாங்கும் போது அதற்குப் பதிலாக ஒரு பொருளை கொடுப்பதே அடமானமாகும். எனவே அடமானம் வைத்து பொருளை வாங்கலாம் அல்லது அடமானத்துக்கு பொருட்களை கொடுக்கலாம் என்பதை பின்வரக் […]

மணக்கும் குர்ஆனை மனனம் செய்வோம்

மணக்கும் குர்ஆனை மனனம் செய்வோம் أَنَّ جِبْرِيلَ كَانَ يُعَارِضُهُ بِالقُرْآنِ كُلَّ سَنَةٍ مَرَّةً، وَإِنَّهُ قَدْ عَارَضَنِي بِهِ العَامَ مَرَّتَيْنِ، وَلاَ أَرَى الأَجَلَ إِلَّا قَدِ اقْتَرَبَ “எனக்கு (வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதிக்காட்டி நினைவூட்டுவார். ஆனால், அவர் இந்த ஆண்டு இரண்டு முறை அதனை ஓதிக் காட்டினார். (இதிலிருந்து) என் இறப்பு நெருங்கி விட்டதாகவே கருதுகிறேன்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), […]

கோடையை மிஞ்சுகின்ற கொடிய நரகம்

கோடையை மிஞ்சுகின்ற கொடிய நரகம் இது கோடை காலம். வெயில் கொளுத்திக் கொண்டிருக்கின்றது. அதிகமான மாவட்டங்களில் சூரியன் சதத்தைத் தாண்டி சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கின்றது. காலையில் கிழக்கிலிருந்து கிளம்பும் போதே அனல் தெறிக்கின்றது. அது உச்சி நோக்கி ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் வெப்பத்தின் அடி கூடிக் கொண்டே போகின்றது. மாலையில் மேற்கே மறைகின்ற வரை சூரியனின் சர்வாதிகார சாம்ராஜ்யம் கொடி கட்டிப் பறக்கின்றது. மறைந்த பின்னாலும் அடிக்கின்ற அனல் காற்றின் வேகம் தணிய மறுக்கின்றது; உஷ்ணத்தின் […]

ஏகத்துவாதிகளே எங்கே செல்கின்றீர்கள்?

ஏகத்துவாதிகளே எங்கே செல்கின்றீர்கள்? வஹியை மட்டும் பின்பற்றும் ஏகத்துவாதிகளே! இதோ உங்களுக்கு வஹியின் மூலம் கிடைப்பெற்ற அழகிய உபதேசத்தை பாரீர்! குழப்பங்கள் தோன்றும் முன்! بَادِرُوا بِالْأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ، يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا، أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا، يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள். […]

திருக்குர்ஆன் பார்வையில் மூஃமின்களின் பண்புகள்!

திருக்குர்ஆன் பார்வையில் மூஃமின்களின் பண்புகள்! அல்லாஹ்வின் படைப்பில் இயங்கும் இவ்வுலகில் ஒவ்வொரு படைப்பும் தமக்குரிய பண்புகளோடு வாழ்கின்றன. படைப்புகளில் ஓர் உன்னத படைப்பாக வாழும் மனிதர்களும் தங்களுக்குரிய இயற்கை பண்புகளோடு வாழ்கின்றனர். இஸ்லாத்தை பொறுத்தவரை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு எல்லைக்குட்பட்டு வாழ்கின்றோம்.  அல்லாஹ்வையும் அவன் கொடுத்த வேதத்தையும் நம்பி மறுமையில் சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதே அதற்குரிய காரணமாகும். அந்த வெற்றியை தீர்மானிப்பது இறைநம்பிக்கையாளர்களின் பண்புகள் ஆகும். அந்த […]

திருக்குர்ஆன் பார்வையில் உணவு!

உணவு ஓர் அருட்கொடை: உலகை படைத்து பரிபாலித்து பாதுகாத்து வரும் அல்லாஹ் மனித குலத்திற்கு இவ்வுலகில் இன்புற்று வாழ ஏராளமான அருட்கொடைகளை வாரி வழங்கியுள்ளான்.  அவன் வழங்கிய அருட்கொடைகளில் அடிப்படையானது மனிதன் உயிர் வாழ தேவையான உணவாகும்.  இவ்வுலகில் வாழக்கூடிய அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான உணவு வளங்களை ஏற்கனவே அவர்களுக்காக இப்பூமியில் ஏற்படுத்தியிருப்பதாக இறைவன் கூறுகிறான். உயிரினங்களில் யாரும் நமது உணவுகளை ஏற்பாடு செய்துகொண்டு பிறப்பதில்லை. உதாரணத்திற்கு மீன் வகைகளில் ஒன்றான திமிங்கலம் ஒரு நாளைக்கு 32 […]

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்! நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும். நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது. சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற – பாவச்செயல்களில் ஈடுபடுவதை விட்டும் தம் புலன்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். இன்றைக்கு நிகழும் பாவச் செயல்கள் அனைத்தும் புலன்களின் தூண்டுதலின் பெயராலேயே நடைபெறுகின்றன. விபச்சாரம், திருட்டு, கொலை, பாலியல் சீண்டல்கள், அவதூறு என அத்தனைக்குமான அடிப்படை புலன்களின் தூண்டுதலாகவே உள்ளது. இத்தீமைகள் […]

