Tamil Bayan Points

Category: குற்றச்சாட்டுகளும் பதில்களும்

u305c

16) முடிவுரை

இஸ்லாத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் நமது கவனத்திற்கு வந்த குற்றச்சாட்டுக்கள் இவை தாம். இவை தவிர இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுக்கு மறுப்பாக ஏற்கனவே தனி நூலை வெளியிட்டிருந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்? என்ற குற்றச்சாட்டுக்கும் தனி நூலை பதிலாக வெளியிட்டுள்ளோம். எஞ்சிய குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் இந்த நூலில் விளக்கமளித்துள்ளோம். இவை தவிர மேலும் குற்றச்சாட்டுகள் இருப்பது தெரிய வந்தால் அதை நமது கவனத்தில் கொண்டு வருபவர்களுக்கு நன்றியைத் […]

15) நபிகள் நாயகம் புரோகிதத்தின் மூலம் வாழ்க்கை நடத்தினார்கள்

இஸ்லாம் புரோகிதத்தை எதிர்ப்பதாகக் கூறப்படுகிறது. இது உண்மையில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்தது முதல் மரணிக்கும் வரை எந்தத் தொழிலும் செய்யவில்லை. எனவே இஸ்லாம் எனும் மதத்தை வைத்துத் தான் அவர்கள் பிழைப்பு நடத்தியிருக்க வேண்டும். புரோகிதர்கள் எப்படி பக்தர்களிடம் காணிக்கைகளைப் பெற்று வாழ்க்கை நடத்துகிறார்களோ அது போலவே நபிகள் நாயகமும் நடத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால் எவ்வாறு பல மனைவியருடன் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) தமது வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளித்திருக்க […]

14) கருப்புக் கல் வழிபாடு?

”மக்காவில் உள்ள ஆலயமாகிய கஃபாவின் சுவற்றில் ஒரு மூளையில் பதிக்கப்பட்டுள்ள “ஹஜ்ருல் அஸ்வத்” எனும் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் ஒரு புறம் வழபட்டுக் கொண்டு இன்னொரு புறம் ஏக இறைவனை மட்டும் வணங்க வேண்டும் என்று கூறுவது முரணாக அமைந்துள்ளது. இஸ்லாத்தின் கடவுட் கொள்கையில் தெளிவின்மையை இது காட்டுகிறது.” என்பதும் மாற்றாரின் விமர்சனங்களில் ஒன்றாகும். நாங்களும் கல்லை வணங்குகிறோம், நீங்களும் கல்லை வணங்ககிறீர்கள், எனவே உங்களின் கடவுட் கொள்கை தனித் தன்மை கொண்டதோ, சிறந்ததோ அல்ல என்ற […]

13) ஹஜ் பயணமும் புனித யாத்திரையும்!

வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் தம் வாழ்நாளில் ஒரு தடவை மக்கா எனும் நகர் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. ஏனைய மதங்களில் எவ்வாறு புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறதோ அது போன்ற ஒரு யாத்திரையாகத் தான் ஹஜ் யாத்திரையும் அமைந்துள்ளது. இருந்த இடத்திலேயே கடவுளை வணங்கலாம் என்று ஒரு புறம் கூறிக் கொண்டு கடவுளை வணங்குவதற்காக பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை வீணாக்கச் சொல்வது ஏன்? பல தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள் இவ்வாறு செய்வதிலாவது ஒரு நியாயம் […]

12) முஸ்லிம்கள் திசையை வணங்குகிறார்களா

”ஒரே ஒரு கடவுளை மட்டும் வணங்குவதாகக் கூறிக்கொள்ளும் முஸ்லிம்கள் மற்ற மதத்தவர்களைப் போல பல கடவுள் வழிபாடு செய்பவர்களாகவே உள்ளனர்” என்பது மாற்று மதத்தவர்களின் விமர்சனங்களில் முக்கியமானதாகும்.” இவ்வாறு விமர்சனம் செய்வதற்குச் சில சான்றுகளையும் முன் வைக்கின்றனர். முஸ்லிம்கள் ஒரே கடவுளை வணங்குவதாகக் கூறிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் மேற்குத் திசையைத் தான் வணங்குகின்றனர். எல்லாப் பள்ளிவாசல்களும் மேற்கு நோக்கித் தான் கட்டப்பட்டுள்ளன என்பது அவர்கள் எடுத்துக் காட்டும் சான்றுகளில் ஒன்றாகும். பாமர மக்கள் மட்டுமின்றி பண்டிதர்களும் […]

