Tamil Bayan Points

10) ருகூவில் கைகளை வைக்கும் முறை

முக்கிய குறிப்புகள்: நாஸிக் - மன்ஸூக்

Last Updated on September 29, 2022 by Trichy Farook

முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ்  அவர்கள் கூறியதாவது:

நான் (தொழுகையில்) இவ்வாறு (கைகளைக் கோத்து என் தொடைகளுக்கிடையே வைத்துக் கொண்டு) ருகூஉச் செய்தபோது என் தந்தை, “நாங்கள் இவ்வாறுதான் செய்து கொண்டிருந்தோம். பின்னர் கைகளை முழங்கால்கள் மீது வைத்துக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டோம்’’ என்று சொன்னார்கள். 

(முஸ்லிம்-932)

தொழுகையில் ருகூவின் போது கைகளைத் தொடைகளுக்கு மத்தியில் வைக்க வேண்டும் என்ற சட்டம் முதலில் இருந்தது. பின்னர்  அது மாற்றப்பட்டு முழங்கால்கள் மீது வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.