பிறர் நலன் நாடுவோம்

பிறர் நலன் நாடுவோம் இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்தும் அறிந்த ஏக இறைவனால் வழிமுறைகள் வகுக்கப்பட்ட மார்க்கம். இத்தகைய இஸ்லாமிய மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் சிறப்பாக இயங்குவதற்குத் தேவையான அனைத்து விதமான அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்குகின்றது, பிறர் நலம் பேணுதல் என்பது இஸ்லாமின் அடிப்படைகளில் தலையாயதாகும். ஆரம்பகால முஸ்லிம்கள் இறைத்தூதருடன் செய்து கொண்ட வாக்குப் பிரமாணங்களில் ஒன்றாக இது இருந்தது. ஒரு முஸ்லிம் […]

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

ரமளானின் அருளை நமதாக்குவோம்! மனிதனை அழகிய படைப்பாக்கிய அல்லாஹ், மனிதன் மீது அளவுகடந்த அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டுள்ளான். இம்மையிலும் மறுமையிலும் மனிதன் வெற்றி பெற்றிட வேண்டும் என்பதற்காக, அதற்கு தேவையான இறை நேர்வழிகாட்டலையும் வகுத்தளித்திருக்கின்றான். குறிப்பாக, ரமளான் மாதத்திற்கென்று கூடுதல் சிறப்புக்களை வழங்கி ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனையும் அருளையும் அடைய வழி வகுத்துள்ளான். شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ ‘ரமளான் […]

நபிகளாரின் எளிமை!

நபிகளாரின் எளிமை! உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைகிறார்கள். அவர்கள், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், பொது மேடைகளில் பேசும் போதும் பல உதாரணங்களை சொல்லி எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஆனால் அவர்கள் தம்முடைய சொந்த வாழ்க்கையில் எளிமைக்கு முற்றிலும் நேர்மாற்றமாக வாழ்ந்து வருவதையும் காண்கிறோம். காரணம், இவர்கள் “ஊருக்கு உபதேசம்”  நமக்கு இது ஒரு வேஷம் என்ற குறிக்கோளோடு செயல்படுவார்கள். பொதுவாக எளிமை என்றால் வசதிகளும் வாய்ப்புகளும் இருந்த போதிலும் ஒருவர் எளிமையை […]

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்! அகில உலகைப் படைத்த இறைவன், மனிதப் படைப்புகளை பிற உயிரினங்களைவிட மேன்மையாக வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். நீதி செலுத்துவதற்கும், சமத்துவம் பேணப்படுவதற்கும், எவ்வாறு வாழ்வியல் வழிகாட்டியாக கற்றுத் தந்திருக்கின்றானோ அதன் அடிப்படையில் மனித சமுதாயம் தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் நிச்சயமாக அனைவருக்கும் சமநீதி செலுத்தப்படும். இஸ்லாம், பிற மதக்கொள்கை கோட்பாடுகளைக் காட்டிலும் மிகப்பெரிய வித்தியாசத்தோடு தனித்து விளங்க காரணம் சக மனிதர்களுக்கு நீதி செலுத்துவது குறித்தும், நீதிக்கு […]

ஓரினச் சேர்க்கையும் ஓரிறையின் தண்டனையும்

ஓரினச் சேர்க்கையும் ஓரிறையின் தண்டனையும் உலகில் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் தலையாய பணி, மக்களிடம் ஏகத்துவத்தை எடுத்துரைத்து அந்தக் கொள்கையை நிலைநாட்டுவது தான். அதே சமயம் ஒரு சில இறைத்தூதர்கள், ஒரு சில குறிப்பிட்ட தீமைகளை வேரறுப்பதையும் வீழ்த்துவதையும் குறிக்கோளாகக் கொண்டு அனுப்பப்பட்டுள்ளனர். ஒரு சமுதாயத்தினர் அளவையிலும் நிறுவையிலும் மோசடி செய்து, மக்களை ஏமாற்றி அவர்களது பொருளாதாரத்தைச் சுரண்டிக் கொண்டிருந்தனர். இந்தத் தீமைக்கு எதிராக அனுப்பப்பட்டவர் தான் நபி ஷுஐப் (அலை) ஆவார். அவர்களது பிரச்சாரத்தின் மையக்கருத்தை கீழ்க்காணும் […]

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி 1430 ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய அரபுலகத்தில் அறியாமை இருள் நிறைந்த காலகட்டத்தில் அந்த இருளை நீக்கி இறுதி இறைத்தூதராக நம் நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் அழகிய போதனைகள் நிறைந்த வாழ்க்கையானது அறியாமை இருளை அழகிய வாழ்க்கை முறையை மக்களுக்கு தந்ததோடு, இன்றும் அந்த வாழ்க்கை முறையை பின்பற்றி நடக்கும் அறிய வாய்ப்பை நபி (ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் நமக்கு தந்ததோடு அல்லாமல் நபி […]

