Tamil Bayan Points

05) உறுதி பிரமாணம்

நூல்கள்: உம்மு சுலைம் (ரலி) வரலாறு

Last Updated on April 23, 2024 by Hakkeem

05) உறுதி பிரமாணம்

யாரேனும் மரணித்துவிட்டால், அந்த மய்யித்தைச் சுற்றி உட்கார்ந்து ஒப்பாரி வைத்து அழும் ஒரு பழக்கம் நம்முடைய சமுதாயத்தில் பார்க்க முடியும். இந்த பழக்கம் முக்கியமாக பெண்களிடத்தில் அதிகமாகவே காணமுடியும். இந்த ஒப்பாரி வைக்கும் அறியாமைக்கால செயலுக்கு எதிராக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் சில பெண்கள், உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களில் உம்மு சுலைம் (ரலி) அவர்களும் இருந்தனர்.

حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ
«أَخَذَ عَلَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ الْبَيْعَةِ، أَلَّا نَنُوحَ»، فَمَا وَفَتْ مِنَّا امْرَأَةٌ، إِلَّا خَمْسٌ: أُمُّ سُلَيْمٍ، وَأُمُّ الْعَلَاءِ، وَابْنَةُ أَبِي سَبْرَةَ، امْرَأَةُ مُعَاذٍ، أَوْ ابْنَةُ أَبِي سَبْرَةَ، وَامْرَأَةُ مُعَاذٍ

உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் (இறைநம்பிக்கைக்கான) உறுதிமொழி வாங்கியபோது, ஒப்பாரிவைக்கக் கூடாது என்றும் உறுதிமொழி வாங்கினார்கள். எனினும், இந்த வாக்குறுதியை எங்களில் ஐந்து பெண்களைத் தவிர வேறெவரும் நிறைவேற்றவில்லை.
அப்பெண்கள்: உம்மு சுலைம் (ரலி), உம்முல் அலா (ரலி), “முஆத் (ரலி) அவர்களின் துணைவியான அபூசப்ராவின் மகள்” அல்லது “அபூசப்ராவின் மகள் மற்றும் முஆத் (ரலி) அவர்களின் துணைவி”.

நூல்: முஸ்லிம்-1702

நபிகளாருக்கு முன்னால் தான் எடுத்த  உறுதிமொழியை இறுதிவரை கடைப்பிடுத்து வாழ்ந்தவர் தான் உம்மு சுலைம் (ரலி) அவர்கள்… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *