Search Posts

Category: சட்டங்களின் சுருக்கம்

u350

14) இஃதிகாஃப் சட்டங்கள் சட்ட சுருக்கம்

இஃதிகாப் என்ற சொல்லுக்கு ”தங்குதல்” என்ற பொருள். பள்ளியில் தங்குவதைக் குறிக்கும். இதுவும் ஓரு வணக்கமாகும். இந்த வணக்கம் முந்தைய காலத்திலும் இருந்துள்ளது.(திருக்குர்ஆன்: 2:125) நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர். நூல்: புகாரி-813 இஃதிகாஃப் இருப்பதின் நோக்கம் அதிகமான அமல்களைச் செய்வதற்கும், அந்த அமல்கள் ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவில் செய்து நன்மைகளை அள்ளிக் கொள்ள வேண்டும் என்பதே ரமளானில் இஃதிகாஃப் இருப்பதின் நோக்கம். […]

13) குர்பானியின் சட்டங்கள் சட்ட சுருக்கம்

குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது. நஸயீ-4361 வசதியுள்ளவர்கள் அவசியம் நிறைவேற்ற வேண்டும். புகாரி-955 கடன் வாங்கி குர்பானி கொடுத்தல் கூடாது. பெருநாள் தொழுகைக்கு முன்பே குர்பானிப் பிராணியை அறுப்பது கூடாது. புகாரி-954 தொழுகைக்கு முன் குர்பானி கொடுத்திருந்தாலும் தவறாகக் கொடுத்ததினால் திரும்பக் கொடுக்க வேண்டும். புகாரி-5500 குர்பானிப் பிராணிகள் ஒட்டகம், ஆடு, மாடு இம்மூன்றும் குர்பானி கொடுக்கத் தகுதியான […]

12) கிரகணத் தொழுகை சட்ட சுருக்கம்

சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது சிறப்புத் தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். புகாரீ-1046  கிரகணம் ஏற்படும் போது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகை வாருங்கள்) என்று மக்களுக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும். புகாரி-5051 பள்ளியில் தொழ வேண்டும். புகாரி-1046 இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும். புகாரி-1046 இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும். புகாரி-1065 ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டு ருகூவுகள் செய்ய வேண்டும். புகாரி-1046 நிலை, ருகூவு, ஸஜ்தா ஆகியவை மற்றத் தொழுகைகளை […]

11) இரு பெருநாள் தொழுகையின் சட்ட சுருக்கம்

சூரியன் உதித்த பின்னர் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அதிக கால தாமதம் செய்யக் கூடாது. புகாரி-951 இரு பெருநாள் தொழுகையையும் திடலில்தான் தொழவேண்டும். புகாரி-956 அந்த நாளில் பரக்கத்தையும் புனிதத்தையும் எதிர்ப்பார்த்து இறைவனை பெருமை படுத்தும் விதமாக அல்லாஹீ அக்பர் என்ற தக்பீரை அதிகமாக மனத்திற்குள் கூறவேண்டும், பிரார்த்தனையை அதிகமாக செய்ய வேண்டும். புகாரி-971 பெண்களும் தொழும் திடலுக்கு கட்டாயம் வரவேண்டும். புகாரி-971 மாதவிடாய் பெண்களும் திடலுக்கு கட்டாயம் வரவேண்டும். தொழுகையில் பங்கேற்காமல் இறைவனின் பரக்கத்தை எதிர்பார்த்து […]

10) மழைத் தொழுகை சட்ட சுருக்கம்

மழைத் தொழுகை  சூரியன் உதயமான பிறகு அதிகாலையில் தொழ வேண்டும். திடலில் தொழ வேண்டும்.(புகாரி-1012)  தொழுகைக்கு முன்பு இமாம் மிம்பர் மீது நின்று தக்பீர் சொல்லி அல்லாஹ்வைப் பெருமைப்படுத்த வேண்டும். துஆ செய்ய வேண்டும். புறங்கைகளை வானத்தை நோக்கி உயர்த்திப் பிரார்த்தனையில் ஈடுபடவேண்டும்.(முஸ்லிம்-1632)  இமாமைப் போன்று மற்றவர்களும் இரு கைகளையும் உயர்த்திப் பிரார்த்தனை செய்ய வேண்டும். இமாம் மக்களை நோக்கி இருந்தவாறு சிறிது நேரம் பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு கிப்லாவை நோக்கித் திரும்பி மேலாடையை மாற்றிப் […]