பள்ளிவாசலைக் கட்டுவதின் சிறப்பு

பள்ளிவாசலின் முக்கியத்துவம் மனிதர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக அதுவும் சொற்பத்திலும் சொற்பமாக இருக்கும் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே பள்ளிவாசல் கட்டப்பட்டு வந்துள்ளது. இதற்குப் பின்னணியில் மிக முக்கியக் காரணம் இல்லாமல் இல்லை. அன்றைய காலங்களில் தொழுகை எனும் வணக்கம் கண்டிப்பாகப் பள்ளிவாசலில் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் எனும் சட்டம் இருந்தது. இந்தச் சட்டம் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குத் தளர்த்தப்பட்டது. கடமையான தொழுகை விசயத்தில் முந்தைய சமுதாய மக்களுக்கு இருந்ததை விடவும் நமக்குக் குறைவு […]

சூரத்துல் ஃபாத்திஹாவின் சிறப்புகள்

சூரத்துல் ஃபாத்திஹாவின் சிறப்புகள் மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! நபித்தோழர்களால் வரிசைப்படுத்தப்பட்ட திருமறை அத்தியாயங்களின் முதலாவது அத்தியாயமாக ”சூரத்துல் ஃபாத்திஹா” இடம் பெற்றுள்ளது. இந்த அத்தியாயம் அருளப்பட்டதற்கான பின்னணிக் காரணங்கள் ஏதும் கிடையாது. ஆனால் இந்த அத்தியாயம் தொடர்பாக ஏராளமான சிறப்புகள் ஹதீஸ்களில் வந்துள்ளன. இந்த அத்தியாயத்திற்குப் பல பெயர்களை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். உம்முல் குர்ஆன் (குர்ஆனின் தாய்)  قال : قال رسول الله صلى الله عليه و سلم  الحمد لله أم القرآن وأم الكتاب والسبع المثاني நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”அல்ஹம்து […]

கடன் ஓர் அமானிதம்

கடன் ஓர் அமானிதம் நிச்சயமாகக் கடன் நம்மிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதம். அதை கண்டிப்பாக சரியான முறையில் திருப்பி செலுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. ‏ اِنَّ اللّٰهَ يَاْمُرُكُمْ اَنْ تُؤَدُّوا الْاَمٰنٰتِ اِلٰٓى اَهْلِهَا ۙ وَاِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ اَنْ تَحْكُمُوْا بِالْعَدْلِ‌ ؕ اِنَّ اللّٰهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهٖ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ سَمِيْعًۢا بَصِيْرًا‏  அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்குமாறும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக […]

ஜோதிடமும் சூனியமும்

ஜோதிடமும் சூனியமும் அல்லாஹ்வோடு பல கடவுள் இருப்பதாக நம்புவதும் அல்லாஹ்வுக்குச் செய்யும் வணக்க வழிபாடுகளை மற்றவர்களுக்குச் செய்வதும் இணைவைத்தல் என நாம் அறிந்திருக்கிறோம். அதைப் போன்றுதான் அல்லாஹ்வுக்கு இருக்கும் ஆற்றல் மற்றவர்களுக்கு இருப்பதாக நம்புவதும் இணை வைத்தலாகும். அல்லாஹ்வுக்கு ஏராளமான பண்புகள் உள்ளன. அந்தப் பண்புகளில் ஏதாவது ஒரு பண்பு அல்லாஹ்வுக்கு இருப்பது போல் ஒரு மனிதனுக்கு உள்ளது என்று ஒருவன் நம்பினால் அந்தப் பண்பு விஷயத்தில் அல்லாஹ்வைப் போல் அந்த மனிதனைக் கருதியவனாக ஆகிவிடுவான். அதாவது […]

படைப்பினங்களில் மோசமானவர்கள்

படைப்பினங்களில் மோசமானவர்கள் கப்ருகளைக் கட்டி அதை வணங்கக்கூடாது என்பதற்கு நாம் ஏராளமான சான்றுகளைப் பார்த்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக, நபியவர்களுடைய காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இந்த இடத்தில் கூறுவது பொருத்தமாக இருக்கும். أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا خَرَجَ إِلَى حُنَيْنٍ مَرَّ بِشَجَرَةٍ لِلْمُشْرِكِينَ يُقَالُ لَهَا: ذَاتُ أَنْوَاطٍ يُعَلِّقُونَ عَلَيْهَا أَسْلِحَتَهُمْ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، اجْعَلْ لَنَا ذَاتَ أَنْوَاطٍ كَمَا لَهُمْ […]

திருக்குர்ஆன் வழங்கிய பொருளாதாரத் திட்டம்

திருக்குர்ஆன் வழங்கிய பொருளாதாரத் திட்டம் மனிதர்களுக்கு நன்மை பயக்கும் விஷயங்களை ஏவுவதும், அவர்களுக்குத் தீமை விளைவிப்பதை விட்டுத் தடுப்பதும் திருக்குர்ஆன் செய்யும் பணிகளில் ஒன்றாகும். குர்ஆன் கூறும் பெரும்பாவங்களில் முதன்மையானது ஷிர்க் எனும் இறைவனுக்கு இணை வைக்கும் காரியம். அதன் பிறகு பெரும் பாவங்களின் பட்டியலில் முக்கியமாக இடம்பெறுவது வட்டியாகும். வட்டி என்பது, கொடுக்கல் வாங்கலின் போது கால இடைவெளி ஏற்படுவதால், கடனாகக் கொடுத்த தொகையை விடக் கூடுதலான தொகையை, கால இடைவெளிக்கு ஏற்ப நிர்ணயித்துப் பெற்றுக் […]

