Tamil Bayan Points

10) மழைத் தொழுகை சட்ட சுருக்கம்

நூல்கள்: சட்டங்களின் சுருக்கம்

Last Updated on April 27, 2024 by Naveed

மழைத் தொழுகை 

  • சூரியன் உதயமான பிறகு அதிகாலையில் தொழ வேண்டும்.
  • திடலில் தொழ வேண்டும்.(புகாரி-1012)
  • தொழுகைக்கு முன்பு இமாம் மிம்பர் மீது நின்று தக்பீர் சொல்லி அல்லாஹ்வைப் பெருமைப்படுத்த வேண்டும். துஆ செய்ய வேண்டும்.
  • புறங்கைகளை வானத்தை நோக்கி உயர்த்திப் பிரார்த்தனையில் ஈடுபடவேண்டும்.(முஸ்லிம்-1632) 
  • இமாமைப் போன்று மற்றவர்களும் இரு கைகளையும் உயர்த்திப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
  • இமாம் மக்களை நோக்கி இருந்தவாறு சிறிது நேரம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
  • பிறகு கிப்லாவை நோக்கித் திரும்பி மேலாடையை மாற்றிப் போட்டு துஆ செய்ய வேண்டும்.
  • (புகாரி-1012)
  • இமாமுடன் சேர்ந்து மக்களும் மேலாடையைப் மாற்றிப் போட்டுக் கொள்ள வேண்டும்.
  • மழைத் தொழுகையில் பெண்களும் கலந்து கொள்ளலாம். அதே நேரத்தில் பெண்கள் இவ்வாறு மேலாடையை மாற்றிப் போடக் கூடாது.(புகாரி-1024) 
  • இமாம் மிம்பரிலிருந்து இறங்கி பெருநாள் தொழுகையைப் போன்று இரண்டு ரக்அத்கள் தொழ வைக்க வேண்டும்.
  • அதில் இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும்.(புகாரி-1024)
  • பெருநாள் தொழுகையை போன்று மழைத்தொழுகை என்று சொல்லப்பட்டு இருப்பதால், முதல் ரக்அத்தில் கூடுதலாக ஏழு தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் கூடுதலாக ஐந்து தக்பீர்களும் கூறித் தொழ வைக்க வேண்டும்.(நஸயீ-1491)
  • பெருநாள் தொழுகையில் ஓதும் அத்தியாயங்களை இதில் ஓத வேண்டும்.(நஸயீ-1491)