09) குலாவின் தெளிவான சட்டங்கள்

குலஃ உடைய சட்டங்களின் சுருக்கம் ஒரு பெண்ணிற்குத் தன் கணவனைப் பிடிக்கவில்லையானால் அவள் அந்தப் பகுதியின் தலைவரிடம் முறையிட வேண்டும். அவள் திருமணத்தின் போது கணவனிடமிருந்து மஹராக எதை வாங்கினாளோ அதைக் கணவனிடமே திருப்பி ஒப்படைக்குமாறு தலைவர் அவளுக்குக் கட்டளையிட வேண்டும். அந்த மஹரைப் பெற்றுக் கொண்டு உடனே அவளை விட்டுப் பிரிந்துவிடுமாறு அந்தக் கணவருக்கு தலைவர் கட்டளையிட வேண்டும். அந்தக் கட்டளைக்கு அவன் கட்டுப்படாவிட்டாலும் கூட தலைவர் அந்தத் திருமண உறவை இரத்துச் செய்ய வேண்டும். […]

08) உணவுகள் சட்ட சுருக்கம்

உண்ணக்கூடாதவைகளில் சில. 1) தாமாகச் செத்தவை (முறையாக அறுக்கப்படாமல் செத்தவை. சாகடிக்கப்பட்டவை) 2) கழுத்து நெறிக்கப்பட்டுச் செத்ததும் 3) அடிப்பட்டுச் செத்ததும், 4) கீழே விழுந்து செத்ததும் 5) முட்டப்பட்டுச் செத்ததும், 6) வன விலங்குகளால் சாப்பிடப்பட்டுச் செத்ததும் உண்ண ஹலாலான பிராணி செத்துவிட்டால், வேறு வகையில் பயன்படுத்தலாம். (உதா, ஆட்டின் தோல்) உண்ண ஹராமாக்கப்பட்ட பிராணியை, கொழுப்பு போன்ற அதன் பிற பாகங்ளை விற்கவும், வேறு வகையில் பயன்படுத்தவும் கூடாது. (உதா, பன்றியின் கொழுப்பு) வேட்டை பிராணிகள் […]

07) ஜனாஸா தொழுகை சட்ட சுருக்கம்

ஜனாஸா தொழுகை கட்டாய சமுதாய கடமை ஓரிருவர் தொழுதாலும் கடமை நீங்கிவிடும் இறந்தவரின் குடும்பத்தினரே தொழுவிக்க உரிமை படைத்தவர்கள் இறந்தவரை குறுக்கு வசமாக வைக்கவேண்டும். ஆண் ஜனாஸா தலைக்கு நேராக இமாம் நிற்கவேண்டும் பெண் ஜனாஸா வயிற்றுக்கு நேராக இமாம் நிற்கவேண்டும் உளு அவசியம், கிப்லாவை முன்னோக்க வேண்டும் ருகூவு, ஸஜ்தா, அத்தஹியாத்து கிடையாது நான்கு அல்லது ஐந்து தடவை தக்பீர் கூறலாம் முதல் தக்பீருக்கு பின், சூரதுல் ஃபாத்திஹா அத்தியாயம் ஓத வேண்டும் சத்தமாக அல்லது மெதுவாக ஓதலாம் இரண்டாவதற்கு […]

06) சத்தியம் சட்ட சுருக்கம்

சத்தியம் அல்லாஹ்வின் மீது மட்டுமே செய்யவேண்டும் மற்றதின் மீது சத்தியம் செய்தால், லாயிலாஹ இல்லல்லாஹ் கூற வேண்டும் வாக்குறுதி அடிப்படையிலான சத்தியத்தை நிறைவேற்றுவது அவசியம் சத்தியம் செய்தவர் இயலாவிடில், முறிக்கலாம். முறித்தால் பரிகாரம் செய்யவேண்டும். இன்ஷா அல்லாஹ் சேர்த்துக் கூறினால் பரிகாரம் இல்லை பைஅத் என்றால் உறுதிமொழி என்று பொருள் தொழுகை, நோன்பு போன்ற மார்க்க பைஅத் நபியிடம் மட்டுமே செய்யவேண்டும் கொடுக்கல், வாங்கல் உலக உறுதிமொழி யாரிடமும் செய்யலாம்  பொய் சத்தியம் செய்வது பெரும் பாவம் அவசரப்பட்டு […]

05) நேர்ச்சை சட்ட சுருக்கம்

நேர்ச்சையை தவிர்ப்பது நன்று. துஆ செய்ய செய்துவிட்டால், நிறைவேற்றுவது அவசியம் தவறான நேர்ச்சைகளை நிறைவேற்றக் கூடாது. நேர்ச்சை இஸ்லாமிய அமல்களில் ஒன்றாக இருக்க வேண்டும். அல்லது உலக நன்மையான காரியமாக இருக்கலாம். கூடாத நேர்ச்சைகள் உதாரணத்திற்கு, 1) மௌன விரதம் 2) முடி வெட்டுதல் 3) அலகு குத்துதல் 4) வெறும் காலால் நடத்தல் 5) வெயிலில் நிற்றல் 4) சாப்பிடாமல் இருத்தல் 5) செருப்பு, சட்டை அணியாதிருந்தல் 6) முழு சொத்தையும் தர்மம் செய்தல் போன்றவை […]

04) இரவு தொழுகை சட்ட சுருக்கம்

ரமளான் மற்றும் அனைத்து இரவுகளிலும்  தொழப்படும் சுன்னத்தான தொழுகையே இரவுத் தொழுகை எனப்படும். பல்வேறு பெயர்கள் – 1) ஸலாத்துல் லைல் 2) கியாமுல் லைல் 3)  தஹஜ்ஜுத் 4) வித்ர் தராவீஹ் என்ற பெயர் ஹதீஸில் இல்லை. ரமளான் இரவுத் தொழுகையினால் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் ஆரம்ப நேரம் இஷாவிற்கு பின்னிலிருந்து இறுதி நேரம் பஜ்ர் வரை எனினும், வித்ரை மட்டும் பஜ்ருக்கு பின்னரும் தொழலாம் இரவுத்தொழுகை தொழாவிடில், பகலில் 12 ரகஅத் தொழலாம் எண்ணிக்கை, 4+5 […]

03) ஃபித்ராவின் சட்ட சுருக்கம்

  பெருநாள் தொழுகைக்கு முன், ஃபித்ரா கட்டாயம் தரவேண்டும். நோன்பில் குறைகள், ஏழைகளுக்கு பரிகாரமாக ஃபித்ரா உள்ளது வேலையாள் தவிர, குழந்தை உட்பட வீட்டில் உள்ள முஸ்லிம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என தரவேண்டும் ஒரு ஸாவு என்பது 4 முகத்தல் அளவை. இரு கைகள் இணைக்கும் போது எவ்வளவு கொள்ளுமோ, அதுவே ஒரு முகத்தல். அரிசி, கோதுமை என தரலாம் உணவாக அல்லது பணமாக தரலாம் மட்டரகமானதை தரக்கூடாது (ஹாகிம்) கூட்டாக பெற்று விநியோகிப்பதே சிறந்தது.

02) நோன்பின் சட்ட சுருக்கம்

ரமளான் நோன்பு ஆண், பெண் இருபாலருக்கும் கட்டாய கடமை இறையச்சத்தை அதிகமாக்குவதும், பொய்யான செயல்களை விட்டுஒதுங்குவதுமே நோன்பின் நோக்கங்கள் நோன்பிற்குரிய கூலி முன் பாவங்கள் மன்னிக்கப்படுதல் நோன்பிலிருந்து நிரந்தர விலக்கு பெற்றவர்கள் – தள்ளாத வயதினர், நிரந்தர நோயாளிகள் தற்காலிக விலக்கு பெற்றவர்கள் – 1)பிரயாணிகள் 2)தற்காலிக நோயாளிகள், 3)கர்ப்பிணிகள், 4)பாலூட்டும் தாய்மார்கள்,  5)மாதவிடாய் பெண்கள் பிரயாணிகள் நோன்பை விடுவது கட்டாயம் அல்ல. விடுபட்ட நோன்பை வைப்பதற்கு காலக்கெடு எதுவுமில்லை. பிறையை கண்ணால் பார்த்த பின்பே நோன்பு நோற்க […]

01) காலுறை மஸஹ் சட்ட சுருக்கம்

ஆண்களும், பெண்களும் காலுறை அணிந்தால் மஸஹ் செய்யலாம் மேற்பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொள்வது மஸஹ் ஆகும் நிபந்தனை – உளுவுடன், கால் தூய்மையாக உள்ள நிலையில், காலுறை அணிந்திருக்க வேண்டும். பிறகு உளு முறிந்து உளு செய்யும் போது, கால்களை கழுவாமல் மஸஹ் செய்யலாம் மலஜலம் கழித்த பிறகு உளு செய்யும் போதும், கால்களை கழுவாமல் மஸஹ் செய்யலாம் அதிகபட்சம் ஒரு நாள் (24 மணி நேரம்) வரை மஸஹ் செய்யலாம். பிரயாணியாக இருந்தால் 3 நாள் […]