Tamil Bayan Points

காதலிக்கலாமா ?

கேள்வி-பதில்: பெண்கள்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

காதலிக்கலாமா ?

காதல் என்பதற்கு ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புதல் என்றோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணை விரும்புதல் என்றோ பொருள் கொண்டால் அதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. இன்னும் சொல்லப் போனால் விரும்பித் தான் திரும்ணமே செய்ய வேண்டும்.

இதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. வலிமையான ஒரே ஒரு ஆதாரத்தை மட்டும் இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.

 காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 2:235

கணவனை இழந்த பெண்கள் மற்ற பெண்களை விட அதிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டவர்கள். அவர்கள் அலங்காரம் செய்யக்கூட அவர்களுக்கு அனுமதி இல்லை. கனவனை இழந்து இத்தாவில் இருக்கும் போது அவர்களைத் திருமணம் செய்து கொள்வதாக அவர்களிடம் ஆண்கள் வாக்களிக்கக் கூடாது; ஆனாலும் சாடைமாடையாக் பேசலாம் என்று அல்லாஹ் கூறுகிறான். இத்தாவில் இல்லாத மற்ற பெண்களிடம் ஆண்கள் பேசலாம் என்பதும் தந்து விருப்பத்தை அவர்களிடம் தெரிவிக்கலாம் என்பதும், திருமணம் செய்து கொள்வதாக வாக்களிக்கலாம் என்பது இந்த வசனத்தில் அடங்கியுள்ளது.

இது தான் அனுமதிக்கப்பட்ட காதல் என்பது.

இதைக் கடந்து திரும்ணத்துக்கு முன் ஒரு பெண்ணுடன் தனித்திருப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

 ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி 3006,

 திருமணம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரின் முன்னிலையில் இல்லாமல் ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் என்பதும் நபி மொழி

(புஹாரி 5233)

இந்த நபிமொழி காதலுக்கு உரிய சரியான் எல்லைக் கோடாக அமைந்துள்ளது. தொலைபேசியில் இருவரும் தனியாகப் பேசுவதும் இதில் அடங்கும். ஏனெனில் நேரில் த்னியாக இருக்கும் போது பேசும் எல்லாப் பேசுக்களையும் பேச வழிவகுக்கும். எனவே தன்னுடன் மற்றொருவரை வைத்துக் கொண்டே தவிர எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் பேசக் கூடாது. திருமணாம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரை அருகில் வைத்துக் கொள்ளச் சொல்வதற்குக் காரணம் எந்த வகையிலும் வரம்பு மீறிவிடக் கூடாது என்பதற்காகத் தான்.

இந்த வரம்பை மீறி சேர்ந்து ஊர் சுற்றுவது தனைமையில் இருப்பது, கணவன் மனைவிக்கிடையே மட்டும் பேசத்தக்கவைகளைப் பேசிக் கொள்வ்தற்கு அனுமதி இல்லை.

இதனால் பாரதூரமான் விளைவுகள் ஏற்படுவதையும் இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.