Tamil Bayan Points

Category: மற்ற கேள்விகள்

q132

ஜின்னா என்று பெயர் வைப்பது தவறா?

ஜின்னா என்று பெயர் வைப்பது தவறா? ஜின்னா என்ற வார்த்தை, திருக்குர்ஆனில் இரண்டு பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று ஜின்கள், இரண்டாவது பைத்தியம். {الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ (5) مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ (6) } [الناس: 5، 6] அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களை ஏற்படுத்துகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் உள்ளனர்” (அல்குர்ஆன்: 114:5,6.) {وَجَعَلُوا بَيْنَهُ وَبَيْنَ الْجِنَّةِ نَسَبًا وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ (158)} [الصافات: 158] […]

கொட்டாவி வந்தால் அவூது பில்லாஹி என்று கூற வேண்டுமா?

கொட்டாவி வந்தால் அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தான் நிர்ரஜீம் என்று கூற வேண்டுமா? இதற்க்கு ஹதீஸில் ஆதாரம் இல்லை என்று சிலர் கூறுகின்ரனர். التَّثَاؤُبُ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا قَالَ: هَا، ضَحِكَ الشَّيْطَانُ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் தம்மால் முடிந்த வரை அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் “ஹா“ என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் […]

வஹ்ஹாபிகள் என்றால் யார்?

வஹ்ஹாபிகள் என்றால் யார்? கேடுகெட்ட துருக்கியர்கள் ஆளுகையின் கீழ் முஸ்லிம் நாடுகள் இருந்த போது மக்கா, மதீனா நகரங்களும் துருக்கி ஷைத்தான்களின் ஆதிக்கத்தில் இருந்தன. (துருக்கியர்கள் உலக முஸ்லிம் நாடுகளுக்கு தலைமை வகித்ததால் நம்மையும் துருக்கர் எனச் சொல்லி பின்னர் துலுக்கர் என்று ஆனது.) இவர்கள் ஆட்சியில் இருந்த போது இப்போது நாகூரிலும், அஜ்மீரிலும் நடப்பதை மிஞ்சும் அளவுக்கு அல்லாஹ்வுக்கு இணைவைத்தலும், கணக்கிலடங்காத பித்அத்களும் அறங்கேறின. பத்ருப்போர் நடந்த இடத்திலும், உஹதுப் போர் நடந்த இடத்திலும் நூற்றுக்கணக்கான […]

ஹுசைன் என்னைச் சேர்ந்தவர் என்பதன் பொருள் என்ன?

ஹுசைன் என்னைச் சேர்ந்தவர் என்பதன் பொருள் என்ன?  கேள்வி: ஹுசைன் என்னைச் சேர்ந்தவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாகவும் அதனால் தான் ஷியா கொள்கையில் தான் இருப்பதாகவும் ஒரு ஷியா பிரிவைச் சேர்ந்தவர் கூறுகிறார். இதற்கு என்ன விளக்கம்? பதில்:  ஹுசைன் என்னைச் சார்ந்தவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் நூற்களில் ஒரு செய்தி இடம் பெற்றுள்ளது. ஹுசைன் எனக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது இதன் பொருள். நபியவர்கள் ஹுசைன் […]

முதலில் இஸ்லாத்தை ஏற்ற மதீனாவாசி யார்?

முதலில் இஸ்லாத்தை ஏற்ற மதீனாவாசி யார்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரம் செய்த துவக்க காலத்தில் மதீனாவைச் சேர்ந்த யாரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை. பின்னர் ஹஜ் செய்ய வரும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு ஹிஜ்ரத்துக்கு ஒரு ஆண்டுக்கு முன்னர் பன்னிரண்டு பேர் கொண்ட குழுவினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இரகசியமாகச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். நீங்கள் மதீனா வந்தால் எங்கள் மனைவி மக்களைக் காப்பது போல் […]

பள்ளிவாசலில் உறங்கலாமா?

