Tamil Bayan Points

Category: ஜும்ஆ

q111

ஜுமுஆ உரை தரையில் நின்று நிகழ்த்தலாமா?

ஜுமுஆ உரைக்கு மிம்பர் இல்லாமல் தரையில் நின்று உரை நிகழ்த்தலாமா? பதில்: ஜும்ஆ நிறைவேறுவதற்கு கூட்டாக சேர்ந்து நிறைவேற்ற வேண்டும், தொழுகைக்கு முன்னால் உரை அவசியம் என்பன போன்ற பல நிபந்தனைகளை மார்க்கம் நமக்கு  சொல்லித் தருகிறது. இவற்றில் மிம்பர் என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்ட ஒரு வழிமுறையாக உள்ளது. صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (2/ 10)   912- حَدَّثَنَا آدَمُ قَالَ : حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ كَانَ […]

தொடர்ந்து மூன்று வாரங்கள் ஜுமுஆ தொழாமல் விட்டால் அவர் உள்ளம் பாழடைந்தது விடுமா?

தொடர்ந்து மூன்று வாரங்கள் ஜுமுஆ தொழாமல் விட்டால் அவர் உள்ளம் பாழடைந்த உள்ளம் என்று சொல்கிறார்களே இது உண்மையா? இஸ்லாமிய மார்க்கத்தில் ஐவேளை தொழுகை எவ்வாறு கடமையாக்கப்பட்டு இருக்கிறதோ அதே போல ஜுமுஆ தொழுகையும் கடமையாக ஆக்கப்பட்டுள்ளது. ஜுமுஆ தொழுகையின் அவசியத்தையும், அதன் சிறப்புகள் குறித்தும் பல்வேறு செய்திகளை நபி [ஸல்] அவர்கள் கூறி இருக்கின்றார்கள். தொடர்ந்து மூன்று வாரங்கள் ஜுமுஆ தொழாமல் விட்டால் அவர் உள்ளம் பாழடைந்த உள்ளம் என்று சொல்லப்படுகிறதே என்று கேட்கப்படுவதைப் போல, […]

ஜும்ஆ தொழுகைக்குத்  தாமதமாக வந்தால்…

ஜும்ஆ தொழுகைக்குத்  தாமதமாக வந்தால்… ஒருவர் ஜும்ஆ தொழுகையில் கடைசி ரக்அத்தைத் தவறவிட்டு ஸஜ்தாவிலோ, அத்தஹிய்யாத் இருப்பிலோ இமாமுடன் இணைகிறார். இந்நிலையில் அவர் இமாம் ஸலாம் கொடுத்ததும் எழுந்து, தவறவிட்ட ஜும்ஆவின் இரண்டு ரக்அத்களைத் தொழ வேண்டுமா? அல்லது லுஹர் தொழுகையைத் தொழ வேண்டுமா? என்பதில் மக்களுக்கு மத்தியில் ஒரு குழப்பம் இருப்பதைக் காண முடிகிறது. இதுபோன்ற நிலையை அடையும் போது பெரும்பான்மையான மக்கள், இரண்டு ரக்அத்கள் மட்டும் எழுந்து தொழுகின்றனர். ஒரு சிலர் லுஹர் தொழுகையை […]

ஜும்ஆ தொழுகைக்கு முன் பின் சுன்னத்துகள் உண்டா?

ஜும்ஆ தொழுகைக்கு முன் பின் சுன்னத்துகள் உண்டா? ஜும் ஆ தொழுகைக்கு முன் சுன்னத் மற்றும் பின் சுன்னத் தொழுகைகள் உள்ளன. صحيح البخاري 930 – حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: جَاءَ رَجُلٌ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ النَّاسَ يَوْمَ الجُمُعَةِ، فَقَالَ: «أَصَلَّيْتَ يَا فُلاَنُ؟» قَالَ: لاَ، […]

ஜும்ஆ உரையில்  மழை வேண்டி பிரார்த்திக்கலாமா?

ஜும்ஆ உரையில்  மழை வேண்டி பிரார்த்திக்கலாமா? நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ உரையில் மழைக்காக துஆ செய்திருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். “இறைத்தூதர் அவர்களே! மழை பொய்த்துவிட்டது. எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’’ என்று கூறினார் நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்ததும் மழை பொழிந்தது. எங்களால் எங்கள் இல்லங்களுக்குச் செல்ல இயலவில்லை. அடுத்த ஜும்ஆ வரை மழை நீடித்தது. அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (1015) […]

ஜும்மாவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா.?