11) ஜிஸ்யா வரி

பெரும்பாலான முஸ்லிம்களாலும், முஸ்லிமல்லாதவர்களாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட விஷயங்களில் ”ஜிஸ்யா வரி” என்பதும் ஒன்றாகும். ”இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா எனும் வரி விதிக்கப்பட்டு வந்தது. அவுரங்கசீப் போன்ற முகலாய மன்னர்கள் இத்தகைய வரியை இந்துக்களுக்கு மட்டும் விதித்தனர்.” என்று பரவலாக விமர்சனம் செய்யப்படுகிறது. அரசாங்கத்தால் வெளியிடப்படும் பாடப் புத்தகங்களிலும் கூட இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது. இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாடுகளில் முஸ்லிமல்லாதவர்களுக்கு மட்டும் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டு வந்ததும், அவ்வாறு விதிக்க வேண்டுமென இஸ்லாம் […]

10) இந்துக்களைக் காபிர்கள் என்று இஸ்லாம் ஏசுகிறது

முஸ்லிமல்லாதவர்களைப் பற்றித் திருக்குர்ஆன் கூறும் போது காபிர்கள் என்றும் முஷ்ரிக்குகள் என்றும் கூறப்பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் இதையும் தவறாக விமர்சனம் செய்கிறார்கள். அதாவது இந்துக்களைக் காபிர்கள் என்று திருக்குர்ஆன் ஏசுகிறது என்பதும் இவர்களின் விமர்சனமாகும் முஸ்லிமல்லாதவர்களைப் பற்றி காபிர்கள் என்று இஸ்லாம் கூறுவது உண்மை தான். இந்துக்களும் கூட இந்த அடிப்படையில் காபிர்கள் தாம் என்பது உண்மையே. ஆனால் காபிர்கள் என்றால் அது ஏசும் சொல் என்கிறார்களே அதில் தான் உண்மையில்லை. காபிர் என்பதற்கு கிறுக்கன், பைத்தியக்காரன், […]

09) முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லச் சொல்லும் இஸ்லாம்

இஸ்லாம் மார்க்கம் முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளது. காபிர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுமாறு திருக்குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளது என்பதும் இஸ்லாத்திற்கெதிரான விமர்சனங்களில் ஒன்றாகும். திருக்குர்ஆனில் 2:191 வசனத்தை இதற்கு ஆதாரமாக காட்டுகின்றனர். ஜிஹாத் (புனிதப் போர்) செய்யுமாறு திருக்குர்ஆனில் உள்ள கட்டளைகளையும் எடுத்துக் காட்டி இவ்வாறு விமர்சனம் செய்கின்றனர். இது குறித்தும் விரிவாக நாம் விளக்க வேண்டியுள்ளது. முஸ்லிமல்லாதவர்களைக்  கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று திருக்குர்ஆன் கூறுவதாகச் சொல்வதை முதலில் பார்ப்போம். (களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! […]

08) இஸ்லாமியப் போர்கள்

முஸ்லிமல்லாதவர்களை மதமாற்றம் செய்வதற்காகவும் மறுப்பவர்களைக் கொன்று குவிப்பதற்காகவும் பிறநாட்டில் உள்ள அழகு மங்கையரைக் கவர்ந்து செல்வதற்காகவும் அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் முஸ்லிம்கள் படையெடுத்து உள்ளனர். இஸ்லாம், பிற மதங்களைச் சகித்துக் கொள்ளாத மார்க்கம் என்பதற்கு அது வாள்முனையில் பரப்பப்பட்ட மார்க்கம் என்பதற்கும் இந்தப் போர்களும் படையெடுப்புகளும் சான்றாக உள்ளன. முஸ்லிமல்லாதவர்கள் அடிக்கடி எழுப்பிவரும் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும். முகலாய மன்னர்களும், வேறு பல முஸ்லிம் மன்னர்களும் இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததையும் நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் […]

07) எம்மதமும் சம்மதமா?