பள்ளிவாசலில் உறங்கலாமா? குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கவும். பள்ளியில் உறங்குவது தவறான காரியமல்ல. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் பள்ளியில் உறங்கியுள்ளனர். இதை நபியவர்கள் தடை செய்யவில்லை. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: மணமாகாத, குடும்பமில்லாத இளைஞனாக நான் இருந்த போது நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் (தங்கி) நான் உறங்கிக் கொண்டிருந்தேன். நூல்: புகாரி-440  சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வியர் […]

மக்களிடம் நிதி திரட்டாமல் தப்லீக் ஜமாஅத்தைப் போல் செயல்பட்டால் என்ன?

மக்களிடம் நிதி திரட்டாமல் தப்லீக் ஜமாஅத்தைப் போல் செயல்பட்டால் என்ன? மக்களிடம் நிதி திரட்டாமல் பணிசெய்ய முடியாதா? நாம் நடத்தும் அனைத்து மார்க்கப் பணிகளுக்கும் மக்களிடம் பணம் பெறப்படுகிறது. இதுதான் நிலையா? இது எல்லாம் இல்லாமல் தப்லீக் என்ற இயக்கம் மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து உலகம் முழுவதும் பரவி விட்டனர். நம் ஏன் மக்களை நேரடியாகச் சென்று சந்திப்பது இல்லை? பெரும்பாலும் மறைமுகமாகவே அவர்களை தவ்ஹீத் பக்கம் அழைக்கிறோம்? இவர்களைப் போன்று பொருட்செலவில்லாமல் யாரிடமும் […]

இஸ்லாத்தில் இணைந்து கொள்வதற்கான வழிமுறை என்ன?

இஸ்லாத்தில் இணைந்து கொள்வதற்கான வழிமுறை என்ன? வேறு கொள்கையில் உள்ளவர் இஸ்லாத்திற்கு வர விரும்பினால் இதற்காக அவர் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. இதற்கு மற்ற மதங்களில் இருப்பதைப் போன்ற சடங்கு சம்பிரதாயங்கள் இஸ்லாத்தில் கிடையாது. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு (வணங்குவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உளமாறக் கூறுகிறேன்.  முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் அடிமை என்றும் அவனுடைய தூதர் என்றும் உளமாறக் கூறுகிறேன்) […]

மஹ்தீ என்பவர் யார்

மஹ்தீ என்பவர் யார் எதிர் காலத்தில் மஹ்தீ என்ற ஒருவர் பிறக்கவுள்ளார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். மஹ்தீ குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன என்பது உண்மை என்றாலும் பொய்யான ஹதீஸ்களும் கட்டுக்கதைகளும் மிக அதிகமாக உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சில போலிகள் முஸ்லிம் சமுதாயத்தை ஒவ்வொரு காலத்திலும் வழி கெடுத்து வருகின்றனர். முதலில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் மஹ்தீ என்பவருக்கு மார்க்க அடிப்படையில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அவர் […]

ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும் ?

ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும் ? ஜஸாகல்லாஹு கைரா என்ற அரபு வாசகத்திற்கு அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக என்பது பொருள். ஒருவர் நமக்கு உதவி செய்தால் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இவ்வாறு கூறலாம். இவ்வாறு கூறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். 1958 حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الْمَرْوَزِيُّ بِمَكَّةَ وَإِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ قَالَا حَدَّثَنَا الْأَحْوَصُ بْنُ جَوَّابٍ عَنْ سُعَيْرِ بْنِ الْخِمْسِ […]

சீட்டு குலுக்கிப் போட்டு முடிவு செய்யலாமா?

சீட்டு குலுக்கிப் போட்டு முடிவு செய்யலாமா? சீட்டுக் குலுக்கிப் போடுதலில் இரு வகைகள் உள்ளன. மனிதர்களுக்கு மத்தியில் யாருக்கு முன்னுரிமை அளிக்கலாம் என்பதை முடிவு செய்யத் தகுந்த காரணம் இல்லாமல் இருந்தால் அப்போது சீட்டுக் குலுக்கிப் போட்டு ஒருவருக்கு முன்னுரிமை அளித்தல் ஒரு வகை. இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும். நாம் செய்ய நினைக்கின்ற இரண்டு காரியங்களில் எதைச் செய்யலாம் என்று குழப்பம் வரும் போது அதில் ஒன்றைத் தேர்வு செய்வதற்காக சீட்டுக் குலுக்கிப் போடுதல் மற்றொரு வகை. […]