ஜும்மாவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா.? இமாம் ஜும்ஆ உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் உரை கேட்கும் வழக்கம் சிலரிடம் காணப்படுகிறது. முட்டுக் கட்டி அமர்தல் என்றும் தமிழகத்தில் சில ஊர்களில் குறிப்பிடுவார்கள். மார்க்க அறிஞர்களில் சிலர் அவ்வாறு உட்காருவதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள் என்று கூறி அதற்கு ஆதாரமாக சில செய்திகளையும் முன்வைக்கின்றனர். முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக் காலிட்டு அமரும் முறைக்கு அரபியில் இஹ்திபாவு என்றும் அல்ஹப்வா […]

ஜும்ஆத் தொழுகைக்கு 40பேர் அவசியமா?

ஜும்ஆத் தொழுகைக்கு 40பேர் அவசியமா? ஜும்ஆத் தொழுகை நடைபெற குறைந்தது 40 நபர்கள் இருக்க வேண்டுமா? அம்பை பௌசுல் பதில் :   حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ وَكَانَ قَائِدَ أَبِيهِ بَعْدَ مَا ذَهَبَ بَصَرُهُ عَنْ أَبِيهِ كَعْبِ بْنِ […]

ஜும்ஆவை பள்ளிவாசலில் தான் தொழ வேண்டுமா?

ஜும்ஆவை பள்ளிவாசலில் தான் தொழ வேண்டுமா? பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருவதற்கு முன்னர் மதீனாவைச் சேர்ந்த சிலர் மக்கா வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றனர். அவர்கள் மதீனா சென்றதும் அங்கே ஜும்ஆ தொழுகை நடத்துமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்து பள்ளிவாசல் கட்டும் வரை அந்த மக்கள் பள்ளிவாசல் அல்லாத காலியிடத்தில் தான் ஜும்ஆ தொழுது வந்தனர். […]

இரண்டாம் குத்பா கிடைத்தால் தான் ஜும்ஆ நன்மை கிடைக்குமா?

இரண்டாம் குத்பா கிடைத்தால் தான் ஜும்ஆ நன்மை கிடைக்குமா[break] சல்மான் பார்சி பதில் இமாம் உரையாற்றுவதற்கு முன் ஜும்ஆத் தொழுகைக்கு வருபவர்களுக்கு குர்பானி கொடுத்த நன்மை கிடைப்பதாகப் பின்வரும் செய்தி கூறுகின்றது.   881حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ […]

பெண்கள் பள்ளியில் ஜும்ஆ தொழலாமா?

பெண்கள் பள்ளியில் ஜும்ஆ தொழலாமா கேள்வி: “அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அபூதாவூத் 901 . ஆனால் தவ்ஹீத் பள்ளிகளில் ஜுமுஆவின் பொது பெண்களை அழைத்து வருகிறார்கள். சில இடங்களில் ஊக்குவிக்கிறார்கள். பெண்கள் தொழுதால் அவர்களுக்கு சுன்னத் தொழுகை போல் ஆகுமா?. பதில்: பெண்களுக்கு ஜும்ஆத் தொழுகை கடமை இல்லை என்பதால் […]

ஜும்ஆ நேரத்தில் கடையை மூட வேண்டுமா?

ஜும்ஆ நேரத்தில் கடையை மூட வேண்டுமா? ஜும்ஆ நேரத்தில் வியாபாரத்தை விட்டுவிட வேண்டுமா? அல்லது தொழுகைக்கு வந்தால் போதுமா? ஜஹுபர் கான் பதில் சிலர் ஜும்ஆ நேரத்தில் வியாபாரத்தை நிறுத்தாமல் முஸ்லிமல்லாத நபர்கள் மூலமோ, ஜும்ஆ கடமையாகாத பெண்கள் மற்றும் சிறுவர்கள் மூலமோ வியாபாரத்தைத் தொடர்ந்து கொண்டு தாங்கள் மட்டும் தொழுகைக்கு வந்து விடுகின்றனர். இதுவே அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்ப்பது என்றும் இவர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்தக் கருத்து முற்றிலும் தவறாகும். இது குறித்து அல்லாஹ் கூறுவது […]

உரை நிகழ்த்தியவர் தான் தொழுவிக்க வேண்டுமா?

உரை நிகழ்த்தியவர் தான் தொழுவிக்க வேண்டுமா? ஜும்ஆ உரை நிகழ்த்தியவர் தான் கட்டாயம் தொழுகை நடத்த வேண்டுமா ? இல்லை என்றால் ஆதாரம் குறிப்பிடவும். முஹம்மத் ஆஸிர் இஸ்லாத்தின் ஒரு அடிப்படையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். யார் வணக்க வழிபாடுகளில் ஒன்றை இருப்பதாகக் கூறுகிறாரோ அவர் தான் ஆதாரம் காட்ட வேண்டும். ஒன்றை இல்லை என்று கூறுவதற்கு ஆதாரம் கேட்கக் கூடாது. ஜும்ஆ உரை நிகழ்த்தியவர் தான் தொழுகை நடத்த வேண்டும் என்று நபிகள் நாயகம் […]

ஜும்ஆவுக்கு இரண்டு பாங்குகள் உண்டா?

