Tamil Bayan Points

நபியை காயப்படுத்தியவர்கள் எப்படி வெல்வார்கள் என்ற போது

முக்கிய குறிப்புகள்: குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்

Last Updated on April 30, 2022 by Trichy Farook

”அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை’ (என்ற 3:128-வது இறைவசனம்)”

அனஸ் (ரலி) கூறினார்கள்:

உஹுதுப் போரன்று நபி(ஸல்) அவர்கள் காயப்படுத்தப்பட்டார்கள். அப்போது ‘தம் நபியையே காயப்படுத்திவிட்ட ஒரு சமூகம் எப்படி வெல்லும்?’ என்று (மனமுடைந்தவர்களாக) நபிகளார் கூறினார்கள். அப்போதுதான் ‘(நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை…” என்ற (திருக்குர்ஆன் 03:128-வது) வசனம் அருளப்பட்டது.

( புகாரி-4069 )

 

மேல உள்ள செய்திக்கு முரணாக இருப்பதால், கீழ்காணும் செய்திகளை தவிர்க்கவும்.

4069. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்.
(உஹுத் போரில் காயம் ஏற்பட்டதற்குப் பிறகு) ஃபஜ்ருத் தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, `சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹு – ரப்பனா வல(க்)கல் ஹம்து` என்று கூறியதற்குப் பின்னால், நபி(ஸல்) அவர்கள், `இறைவா! இன்னான், இன்னான், இன்னானை உன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், `அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, (நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை” என்னும் (திருக்குர்ஆன் 03: 128-வது) வசனத்தை இறக்கியருளினான்.

 

சாலிம் இப்னு அப்தில்லாஹ் (ரஹ்) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (உஹுதுப் போரில் காயப்படுத்தப்பட்டபோது எதிரிகளான) ஸஃப்வான் இப்னு உமய்யா, சுஹைல் இப்னு அம்ர், ஹாரிஸ் இப்னு ஹிஷாம் ஆகியோருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அப்போது, `அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை (என்ற 3:129-வது வசனம்) அருளப்பட்டது.

( புகாரி-4070 )