அய்யூப் நபி வரலாற்றில் கட்டுக்கதை

அய்யூப் நபி வரலாற்றில் கட்டுக்கதை இந்த வசனத்திற்கு (38:44) விளக்கம் என்ற பெயரில் பல்வேறு கதைகளை விரிவுரையாளர்கள் எழுதி வைத்துள்ளனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கூறியுள்ள கதையின் கருத்து இதுதான். அய்யூப் நபி அவர்கள் தமது மனைவியை நூறு கசையடி அடிப்பதாகச் சத்தியம் செய்தார்களாம். அந்தச் சத்தியத்தை நிறைவேற்றும் முகமாக நூறு கிளைகளுடைய புல்லை எடுத்து அதனால் மனைவியை ஒருமுறை அடித்தார்களாம். நூறு கிளைகளுடைய புல்லைக் கொண்டு அடித்ததால் இது நூறு தடவை அடித்ததற்குச் சமமாகி விட்டதாம்! அவர் […]

தாயம், பகடை, லுடோ விளையாடலாமா?

தாயம், பகடை, லுடோ விளையாடலாமா? பதில் தாயக்கட்டைகள் மூலம் காய் நகர்த்தும் விளையாட்டு தாயம் பகடை மற்றும் பல பெயர்களில் சொல்லப்படுகிறது. இது பல வகைகளில் அமைந்துள்ளது. சோவி எனும் கடல் சிற்பிகளைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எடுத்துக் கொள்வார்கள். அதைக் குலுக்கிப் போடுவார்கள். அவை கவிழ்ந்து விழுந்தால் அதற்கு ஒரு எண், மல்லாக்க விழுந்தால் அதற்கொரு எண் என முடிவு செய்து வைத்து இருப்பார்கள். இராமநாதபுரம் மாவட்டத்தில் இதைச் சோவி விளையாட்டு என்பார்கள். சில பகுதிகளில் புளியங்கொட்டைகளைக் […]

குழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்?

குழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்? கீழ்க்காணும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா என்பதற்கு விளக்கம் தரவும்! மிஹ்ராஜ் பயணத்தின் போது ஒரு இடத்தில், கஸ்தூரியை விட மிக்க வாசனையைக் கொண்ட அதிசயமான மணமொன்றினை நுகர்ந்த. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.  ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் அதைப் பற்றி கேட்டார்கள். அதற்கு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “இந்த வாசனை ‘மாஷித்தா’வும் அவருடைய குடும்பத்தினர்களும் இருக்கக் கூடிய (கப்ர் அல்லது சுவர்க்க மாளிகை) இடத்திலிருந்து வருகின்ற வாசனை” என்று கூறினார்கள். தொடர்ந்து […]

அபாபீல் பறவைகள் இன்றும் உயிருடன் உள்ளனவா?

அபாபீல் பறவைகள் இன்றும் உயிருடன் உள்ளனவா? கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஃபேஸ் புக் மற்றும் வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி மிகவும் பரபரப்பாகப் பரப்பப்பட்டது; கஃபத்துல்லாஹ்வை அழிக்க வந்த யானைப் படைகளை அழிக்க, அல்லாஹ் அனுப்பிய அபாபீல் பறவைகள் இன்றளவும் உயிரோடு உள்ளன என்று சொல்லி கீழ்க்கண்ட செய்தி காட்டுத்தீயாய் மக்கள் மத்தியில் பரவியது: மக்காவை அழிக்க யானைப் படைகள் வந்தபோது, அப்படைகளை அழிக்க இறைவன் அனுப்பிய பறவையினம். அழிந்து விட்டதாகக் கூறப்படும் அபாபீல் பறவை […]

தவ்ஹீத் ஜமாஅத்தினர் வஹ்ஹாபிகளா?