வீணானதை விட்டும் விலகுவோம்

வீணானதை விட்டும் விலகுவோம் பொதுவாக முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் வீணான, தேவையற்ற காரியங்களை விட்டும் விலகி இருப்பார்கள். அவர்களின் பேச்சிலும், நடத்தையிலும் பெரிய மாற்றம் தென்படும். சின்னத்திரை, சினிமா படங்கள் மற்றும் பாடல்களின் ஓசைகள் ஒடுங்கியும் அதிர்வுகள் அடங்கியும் வீடுகள் அமைதியாய் இருக்கும். தொழுவது, குர்ஆன் படிப்பது, திக்ரு செய்வது போன்ற இபாதத்களில் ஈடுபாடு அதிகரிக்கும். இப்படி ஒரு மாதம் மட்டுமல்ல! மற்ற நாட்களிலும் முஃமின்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். பொய்யான நடவடிக்கைகளை முற்றிலும் துறந்து பண்பட்டவர்களாக […]

கொள்கையே தலைவன்

கொள்கையே தலைவன் قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ “நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’’ என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 3:31) இந்த வசனம் அல்லாஹ்வின் நேசத்தையும், அவனது தூதரைப் பின்பற்றுவதையும் வலியுறுத்துகின்றது. قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ‌‌ ۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْكٰفِرِيْنَ‏ “அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! […]

தவறான புரிதல்கள்

தவறான புரிதல்கள் தற்போதுள்ள காலச் சூழ்நிலையில் எங்கு நோக்கினும்  சரியான புரிதல் இல்லை (மிஸ் அன்டஸ்டேன்டிங்), ஒத்துழைப்பு இல்லை என்பன போன்ற வார்த்தைகளை நாம் அதிகம் கேள்விப்படுகின்றோம். குறிப்பாகக் கணவன் மனைவி, மாமியார் மருமகள், அண்ணன் தம்பி, அக்கா தங்கை, தாய் மகள், சக நண்பர்களுக்கு மத்தியில், சக ஊழியர்களுக்கு மத்தியில், முதலாளி, தொழிலாளி போன்ற எல்லா உறவுகளுக்கு மத்தியிலும் பிரச்சனைகளுக்கு அடிப்படையாக இருப்பது மேலே நாம் குறிப்பிட்ட தவறான புரிதல் தான். எதையுமே நேரான சரியான […]

மனம் ஏற்றுக் கொள்ளாத  மார்க்கச் சட்டங்கள்

மனம் ஏற்றுக் கொள்ளாத  மார்க்கச் சட்டங்கள் இவ்வுலகில் விரலிட்டு எண்ண முடியாத ஏராளமான கடவுள் கொள்கைகள் இருக்கின்றன. அவை அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்ட, பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட, மனிதனுக்கு இயலாத பல காரியங்களை மார்க்கம் என்ற பெயரால் கட்டளையிடுகின்றன. ஆனால் இஸ்லாம் மார்க்கம் மட்டுமே வாழ்க்கைக்கு ஏற்ற இனிமையான எளிமையான உயரிய கோட்பாடுகளையும், நேரிய சட்ட திட்டங்களையும் கொண்டுள்ள ஓர் உன்னதமான மார்க்கமாகும். ஏனெனில் இது மனோஇச்சைகளாலோ, கற்பனைகளாலோ தோற்றுவிக்கப்பட்ட மார்க்கம் கிடையாது. ஈடு இணை இல்லாத இறைவனால் […]

இளைஞர்களை சீரழிக்கும் செல்போன் போதை

இளைஞர்களை சீரழிக்கும் செல்போன் போதை நவீன விஞ்ஞான சாதனங்களால் மனிதனுக்கு பயன் இருந்தாலும் அதை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் நம்மை அது நரகத்தின் அதள பாதாளத்தில் கொண்டு போய்விடும்.அந்த நவீன சாதனங்களில் ஒன்று தான் செல்போன். இது இன்றைய இளைய சமுதாயத்தை நாமாக்கும் சாதனமாக உள்ளது. எல்லா இடங்களிலும் செல்போன் பயன்பாடுதான். அங்காடி, பஸ், பஸ் நிலையம், ரெயில், ரெயில்நிலையம், கல்லூரி, பள்ளி கூடங்களில், பீச்சு, பார்க், பாத்ரூம் என்று எல்லா இடத்திலும் இதுதான் நிலை. […]

நல்ல நண்பன் – கெட்ட நண்பன்

நல்ல நண்பன் – கெட்ட நண்பன் ஒருவனை நல்லவனாகவும் தீயவனாகவும் மாற்றுவதில் இந்த நட்புத்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. நல்லொழுக்கமுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவன் தீய நண்பர்களின் பழகத்தினால் ஒழுக்கக்கெட்டவனாக மாறிவிடுகின்றான். படுமோசமான குடும்பத்தில் பிறந்த ஒருவன் நல்ல நண்பர்களின் பழகத்தினால் ஒழுக்கச்சீலனாக மாறிவிடுகின்றான். ‘பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும்’ என்ற பழமொழியும் இதைத் தான் உணர்த்துகிறது. நாம் பழகும் நண்பர்களைப் பொறுத்து நமது நிலை மாறுகிறது. எனவே நம்முடைய ஈருலக வாழ்கை சிறப்புடன் விளங்க […]

கடமையை மறந்தது ஏனோ?

