Tamil Bayan Points

Category: சுப்ஹான மவ்லித் ஓர் ஆய்வு

u452

8) முடிவுரை

பொய்யும் புரட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தவுடன் அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் பேரக் குழந்தையை அணைத்துக் கொண்டு அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிந்து விட்டுப் பாடியதாக ஒரு கவிதை ஸுப்ஹான மவ்லூதில் இடம் பெற்றுள்ளது. அப்பாடலில், اَنْتَ الَّذِيْ سُمِّيْتَ فِى الْقُرْآنِ اَحْمَدَ مَكْتُوْبًا عَلَى الْجِنَانِ என்று கூறப்படுகிறது. குர்ஆனிலேயே உங்களைப் பற்றி அஹ்மத் என்று கூறப்பட்டுள்ளது. சொர்க்கங்களிலும் இது எழுதப்பட்டுள்ளது என்பது இதன் பொருள். கைக்குழந்தையாக இருந்த […]

7) வானவர்கள் மீது அவதூறு

வானவர்கள் மீது அவதூறு இந்த மவ்லூதின் கடைசிப் பாடலாக ‘யாஸையதீ…’ என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடலின் தலைப்பில் ‘இது ஜிப்ரீல் (அலை அவர்களால் பாடப்பட்டது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்க்க அறிவு சிறிதும் இல்லாதவர்களால் தான் மவ்லூது இயற்றப்பட்டது என்பதற்கு இந்தத் தலைப்பு ஒன்றே போதிய சான்றாக அமைந்திருக்கிறது. ஜிப்ரீல் (அலை பாடிய(? பாடலைக் கேளுங்கள்! اِنِّيْ اِذَا مَسَّنِيْ ضَيْمٌ يُرَوِّعُنِيْ اَقُوْلُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا سَنَدِيْ كُنْ لِيْ شَفِيْعًا اِلَى […]

6) உணவளிக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கு உண்டா?

உணவளிக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கு உண்டா? بَسَطْتُّ كَفَّ فَاقَتِيْ وَالنَّدَمِ اَرْجُوْ جَزِيْلَ فَضْلِكُمْ وَالْكَرَمِ مُسْتَشْفِعًا نَزِيْلَ هَذَالْحَرَمِ فَلاَحِظُوْنِيْ بِدَوَامِ الْمَدَدِ فَاَنْجِدُوالْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ وَاَطْفِئُوْا بِالْبَسْطِ وَهْجَ الْحُرَقِ وَاَبْرِدُوْا بِاللُّطْفِ حَرَّ الْكَبِدِ எனது வறுமை, கவலை காரணமாகக் கையேந்துகிறேன். உங்களின் அளப்பரிய அருளையும், வள்ளல் தன்மையையும் நான் நம்பியுள்ளேன். இந்த ஹரமில் (மதீனாவில் தங்கியிருக்கும் உங்களின் பரிந்துரையை வேண்டுகிறேன். என்னை நிரந்தரமான உதவி கொண்டு கவனித்து விடுங்கள்! […]

5) நோய் நிவாரணம் தருவது நபிகள் நாயகமா?

நோய் நிவாரணம் தருவது நபிகள் நாயகமா? اَلسَّلاَمُ عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ ‘நோய் நீக்குபவரே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும்’ وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا لَدَيْهِ بُرْءُ السَّقَامِ ‘நீ நோயாளியாக இருந்தால் அதற்கான நிவாரணம் அவரிடமே (நபியிடமே உள்ளது’ وَمَرِيْضًا اَنْتَ عَائِدُهُ قَدْ اَتَاهُ اللّهُ بِالْفَرَجِ ‘(நபியே நீங்கள் எந்த நோயாளியை விசாரிக்கச் சென்றாலும் அல்லாஹ் அவருக்கு நிவாரணம் வழங்கி விடுவான்!’ என்றெல்லாம் ஸுப்ஹான மவ்லிதில் கூறப்பட்டுள்ளது. மனிதனுக்கு நோய்களை ஏற்படுத்துபவனும், அதை […]

4) மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள்

மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள் இனி மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள் சிலவற்றைக் காண்போம். அ) குர்ஆனை இழிவுபடுத்தும் போக்கு மவ்லிதுகள் வணக்கமாக மாறிவிட்ட பின் ஏற்பட்ட தீய விளைவுகளில் முக்கியமானது அதைக் குர்ஆனுக்குச் சமமாக சில சமயம் குர்ஆனுக்கும் மேலாகக் கருதும் நிலை ஏற்பட்டதாகும். அல்லாஹ்வுடைய வேதம் அல்குர்ஆன் வீடுகள் தோறும் இவ்வளவு முக்கியத்துவத்துடன் ஓதப்படுவதில்லை. மங்கலமான நிகழ்ச்சிகளுக்கு மவ்லிது என்றும் அமங்கலமான நிகழ்ச்சிகளுக்கு குர்ஆன் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. பொருள் தெரியாமல் ஓதினாலும் ஒவ்வொரு எழுத்துக்கும் […]

3) மவ்லிதின் பிறப்பிடம், எழுதியவர்

மவ்லிதின் பிறப்பிடம் உலகத்தில் முஸ்லிம்கள் இல்லாத நாடுகளே இல்லை என்ற அளவுக்கு இஸ்லாம் இன்று வளர்ந்துள்ளது. மவ்லிதுகள் மார்க்கத்தில் உள்ளதாக இருந்தால் உலக முஸ்லிம்கள் அனைவரிடமும் மவ்லிது ஓதும் வழக்கம் இருக்க வேண்டும். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பிறந்த சவூதி அரபியாவிலும் மவ்லிதைப் பாடும் போதே அதன் பொருளை விளங்கிடக் கூடிய மக்கள் வாழும் மற்ற அரபு நாடுகளிலும் மவ்லிதுகள் எதுவுமே இல்லை. இல்லை என்பது மட்டுமல்ல. மவ்லிது நூலுடன் யாரேனும் அரபு நாட்டுக்குள் நுழைந்தால் […]

2) மவ்லிதின் தோற்றம்

மவ்லிதின் தோற்றம் எந்த ஒரு காரியமும் வணக்கமாகக் கருதப்பட வேண்டுமானால் – அதைச் செய்வதால் மறுமையில் ஏதேனும் நன்மை கிடைக்கும் என்று நம்ப வேண்டுமானால் – அந்தக் காரியம் நபிகள் நாயகம் ஸல் அவர்களால் கற்றுத்தரப்பட்டிருக்க வேண்டும். அல்லது அவர்கள் முன்னிலையில் அக்காரியம் நிகழ்ந்து அதை அவர்கள் அங்கீகரித்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத எந்தக் காரியமும் ஒரு வணக்கமாக – மறுமையில் நன்மையளிப்பதாக ஆக முடியாது. இது இஸ்லாத்தின் அடிப்படை விதி. இந்த விதியைப் புரிந்து கொள்வதற்கு […]

1) முன்னுரை

ஸுப்ஹான மவ்லிது தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் மவ்லிதுகள் எனும் பாடல்களைப் புனிதமான வணக்கமாக எண்ணி ஓதி வருகின்றனர். இஸ்லாத்தின் மிக முக்கியக் கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய கடமைகளை நிறைவேற்றாதவர்கள் கூட இந்த மவ்லிதுகளைப் பாடுவதை மட்டும் விடாப்பிடியாக நிறைவேற்றி வருவதிலிருந்து மவ்லிதுகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை நாம் அறியலாம். நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பெயரால் ஸுப்ஹான மவ்லிது, பர்ஸஞ்சி மவ்லிது,புர்தா போன்ற பாடல்கள், நபிகள் நாயகம் ஸல் அவர்களின் […]