Tamil Bayan Points

01) முன்னுரை

நூல்கள்: குற்றச்சாட்டுகளும் பதில்களும்

Last Updated on April 15, 2023 by

பதிப்புரை

இஸ்லாம் குறித்து எழுப்பப்படும் எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளிக்கும் நோக்கத்தில் மூன்று நூல்களை  நாம் வெளியிட்டுள்ளோம்.

இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிப்பதற்காக முதல் நூலை வெளியிட்டோம்.

அந்த நூலில் தலாக், பர்தா, பலதார மணம், பாகப்பிரிவினையில் பாரபட்சம் போன்ற பெண்கள் சம்பந்தமான முஸ்லிமல்லாதவர்கள் எழுப்பும் எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் மிக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. அந்த நூல் பல பதிப்புகள் வெளியானதிலிருந்து அதன் தாக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்? என்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிப்பதற்காக இரண்டாவது நூலை வெளியிட்டோம்.

இவ்விரு குற்றச்சாட்டுகள் தவிர எஞ்சிய எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளிப்பதற்காக குற்றச்சாட்டுகளும் பதில்களும் என்ற மூன்றாவது நூலை வெளியிட்டோம். அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்ப வாழ்க்கை குறித்து எழுப்பப்படும் எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் தக்க சான்றுகளுடன் விளக்கம் அளிக்கப்பட்டது.

அந்த நூலில் பல குற்றச்சாட்டுக்கள் விடப்பட்டிருந்தன. இன்னும் கூடுதல் விளக்கம் சேர்க்கப்பட வேண்டிய நிலையும் இருந்தது. எனவே அந்த நூலை முற்றிலும் மாற்றியமைத்து விடுபட்ட குற்றச்சாட்டுகள் அனைத்திற்குமுரிய விளக்கங்களைச் சேர்த்து முற்றிலும் புதிய வடிவில் மீண்டும் உங்கள் கைகளில் தவழவிடுகிறோம்.

இந்த நூல் இஸ்லாம் குறித்த எல்லா ஐயங்களையும் நீக்கும் என்று பெரிதும் நம்புகிறோம். அந்த நம்பிக்கை வீண் போகாதிருக்க வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

-அன்புடன்

நபீலா பதிப்பகம்

நூல் ஆசிரியர் : பீ.ஜெய்னுல் ஆபிதீன்

பொருளடக்கம்

குடும்பக் கட்டுப்பாட்டை இஸ்லாம் எதிர்க்கிறது

தாய் மொழியை இஸ்லாம் அவமதிக்கிறது

இஸ்லாம் உயிர் வதையை அனுமதிக்கின்றது

இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்

இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளன

எம்மதமும் சம்மதமா?

இஸ்லாமியப் போர்கள்

முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லச் சொல்லும் இஸ்லாம்

இந்துக்களை காபிர்கள் என்று இஸ்லாம் ஏசுகிறது

ஜிஸ்யாவரி

திக்கை வணங்கும் முஸ்லிம்கள்

ஹஜ் பயணமும், புனித யாத்திரையும்!

கருப்புக் கல் வழிபாடு?

நபிகள் நாயகம் புரோகிதத்தின் மூலம் வாழ்க்கை நடத்தினார்களா?