கடமையை மறந்தது ஏன் இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றாகவும், தலையாய வணக்கமாகவும் இருப்பது தொழுகையாகும். இத்தொழுகையில் முஸ்லிம்கள் மிகுந்த அலட்சியம் காட்டுகின்றனர். இதற்குக் காரணம் இறைவனையும், இறைகட்டளையையும், அவன் அருட்கொடைகளையும் நாம் மறந்தது தான். கற்சிலைகளையும் கண்ணில் கண்டவைகளையும் கடவுள் என எண்ணி வணங்கி வரும் மக்கள் கூட (கற்பனை தெய்வங்களுக்கு) வணக்கத்தில் குறை ஏதும் வைப்பதில்லை. அலகு குத்துதல், ஆணிச்செருப்பு, பூ (தீ) மிதித்தல், மண்சோறு சாப்பிடுதல் என பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட, உடலை வருத்திக்கொள்ளக் கூடிய காரியங்களை […]

ஈருலக வாழ்வையும் இருளாக்கும் வாடஸ்அப் பேஸ்புக்

ஈருலக வாழ்வையும் இருளாக்கும் வாடஸ்அப் பேஸ்புக் செல்போன் கண்டுபிடிப்பிற்குப் பிறகு இன்றைக்கு இரண்டு வயது குழந்தை முதல் தள்ளாத வயோதிகர் வரை அனைவரின் கரங்களிலும் அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. செல்போன் பயன்பாட்டின் மிக அசுர வளர்ச்சியின் அடையாளமாக வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகியவை நவீன அறிவியல் உலகில் மிக முக்கிய தகவல் தொடர்பு வழித்தடமாகத் திகழ்கின்றன. இந்த வாட்ஸ்அப், பேஸ்புக் பயன்பாடுகள் சிலருக்கு நல்வாய்ப்பாகவும் பலருக்கு துர்பாக்கியமாகவுமே உள்ளன. ஆம்! இன்றைக்கு அதிகமானோர் இவற்றை இம்மை மற்றும் மறுமை […]

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) (அகிலத்தாரின் அழகிய முன்மாதிரி)

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) அகிலத்தாரின் அழகிய முன்மாதிரி இஸ்லாம் மார்க்கம் முக்கியமான இரு கொள்கைகள் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒன்று லாயிலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை – என்ற கொள்கையாகும். மற்றொன்று முஹம்மதுர் ரசூலுல்லாஹ் – முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதராவார்கள் – என்ற கொள்கையாகும். இவ்விரு கொள்கைகளையும் உள்ளத்தால் ஏற்று, வாயால் மொழிந்தால் தான் ஒருவர் இஸ்லாத்தில் இணைய முடியும். இவ்விரு கொள்கைகளையும் அதிகமான முஸ்லிம்கள் மேலோட்டமாகவே அறிந்து வைத்துள்ளனர். அரைகுறையாகவே நம்புகின்றனர். […]

இலகுவை விரும்பிய  எளிய தூதர்

இலகுவை விரும்பிய  எளிய தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது நாற்பதாவது வயதை எட்டியதும் இறைவனிடமிருந்து முதல் தூது வந்தது. அன்று தனி மனிதராக தனது தூதுப் பணியைத் தொடர்ந்தார்கள். ஏராளமான அடக்குமுறைகள், கஷ்டம், இன்னல்களை வாழ்க்கையில் சந்தித்துவிட்டு தனது அறுபத்தி மூன்றாவது வயதில் மரணத்தை எய்தினார்கள். அப்போது, அவர்கள் இறைவனிடமிருந்து பெற்ற ஓரிறைக் கொள்கையில் பெரும் மக்கள் சக்தியே சங்கமித்திருந்தது. இன்றளவும், கோடிக்கணக்கான மக்கள் நபி (ஸல்) அவர்களையும் அவர்களது கொள்கையையும் உயிருக்கும் மேலாக நேசித்துக் […]

அகீதா விஷயங்கள் ஆய்வுக்கு அப்பாற்பட்டதா?

அகீதா விஷயங்கள்  ஆய்வுக்கு அப்பாற்பட்டதா? உலகில் உள்ள பல மதங்களில் கொள்கையை தெளிவாகக் கூறுவதில் இஸ்லாம் தனித்து விளங்குகிறது. தெளிவாகக் கூறும் கொள்கையை ஆய்வு செய்யும் உரிமையை வழங்குவதன் மூலம் மேலும் தனித்து விளங்குகிறது. இஸ்லாத்தின் அடிப்படையாக விளங்குகின்ற கடவுள் கொள்கையைக் கூறுவதில் உள்ள தெளிவு, ஆய்வு செய்பவர்களை உடனடியாக ஈர்க்கக் கூடியதாக உள்ளது. ஏனெனில் எந்த ஒரு பொருளையும் ஆய்வு செய்து அறிவதே மனிதர்களுடைய இயல்பு. கடைகளில் சென்று சிறு பொருட்களை வாங்கினாலும் கூட அதனுடைய […]

அருள் மழை  பொழிவாய்  ரஹ்மானே!