தவ்ஹீத் ஜமாஅத்தினர் வஹ்ஹாபிகளா? கேடுகெட்ட துருக்கியர்கள் ஆளுகையின் கீழ் முஸ்லிம் நாடுகள் இருந்த போது மக்கா மதீனா நகரங்களும் துருக்கி ஷைத்தான்களின் ஆதிக்கத்தில் இருந்தன. (துருக்கியர்கள் உலக முஸ்லிம் நாடுகளுக்கு தலைமை வகித்ததால் நம்மையும் துருக்கர் எனச் சொல்லி பின்னர் துலுக்கர் என்று ஆனது.) இவர்கள் ஆட்சியில் இருந்த போது இப்போது நாகூரிலும் அஜ்மீரிலும் நடப்பதை மிஞ்சும் அளவுக்கு அல்லாஹ்வுக்கு இணைவத்தலும் கணக்கிலடங்காத பித்அத்களும் அறங்கேறின. பத்ருப்போர் நடந்த இடத்திலும் உஹதுப் போர் நடந்த இடத்திலும் நூற்றுக்கணக்கான […]

அல்லாஹ் தன்சாயலில் ஆதமைப் படைத்தானா?

அல்லாஹ் தன்சாயலில் ஆதமைப் படைத்தானா? ஆம் அல்லாஹ்வை யாரும் பார்த்ததில்லை. அப்படியானால் ஆதம் அலை அவர்களை தன் சாயலில் அல்லாஹ் படைத்தான் என்று எப்படி கூற முடியும்? ஆதம் அலை அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்திருப்பார்களே அப்படியானால் அல்லாஹ்வை யாரும் பார்த்த்தில்லை என்ற ஹதீஸ் பலவீனமானதா? பதில் அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை தன்னுடைய தோற்றத்தில் படைத்துள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தெரிவித்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமை தன்னுடைய உருவத்தில் படைத்தான். […]

ஆதம் அலை அவர்களுக்கு தொப்புள் உண்டா?

ஆதம் அலை அவர்களுக்கு தொப்புள் உண்டா? உண்டு ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகியோருக்கு தொப்புள் கிடையாது என்று கூறப்படுவது உண்மையா? பதில் அவ்விருவருக்கும் தொப்புள் உண்டா என்று கேட்டுள்ளீர்கள். தொப்புள் என்பது கருவில் இருக்கும் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் செல்லும் குழாயின் இணைப்பாகவுள்ளது. கருவில் வளரும் குழந்தைக்குத் தான் தொப்புள் கொடி இருக்கும். இறைவனால் நேரடியாக இருவரும் படைக்கப்பட்டதால் தொப்புள் இருக்க முடியாது என்ற லாஜிக்கின் அடிப்படையில் அவ்விருவருக்கும் தொப்புள் கிடையாது என்று சிலர் கூறுகின்றனர். […]

பல நபிமார்களுக்குத் தடயம் இல்லாமல் போனது ஏன்?

பல நபிமார்களுக்குத் தடயம் இல்லாமல் போனது ஏன்? உலகம் முழுவதும் நபிமார்கள் அனுப்பப்பட்டிருந்தும் அரேபியாவைத் தவிர மற்ற இடங்களில் ஏன் அதற்கான அடையாளம் இல்லை. உதாரணமாக நூஹ் நபி வரலாற்றுக்கு ஆதாரமாக கப்பல்.   பதில் மனித சமுதாயத்துக்குச் சான்றாக எதை ஆக்கலாம் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அவன் விரும்பும் பொருட்களை அத்தாட்சியாக ஆக்குவான். நபி நூஹ் (அலை) அவர்களின் கப்பலை இந்தச் சமுதாயத்துக்கு அத்தாட்சியாக ஆக்கியது போன்று கொடுங்கோல அரசன் […]

நான்கு இமாம்கள் பற்றி நபியவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்களா?

இல்லை ஈஸா நபி, மஹ்தீ ஆகியோர் பற்றி நபியவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். அது போல் நான்கு இமாம்கள் வருகை குறித்து முன்னறிவிப்பு உண்டா?   பதில் ஈசா (அலை) அவர்களும் மஹ்தீ அவர்களும் வருவார்கள். உலகத்தில் நல்லாட்சி புரிவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். ஆனால் இமாம் அபூஹனீஃபா, இமாம் ஷாஃபி, இமாம் மாலிக், இமாம் அஹ்மது ஆகிய நான்கு பேர் குறித்து எந்த முன்னறிவிப்பையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. […]

அய்யூப் நபி உடல் முழுதும் புழு வைத்து இருந்ததா?

அய்யூப் நபி உடல் முழுதும் புழு வைத்து இருந்ததா? இல்லை. ஏதோ ஒருவிதமான நோய். இறைத்தூதர் அய்யூப் (அலை) அவர்கள் தோல் நோயால் பாதிக்கப்பட்டு அவர்களின் உடல் முழுவதும் புழுக்கள் பரவியது என்றும் சில புழுக்கள் உடலிலிருந்து கீழே விழுந்தால் அவர்கள் அவற்றை எடுத்து மீண்டும் தன் உடலுக்குள் செலுத்துவார்கள் என்றும் கூறப்படுகின்து. இது உண்மையா? ரனீஸ் முஹம்மத் பதில் சில ஆலிம்கள் இப்படியொரு பொய்யான கதையை உரைகளில் கூறி வருகின்றனர். சில தஃப்ஸீர் நூற்களில் இந்தக் கதை […]

ஒட்டகப்போரின் பின்னணி என்ன?

அலீ (ரலி) அவர்களுக்கும் ஆயிஷா (ரலி) அவர்களுக்குமிடையே நடந்து போருக்கு என்ன காரணம்?   பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு மூன்றாவது ஆட்சித் தலைவராக இருந்த உஸ்மான் (ரலி) அவர்களைக் கயவர்கள் கொலை செய்தனர். உஸ்மான் (ரலி) அவர்களுக்குப் பிறகு அலீ (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக வருகிறார்கள். உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், உடனே அவர்களுக்கான தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் […]

ஆதம் நபி எந்த நாட்டில் இறக்கப்பட்டார்கள்?

ஆதம் நபி எந்த நாட்டில் இறக்கப்பட்டார்கள்? மக்காவாக இருக்கலாம் ஆதம் (அலை) அவர்கள் எங்கு இறக்கப்பட்டார்கள் என்பது குறித்து நேரடியாக குர்ஆன் ஹதீஸில் எந்தக் குறிப்பும் இல்லை. இது குறித்து ஏராளமான கதைகள் கூறப்படுகின்றன. இவற்றில் எதற்குமே ஆதாரம் இல்லை. ஆனால் முதன்முதலில் அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட ஆலயம் மக்காவில் உள்ள கஃபா தான் என்று அல்குர்ஆன் கூறுகின்றது. அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். அல்குர்ஆன் […]

நகத்தை வெட்டி மண்ணில் புதைக்க வேண்டுமா?

நகத்தை வெட்டி மண்ணில் புதைக்க வேண்டுமா? இது தொடர்பாக ஒரு நபிமொழி இடம் பெற்றுள்ளது. முடி, நகம் இவற்றை புதைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி), நூல்கள் : தப்ரானீ-கபீர், பாகம் : 15, பக்கம் : 408,ஷுஅபுன் ஈமான்-பைஹகீ, பாகம் : 8, பக்கம் : 44, முஸன்னஃப் அபீ ஷைபா, பாகம் : 8, பக்கம் : 47, லுஃபாவுல் உகைலீ, பாகம் […]

நபிகளாருக்கு சஃபர் மாதத்தில்தான் நோய் ஏற்பட்டதா?

நபிகளாருக்கு சஃபர் மாதத்தில்தான் நோய் ஏற்பட்டதா? நபி (ஸல்) அவர்களுக்கு பல தடவை நோய் ஏற்பட்டுள்ளது. மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்று அவர்களை என் கையால் தொட்டு, “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்; உங்களால் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் […]

பருவ மழையைப் பாழாக்கிய தமிழகம்

  கொட்டித் தீர்த்தது மழை, சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது, பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை என்ற செய்திகள் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. உண்மையில் தமிழகத்திற்குத் தேவையான மழைபெய்ந்து விட்டதா? என்றால் நிச்சயம் இல்லை என்று சொல்லலாம். இதை வரும் கோடைகாலங்களில் நாம் உணருவோம். வடகிழக்குப் பருவமழைதான் தமிழகத்தின் தண்ணீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்கிறது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் இந்தியத் தீபகற்பத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம்  என்றழைக்கப்படுகின்றது. இக்காலமே. தென்னிந்திய தீபகற்பத்தின் முக்கிய […]