Tamil Bayan Points

(24:22) மன்னிப்பதை விரும்பமாட்டீர்களா என்ற வசனம்

முக்கிய குறிப்புகள்: குர்ஆன் வசனத்திற்கு பின் நடந்தவை

Last Updated on April 22, 2022 by Trichy Farook

(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், (அன்னை ஆயிஷா அவர்களை பற்றிய அவதூறு சம்பவந்தில் பெரும் பங்கு வகித்த) மிஸ்தஹுக்கு எந்தப் பயன்தரும் உதவியும் இனி ஒரு போதும் செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்தார்கள்.

அப்போது அல்லாஹ் உங்களில் செல்வம் மற்றும் தாயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) வழங்க மாட்டேன் என்று சத்தியம் செய்யவேண்டாம். (அவர்களால் தங்க ளுக்கு ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழைகளைப்) பொருட்படுத்தாமல் விட்டு விடட்டும்! அல்லாஹ் உங்களுக்கு மன்னிப் பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கருணையுடையோனுமாய் இருக்கின்றான் எனும் (24:22ஆவது) இறைவசனத்தை அருளினான்.

(இந்த வசனத்தில்) உலுல் ஃபள்ல் (செல்வம் படைத்தோர்) என்று அபூபக்ர் (ரலி) அவர்களையே அல்லாஹ் குறிப்பிட்டான். மஸாக்கீன் (ஏழைகள்) என்று மிஸ்தஹ் அவர்களைக் குறிப்பிட்டான். இதையடுத்து அபூபக்ர் (ரலி) அவர்கள்,

ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக, எங்கள் இறைவா! எங்களை நீ மன்னிப்பதையே நாங்கள் விரும்புகிறோம் என்று கூறி, தாம் முன்பு செய்து வந்தது போலவே (மிஸ்தஹுக்குப் பொருள் உதவி) செய்து வரத் தொடங்கினார்கள்.

( புகாரி-4757 )