அருள் மழை  பொழிவாய்  ரஹ்மானே! நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மழை வேண்டிப் பிரார்த்தித்தல் தொடர்பாக மூன்று நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. மக்கா நிகழ்வு நபி (ஸல்) அவர்கள் சத்தியப் பிரச்சாரம் செய்த போது மக்கா குரைஷிகள் சத்தியத்தை ஏற்க மறுத்தனர். அப்போது, ‘யூசுஃப் (அலை) காலத்தில் பஞ்சத்தை ஏற்படுத்தி மக்களை  ஏழாண்டுகள் பிடித்தது போன்று இவர்களையும் ஏழாண்டுகள்  பிடிப்பாயாக’ என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அதன் விளைவாக மக்காவில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அவர்கள் பசியால் […]

மறைக்கப்படும் மார்க்கக் கல்வி

மறைக்கப்படும் மார்க்கக் கல்வி அல்லாஹ் மார்க்க அறிஞர்களை அவர்களுக்கென்று பல தகுதிகளைக் கொடுத்து பல விதத்திலும் சிறப்புப்படுத்தியுள்ளான். மக்களிடத்திலும் கூட உயரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் இம்மார்க்க அறிஞர்களே! பாமரர்களிலிருந்து படித்தவர்கள் வரையிலும் ஆலிம்களை புண்ணியவான்கள் எனக் கருதி அவர்களைக் கண்ணியப்படுத்துகின்ற காட்சியை நாம் காண்கின்றோம். இதற்கான காரணம் ஆலிம் என்பவர் மார்க்கம் படித்தவர், நம்மை விடவும் அதிகமாகத் தெரிந்தவர், தூய மார்க்கம் காட்டித் தந்த அனைத்து சட்டத்திட்டங்களையும் சரிவர நிறைவேற்றுபவர் என்றெல்லாம் கற்பனை கோட்டைகளைக் கட்டி போற்றி […]

மஹர்  ஒரு கட்டாயக் கடமை

மஹர்  ஒரு கட்டாயக் கடமை மஹர் என்பது எந்த அளவுக்கு மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதற்கு நபியவர்கள் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னையும் சஅத் பின் ரபீஉ (ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சஅத் (ரலி), “நான் அன்ஸாரிகளில் அதிகச் செல்வமுடையவன்; எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என் இரு மனைவியரில் நீர் யாரை விரும்புகிறீர் […]

“இன்னாலில்லாஹி” என்ற இடிதாங்கி

“இன்னாலில்லாஹி” என்ற இடிதாங்கி إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்… அரபி படிக்கத் தெரியாத முஸ்லிம்கள் கூட அடிக்கடி முணுமுணுக்கின்ற முத்தான பிரார்த்தனை தான் இது! இந்தப் பிரார்த்தனையின் பொருள் என்ன? “நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்’’ இதுதான் அதனுடைய பொருளாகும். நம்முடைய உயிர்களானாலும், உடைமைகளானாலும் எதுவும் நமக்குச் சொந்தமில்லை. அவற்றைத் தந்த அந்த இறைவனுக்கே சொந்தம். இவை நம்மிடத்தில் இரவலாக இருக்கின்றன. அவற்றை அவன் எப்போது […]

வட்டியை ஒழித்த வான்மறை

வட்டியை ஒழித்த வான்மறை வட்டிக்குக் கடன்பட்டு விட்டால் அதிலிருந்து மீள்வது சாதாரண காரியமல்ல. ஒருமுறை கடன் பட்டவர்கள் அதிலிருந்து மீள முடியாத அளவிற்குச் சிக்கிக் கொள்கின்றனர். வட்டி, வட்டிக்கு வட்டி, டவுள் வட்டி, மீட்டர் வட்டி, நிமிட வட்டி, ஸ்பீடு வட்டி, ரன் வட்டி, கந்து வட்டி, தண்டல் வட்டி, தின வட்டி இது போன்ற எண்ணற்ற வட்டியால் மக்களை வாட்டி வதைக்கின்றனர். சாலையோர வியாபாரிகளில் மணி வட்டி என்று கூறிக் கொடுப்பார்கள். அதாவது 10 மணிக்கு […]

சிலை வணக்கம் வேண்டாம்! சீரழிக்கும் பொய்யும் வேண்டாம்!

