Tamil Bayan Points

ஜகாத் என்று சொல்லி தான் கொடுக்க வேண்டுமா ?

கேள்வி-பதில்: ஜகாத்

Last Updated on August 26, 2020 by

எவ்வளவு பணம் இருந்தால் ஸகாத் கடமையாகும்? ஸகாத் பணம் என்று சொன்னால் அதை என் உறவினர் வாங்க மாட்டார். எனவே இது ஸகாத் பணம் என்று சொல்லாமல் ஸகாத் கொடுக்கலாமா?

பதில்: இல்லை.
11 பவுன் அளவிற்கு நகையோ அல்லது அதற்கு நிகரான பணமோ இருந்தால் ஸகாத் கடமையாகி விடும். நீங்கள் வீட்டை விற்றதன் மூலம் கிடைத்தத் தொகை இந்த அளவிற்கோ இதை விட அதிகமாகவோ இருந்தால் அப்பணத்துக்கு ஸகாத் கொடுக்க வேண்டும்.

உங்கள் உறவினர் ஏழையாக இருந்தால் அவருடைய மருத்துவ செலவுக்காக உங்களுடைய ஸகாத் பணத்தை அவருக்கு தாரளமாக வழங்கலாம்.

ஸகாத் வாங்குபவரிடம் இது ஸகாத் பணம் என்று சொல்லித் தான் ஸகாத் கொடுக்க வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை. எனவே இதைத் தெரிவிக்காமல் நீங்கள் ஸகாத் கொடுப்பது தவறல்ல.