ஜும்ஆவுக்கு இரண்டு பாங்குகள் உண்டா? சுஹைப் பதில் : ஜும்ஆ நாளில் இரண்டு பாங்குகள் சொல்லும் வழக்கம் நடைமுறையில் இருக்கின்றது. அனேகமாக எல்லா பள்ளிகளிலும் ஜும்ஆவில் இரண்டு பாங்குகள் கூறுவதை நாம் பார்க்கிறோம். ஜும்ஆவுக்கு இரு பாங்குகள் சொல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்களா என்று பள்ளிவாசல் இமாமிடம் கேட்டுப் பாருங்கள்; அல்லது ஜமாஅத் உலமா சபைத் தலைவரிடம் போய் கேட்டுப் பாருங்கள். யாரிடம் கேட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆவுக்கு இரு பாங்குகள் […]

இமாம் உரை நிகழ்த்தும் போது ஸலாம் கூறலாமா

இமாம் உரை நிகழ்த்தும் போது ஸலாம் கூறலாமா ஜும்மா உரை கேட்டுக் கொண்டிருக்கும் போது ஒருவர் நமக்கு ஸலாம் கூறினால் நாம் அதற்கு பதில் கூறலாமா? ஆர்.என் பதில் :   883حَدَّثَنَا آدَمُ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ قَالَ أَخْبَرَنِي أَبِي عَنْ ابْنِ وَدِيعَةَ عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَيَتَطَهَّرُ […]

ஒரு பள்ளியில் இரண்டு ஜும்மா கூடுமா

ஒரு பள்ளியில் இரண்டு ஜும்மா கூடுமா நான் அமெரிக்காவில் இருக்கிறேன்; எங்கள் பள்ளிவாசலில் ஒரு மணி நேர வித்தியாசத்தில் இரண்டு ஜும்ஆக்கள் நடத்தப்படுகின்றன. இதில் எது சரியான ஜும்ஆ? அஸ்வார் முஹம்மத் பதில் : ஜும்ஆ பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னால் ஜமாஅத் தொழுகை சட்டங்களை அறிந்து கொள்வது தெளிவுபெற உதவியாக இருக்கும். ஒரு பள்ளியில் இரண்டு ஜமாஅத் நடத்துவது பற்றி விரிவாக நாம் அறிந்து கொள்வது அவசியம். ஒரு பள்ளியில் ஒரு ஜமாஅத்தைத் தவிர அடுத்த […]

ஜும்மாவுக்கு காரணம் என்ன

ஜும்மாவுக்கு காரணம் என்ன வெள்ளிக்கிழமை மட்டும் ஏன் சிறப்புத் தொழுகை தொழுகிறோம்? ஃபாத்திமா தக்வியா பதில் எல்லா வணக்கங்களும் இறைவனை நினைவு கூர்வதற்காக நமக்கு கடமையாக்கப்பட்டுள்ளது போல் ஜும்ஆவும் அதற்காகவே கடமையாக்கப்பட்டுள்ளது.   يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِي لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنتُمْ تَعْلَمُونَ(9)62 நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு […]

வேலையின் காரணமாக ஜும்ஆ தொழாமலிருப்பது குற்றமா?

நாங்கள் பிரான்சில் வசித்து வருகிறோம். இங்கே பெரும்பாலான முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகையை வேலை நிர்பந்தத்தின் காரணமாகத் தொழ முடியவில்லை. இது எங்கள் மீது குற்றம் ஆகுமா? ஏ.ஹாரூன், பிரான்ஸ் பதில் : ஜும்ஆத் தொழுகை அனைவரின் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.   901حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ حَدَّثَنِي إِسْحَقُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا هُرَيْمٌ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ عَنْ […]

ஜுமுஆ தொழுகையில் ருகூவில் நீண்ட துஆ ஓதுவதற்கு ஆதாரம் உள்ளதா?

ஜுமுஆ தொழுகையில் ருகூவில் நீண்ட துஆ ஓதுவதற்கு ஆதாரம் உள்ளதா? ? ஜும்ஆ தொழுகையின் முதல் ரக்அத்தில் ருகூவு செய்து எழுந்து நிற்கும் அந்த சிறு நிலையில் ரப்பனா லகல் ஹம்து சொல்லியதும் இமாம் ஸுஜூது செய்யாமல் தொடர்ந்து நீண்ட துஆவை ஓதுகின்றார். இதற்கு ஆதாரம் உள்ளதா? இமாம், ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா கூறியதும், ரப்பனா லகல் ஹம்து மட்டும் தான் கூற வேண்டும் என்றில்லை. இந்த நிலையில் ஓதுவதற்கு நபி (ஸல்) அவர்கள் பல்வேறு திக்ருகளை […]