சிலை வணக்கம் வேண்டாம்! சீரழிக்கும் பொய்யும் வேண்டாம்! இணை வைப்பு இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவதில்லை. இணைவைப்பில் இறந்தவர், பெற்ற தாய் தந்தையாக இருந்தாலும் அவர்களுக்கு ஜனாஸா தொழுகை தொழுவதில்லை. மவ்லிது, கத்தம் ஃபாத்திஹா ஓதுகின்ற நிகழ்ச்சியில் பங்கெடுப்பதில்லை. அந்த நிகழ்ச்சி நடத்தி பரிமாறப்படுகின்ற நேர்ச்சையைப் பெறுவதில்லை. அதே நிகழ்ச்சிக்காக வைக்கப்படுகின்ற விருந்து வைபவங்களில் கலந்து கொள்வதில்லை. நபி பிறந்த தின விழா, நினைவு நாள் போன்ற நிகழ்ச்சிகளிலும் சேர்வதில்லை. கந்தூரிகள், கருமாதிகள் என்று எதிலும் இணைவதில்லை. […]

அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே!- 2

தொடர் – 2 அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே! சென்ற தொடரில் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்வதற்கான காரணங்களில் அல்லாஹ்வின் வல்லமையை வெளிப்படுத்துவதன் விளக்கத்தை அறிந்தோம். இந்தத் தொடரில், படைத்தவனுக்கு நன்றி செலுத்துவதன் வெளிப்பாடாகவும், புகழுக்குரியவன் அவனே! நாம் அல்ல என்பதை உணர்த்திடவும் அல்ஹம்துலில்லாஹ் கூறுவதைப் பற்றி அறிந்துகொள்வோம். நாயனுக்கு நன்றி செலுத்த அல்ஹம்துலில்லாஹ் கூறுவோம் நாம் இக்கட்டான சூழலில் துவண்டு கிடக்கும் போது திடீரென எதிர்பாராத விதமாக ஒருவர் உதவும் பொழுதோ, அல்லது ஒருவரின் உதவிக்காக அவரிடம் தேடிச் […]

மஹரை மகத்துவப்படுத்திய  திருக்குர்ஆன்

மஹரை மகத்துவப்படுத்திய  திருக்குர்ஆன் இறைவன் இந்த உலகத்தைப் படைத்து கோடிக்கணக்கான மனிதர்களை பல்கிப் பெருகச் செய்திருக்கின்றான். உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் மொழி பேசுகின்ற ஒவ்வொரு தூதர்களை இறைவன் அனுப்பி மக்களுக்கு நேர்வழி காட்டியிருக்கின்றான். மேலும், தூதர்களை இறைவன் அனுப்பும் போது, சில அற்புதங்களையும் இறைவன் கொடுத்தனுப்பியிருக்கின்றான். அப்படிப்பட்ட தூதர்களில் இறுதித் தூதராக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் திருக்குர்ஆன் என்ற மகத்தான பேரருளை அருட்கொடையாக, அற்புதமாகக் கொடுத்து, உலகம் அழிகின்ற […]

மறு உலகப் பயணம் திரும்ப வர முடியாத ஒருவழிப் பயணமே!

மறு உலகப் பயணம் திரும்ப வர முடியாத ஒருவழிப் பயணமே! வாழ்வாதாரம் தேடி வளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்கள் வாக்களிக்கப்பட்ட வேலைகளுக்கு மாற்றமான வேலைகளில் மாட்டிக் கொள்வார்கள். வங்கியில் பியூன் வேலை என்று நம்பி வந்தேன்; ஆனால் எனது கஃபீல் வயற்காட்டில் தூக்கிப் போட்டு விட்டான். கார் டிரைவர் வேலைக்கு வந்தேன்; ஆனால் எனது கஃபீல் என்னை காட்டில் ஆடு, ஒட்டகம் மேய்க்கும் வேலையில் தூக்கிப் போட்டு விட்டான். கம்பெனியில் மேனேஜர் என்று சொல்லி என் ஏஜண்ட் என்னை அனுப்பி […]

நன்மைகளின் களஞ்சியம் திருக்குர்ஆன்

நன்மைகளின் களஞ்சியம் திருக்குர்ஆன் குர்ஆன் முஃமின்களுக்கு நன்மைகளை வாரி வழங்கும் பொற்களஞ்சியமாக இருக்கின்றது. குர்ஆன் இரண்டு விதமான நன்மைகளைத் தன்னுள் உள்ளடக்கியிருக்கிறது. ஒன்று, அதை அதன் மூல மொழியான அரபியில் வாசிக்கின்ற போது கிடைக்கும் நன்மைகள். மற்றொன்று அதைப் பொருளுணர்ந்து நம் தாய் மொழியில் படிக்கும் போது கிடைக்கும் நன்மைகள். ஆனால், இன்று இவ்விரண்டு விதமாகவும் படிக்கின்ற வாய்ப்புகள் மிக இலகுவாக வாய்க்கப்பட்டும் கூட அதைப் பயன்படுத்தாமல் மக்கள் தங்களுக்குக் கிடைக்கவிருக்கும் நன்மை ஓடையைத் தாங்களே அணை […]

வான்மறைக் குர்ஆனை வாழ்வியலாக்குவோம்

வான்மறைக் குர்ஆனை வாழ்வியலாக்குவோம் திருக்குர்ஆனை வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் வாழ்வியலாகக் கொண்டிருக்க வேண்டிய இந்தச் சமுதாயம், அதை விட்டும் வெகு தொலைவில் நிற்கின்றது. அது எந்தெந்தத் துறைகளில் விலகி நிற்கின்றது? என்பதைக் கீழ்க்காணும் பட்டியல் நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. கடவுள் கொள்கை உலகத்தைப் படைத்து, இயக்கிக் கொண்டிருப்பவன் ஏக இறைவனான ஒரே கடவுள் தான். அவனுக்கு நிகராக, இணையாக யாருமில்லை என்பது தான் இஸ்லாமிய கடவுள் கொள்கையாகும். உலகத்திலேயே பாமரன் முதல் பண்டிதன் வரை அத்தனை ரக மக்களும் […]

அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே!-1

அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஒவ்வொரு நாளும் நமது தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதத் துவங்கும் போது ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்கிறோம். ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் 33 முறை அல்ஹம்துலில்லாஹ் சொல்கிறோம். இரவில் உறங்கும் முன்பும் பிறரை சந்தித்துப் பேசுகையில் நாம் நலமுடன் இருக்கிறோம் என்பதைத் தெரிவிக்கவும் அல்ஹம்துலில்லாஹ் என்கிறோம். இப்படி அனுதினமும் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறும் நாம், அதன் பொருள், ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று புரிந்திருக்கிறோம். ஆனால் இந்த வார்த்தையில் பொதிந்திருக்கும் ஏராளமான விளக்கங்களையும் […]

மார்க்கத்தின் பார்வையில் மஸ்ஜிதுகளின் முக்கியத்துவம்

மார்க்கத்தின் பார்வையில் மஸ்ஜிதுகளின் முக்கியத்துவம் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து நாடு துறந்து மதீனாவிற்கு வந்தவுடன் அவர்கள் முதலில் அல்லாஹ்விற்காக ஓர் ஆலயத்தைத் தான் கட்டியெழுப்பினார்கள். மஸ்ஜிதுன் நபவீ எனும் அந்த ஆலயம் தான் அல்லாஹ்வுக்கு வணக்க வழிபாடுகள் செய்யும் இடமாகவும், இஸ்லாமிய ஆட்சியின் மையமாகவும், மக்களுக்குக் கல்வி போதிக்கும் பல்கலைக் கழகமாகவும், ஏழை எளியவர்களுக்குப் புகலிடமாகவும், அனைத்து நற்பணிகளுக்கும் அடித்தளமாகவும் விளங்கியது. அது போன்று இவ்வுலகில் ஆலயம் என முதன்முதலில் அமைக்கப்பட்டது இறையில்லமான “கஅபா” ஆலயம்தான். இவ்வுலகில் […]

இதயங்களை ஈர்த்த இனிய குர்ஆன்!

இதயங்களை ஈர்த்த இனிய குர்ஆன்! அல்குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட போது மக்காவில் உள்ள இறைமறுப்பாளர்கள் அந்தக் குர்ஆனை மக்கள் செவியுற்று விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَسْمَعُوْا لِهٰذَا الْقُرْاٰنِ وَالْغَوْا فِيْهِ لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ “இக்குர்ஆனைக் கேளாதீர்கள்! நீங்கள் மிகைப்பதற்காக அதில் (குழப்புவதற்காக) வீணான காரியம் செய்யுங்கள்!’’ என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். (அல்குர்ஆன்: 41:26) இதை நாம் அபூபக்ர் (ரலி) அவர்களின் வாழ்க்கையில் […]

மன அழுத்தம் தரும் தேர்வுகளும் மார்க்கம் தரும் தீர்வுகளும்

மன அழுத்தம் தரும் தேர்வுகளும் மார்க்கம் தரும் தீர்வுகளும் எல்லாம் வல்ல ரஹ்மான் தன்னுடைய மார்க்கத்தில் மனித வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்து சட்ட திட்டங்களையும் லேசாக்கி வைத்துள்ளான். ஆனால் நாம் தான் அதன் விதிமுறைகளை மாற்றி, செயல்களைக் கடினமானதாக்கி, நமக்கு நாமே சிரமத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம். இது தேர்வுக் காலம். பத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்வுகள் எழுதப்பட்டு முடிவுக்காக மாணவர்கள் காத்திருக்கிறார்கள். மாணவர்கள் காத்திருக்கிறார்கள் என்பதை விடப் பெற்றோர்கள் காத்திருக்கிறார்கள் என்பது தான் பொருத்தமாக இருக்கும். […]

இறைவா! நல்லோருடன் சேர்ப்பாயாக!

இறைவா! நல்லோருடன் சேர்ப்பாயாக! பிரார்த்தனை என்பது மிக முக்கியமான வணக்கம். இது குறித்து நிறைய போதனைகள் மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, நம்பிக்கை கொண்ட மக்கள் தங்களது பிரார்த்தனையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அல்லாஹ் திருமறையில் பல இடங்களில் தெளிவுபடுத்தி இருக்கிறான். அவற்றுள் ஒரு வசனத்தைப் பாருங்கள். رَبَّنَاۤ اِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُّنَادِىْ لِلْاِيْمَانِ اَنْ اٰمِنُوْا بِرَبِّكُمْ فَاٰمَنَّا  ۖ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ […]

Next Page »