Tamil Bayan Points

நலம் விசாரித்தால் அல்ஹம்துலில்லாஹ் கூறுவது ஏன்?

கேள்வி-பதில்: பித்அத்

Last Updated on September 30, 2016 by Trichy Farook

நலம் விசாரித்தால் அல்ஹம்துலில்லாஹ் கூறுவது ஏன்?

பதில்

நம் நலனைப் பற்றி யாராவது விசாரித்தால் அவருக்கு அல்ஹம்து லில்லாஹ் என்று பதிலளிக்கும் நடைமுறை பலரிடம் உள்ளது. இவ்வாறு தான் பதிலளிக்க வேண்டும் என மார்க்கம் கட்டளையிடவில்லை. இது நாமாக ஏற்படுத்திக்கொண்ட சொல் வழக்காகும். நம்மிடம் நலம் விசாரிக்கும் போது இவ்வாறு தான் கூற வேண்டும்; அது தான் சுன்னத் என்று நினைத்தால் அவ்வாறு சொல்லாதவர்களை சுன்னத்தை விட்டவர்கள் போல் கருதும் நிலை இருந்தால் அது பித்அத்தாக ஆகி விடும்.

நான் நன்றாக இருக்கிறேன் அதற்காக அல்லாஹவைப் புகழ்கிறேன் என்ற கருத்தில் சுன்னத் என்று கருதாமல் தன்னிச்சையாக இவ்வாறு கூறினால் அது குற்றமாகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இவ்வாறு யாரும் நோய் விசரிக்கும் போது இவ்வாறு கூறியதாகவோ, அல்லது அவர்கள் நோய் விசாரித்த போது மற்றவர்கள் அவர்களிடம் இவ்வாறு கூறியதாகவோ நாம் தேடியவரை எந்த ஆதாரத்தையும் காண முடியவில்லை.