Tamil Bayan Points

07) ஜனாஸா தொழுகை சட்ட சுருக்கம்

நூல்கள்: சட்டங்களின் சுருக்கம்

Last Updated on December 20, 2023 by

  • ஜனாஸா தொழுகை கட்டாய சமுதாய கடமை
  • ஓரிருவர் தொழுதாலும் கடமை நீங்கிவிடும்
  • இறந்தவரின் குடும்பத்தினரே தொழுவிக்க உரிமை படைத்தவர்கள்
  • இறந்தவரை குறுக்கு வசமாக வைக்கவேண்டும்.
  • ஆண் ஜனாஸா தலைக்கு நேராக இமாம் நிற்கவேண்டும்
  • பெண் ஜனாஸா வயிற்றுக்கு நேராக இமாம் நிற்கவேண்டும்
  • உளு அவசியம், கிப்லாவை முன்னோக்க வேண்டும்
  • ருகூவு, ஸஜ்தா, அத்தஹியாத்து கிடையாது
  • நான்கு அல்லது ஐந்து தடவை தக்பீர் கூறலாம்
  • முதல் தக்பீருக்கு பின், சூரதுல் ஃபாத்திஹா அத்தியாயம் ஓத வேண்டும்
  • சத்தமாக அல்லது மெதுவாக ஓதலாம்
  • இரண்டாவதற்கு பின், நபியின் மீது ஸலவாத் கூற வேண்டும்
  • மூன்றாவது, நான்காவது தக்பீருக்கு பின் இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமைக்கா துஆ செய்ய வேண்டும்.
  • இருபுறமும் நின்றவாறே ஸலாம் கூறி தொழுகையை முடிக்க வேண்டும்
  • ஒரு பக்கம் மட்டும் ஸலாம் கொடுப்பது நபிவழி அல்ல