Tamil Bayan Points

12) கிரகணத் தொழுகை சட்ட சுருக்கம்

நூல்கள்: சட்டங்களின் சுருக்கம்

Last Updated on December 21, 2023 by

  • சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது சிறப்புத் தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். புகாரீ-1046 
  • கிரகணம் ஏற்படும் போது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகை வாருங்கள்) என்று மக்களுக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும். புகாரி-5051
  • பள்ளியில் தொழ வேண்டும். புகாரி-1046
  • இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும். புகாரி-1046
  • இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும். புகாரி-1065
  • ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டு ருகூவுகள் செய்ய வேண்டும். புகாரி-1046
  • நிலை, ருகூவு, ஸஜ்தா ஆகியவை மற்றத் தொழுகைகளை விட மிக நீண்டதாக இருக்க வேண்டும். புகாரி-1059
  • கிரகணம் ஏற்படும் போது தக்பீர் அதிகம் கூற வேண்டும். மேலும் திக்ர் செய்தல், பாவமன்னிப்புத் தேடல், தர்மம் செய்தல் ஆகியவற்றிலும் ஈடுபட வேண்டும். புகாரி-1059

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *