Tamil Bayan Points

பெண்கள் வீடு வீடாக சென்று தாஃவா செய்யலாமா?

கேள்வி-பதில்: பெண்கள்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

பெண்கள் வீடு வீடாக சென்று தாஃவா செய்யலாமா?

பிரச்சாரம் செய்யும் வழிமுறைகள் காலத்துக்கு காலம் மாறுபடும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் துண்டுப்பிரசுரம் போட்டு பிரச்சாரம் செய்தார்களா? சுவரொட்டி தொலைக்காட்சி இன்னும் பல ஊடகங்கள் வழியாக பிரச்சாரம் செய்தார்களா? என்று கேல்வி கேட்க்க் கூடாது. பொதுவாக பிரச்சாரம் செய்யும் பொறுப்பு நமக்கு சுமத்தப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பை நாம் விரும்பும் வழிகளைப் பயன்படுத்தி செய்து கொள்ளலாம். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காலத்தில் பெண்கள் ஐந்து நேரத் தொழுகைக்கும் ஜும்மாவுக்கும் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். நபிகள் நாயகம் ஸல் அவர்களின் போதனையை அனைவரும் தாமாகவே தேடி வந்து கேட்டார்கள். அதனால் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யும் அவசியம் எழ்வில்லை.

இன்று ஆரவத்துடன் மக்கள் வராத காரணத்தால் அவர்களைத் தேடிச் என்று பிரச்சாரம் செய்தால் மட்டுமே செய்திகள் அவரகளைச் சென்றடையும். எனவே வீடு வீடாக போய் பிரச்சாரம் செய்வது ஆண்களாயினும் பெண்களாயினும் அது வரவேற்கத்தக்கது தான்.

அழைப்புப் பணி செய்வோருக்கு மார்க்கத்தில் ஏராளமான சிறப்புகளும் நன்மைகளும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. நமது முயற்சியால் பிறர் நன்மை செய்யும் போது அது போன்ற நன்மை நமக்கும் கிடைக்கின்றது.

இப்பணியைப் பொறுத்தவரை இது ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவான பணியாகும். ஆண்கள் மட்டுமே இப்பணியில் ஈடுபட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.

பெண்கள் இப்பணியில் ஈடுபட்டால் ஆண்களுக்குக் கிடைக்கின்ற அதே நன்மைகளும் சிறப்புகளும் பெண்களுக்கும் கிடைக்கும்.

பெண்கள் மீதும் பிரச்சாரம் செய்யும் பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது என்பதை பின்வரும் வசனத்தில் இருந்து அறியலாம்.

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர் ஆன் 9:71

ஆனால் இப்பணியில் ஈடுபடும் பெண்கள் இதனால் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளில் குறைவைத்துவிடக் கூடாது. வீட்டையும் குழந்தைகளையும் பராமரித்தல் கணவனுக்கு பணிவிடை செய்து சந்தோஷமாக வைத்தல் போன்றவை பெண்களின் மீதுள்ள கடமைகளாகும்.

பெண்கள் அழைப்புப் பணியில் ஈடுபட்டு இந்தக் கடமைகளை முறையாக ஆற்ற முடியாத சூழல் ஏற்பட்டால் அப்போது அவர்கள் குடும்பத்தைக் கவனிப்பதே நல்லது.