Tamil Bayan Points

01) காலுறை மஸஹ் சட்ட சுருக்கம்

நூல்கள்: சட்டங்களின் சுருக்கம்

Last Updated on March 5, 2022 by

  • ஆண்களும், பெண்களும் காலுறை அணிந்தால் மஸஹ் செய்யலாம்
  • மேற்பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொள்வது மஸஹ் ஆகும்
  • நிபந்தனை – உளுவுடன், கால் தூய்மையாக உள்ள நிலையில், காலுறை அணிந்திருக்க வேண்டும்.
  • பிறகு உளு முறிந்து உளு செய்யும் போது, கால்களை கழுவாமல் மஸஹ் செய்யலாம்
  • மலஜலம் கழித்த பிறகு உளு செய்யும் போதும், கால்களை கழுவாமல் மஸஹ் செய்யலாம்
  • அதிகபட்சம் ஒரு நாள் (24 மணி நேரம்) வரை மஸஹ் செய்யலாம்.
  • பிரயாணியாக இருந்தால் 3 நாள் வரை செய்யலாம்.
  • குளிப்பு கடமையானால், மஸஹ் செய்யமுடியாது,
  • மேற்புறத்தில் தான் மஸஹ் செய்ய வேண்டும். அடிப்புறம் கூடாது.