இஸ்லாத்தைத் தவிர மற்ற மதங்களைப் பின்பற்றக் கூடியவர்கள் எம்மதமும் சம்மதமே என்று கருதுகின்றனர். இஸ்லாமியர்களின் வழிபாட்டு முறைகளை மற்ற சமயத்தவர்கள் கடைப்பிடிக்கத் தயாராக உள்ளனர். ஆனால் முஸ்லிம்கள் மற்ற மதத்தினர் வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடிக்க மறுக்கின்றனர். என்பதும் இஸ்லாம் குறித்து மாற்று மத நண்பர்கள் செய்யும் விமர்சனமாகும். தங்கள் விமர்சனத்திற்கு ஆதரவாகப் பல சான்றுகளை முன்வைக்கின்றனர். முஸ்லிம்கள் தங்கள் பண்டிகையின் போது வழங்கும் உணவுப் பொருட்களை முஸ்லிமல்லாதவர்கள் மனநிறைவுடன் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் முஸ்லிமல்லாத மக்கள் தங்கள் […]

06) இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளன

இஸ்லாம் மார்க்கம் ஜாதிகளை ஒழித்துக் கட்டிவிட்டதாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன் எந்த ஜாதியில் இருந்தார்களோ அந்த ஜாதியை இஸ்லாம் ஒழித்து விட்டாலும் வேறு விதமான ஜாதி முறைகள் இஸ்லாத்திலும் உள்ளன என்பதும் மாற்று மதத்தினரின் விமர்சனங்களில் ஒன்றாகும். இவ்வாறு விமர்சனம் செய்வதற்கு சில சான்றுகளையும் முன்வைக்கின்றனர். மிகவும் பரவலாக அனைவரும் அறிந்து வைத்திருக்கின்ற ஷியா, சன்னி போன்ற பிரிவுகளையும் தக்னி, லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் போன்ற பிரிவுகளையும் ஷாபி, ஹனபி, மாலிகி, ஹம்பலி […]

05) இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்

மாற்றார்களால் விமர்சனம் செய்யப்படும் விஷயங்களில் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களும் ஒன்றாகும். ஒரு மனிதன் மற்றொரு மனிதனைக் கொலை செய்து விட்டால் கொலை செய்தவன் கொல்லப்பட வேண்டுமென இஸ்லாம் கூறுகின்றது. ஒருவனது அங்கத்தை மற்றொருவன் சேதப்படுத்தி விட்டால் சேதப்படுத்தியவனின் அதே அங்கம் சேதப்படுத்தப்பட வேண்டும். திருடினால் கையை வெட்ட வேண்டும் என்றெல்லாம் கடுமையான சட்டங்களை அமுல்படுத்தச் சொல்கிறது இஸ்லாம். இஸ்லாத்தில் உடன்பாடில்லாத மாற்று மதத்தவர்கள் இந்தச் சட்டங்களையும் விமர்சிக்கின்றனர். இது என்ன கொடுமை! திருடியதற்காக கையை வெட்டச் சொல்வது […]

04) இஸ்லாம் உயிர் வதையை அனுமதிக்கின்றதா?

மனிதன் உணவுக்காக இஸ்லாம் உயிரினங்களைக் கொல்லச் சொல்கிறது. இதன் மூலம் ஜீவ காருண்யத்துக்கு எதிராக இஸ்லாத்தின் நடவடிக்கைகள் உள்ளன. இஸ்லாத்திற்கு எதிராகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் இதுவும் முக்கியமானதாகும். மனிதன் தனது உணவுக்காக சில உயிரினங்களைக் கொல்லலாம் என்று இஸ்லாம் கூறுவது உண்மை தான். இதை இஸ்லாம் அனுமதிப்பதற்கு நியாயமான காரணங்களும் உள்ளன. அந்தக் காரணங்களை விளங்கிக் கொண்டால் இந்தக் குற்றச்சாட்டை யாரும் சுமத்த மாட்டார்கள். மனிதன் தனது நன்மைக்காக உயிரினங்களைக் கொல்லக்கூடாது என்பது போலித்தனமான வாதமாகும். ஏனெனில் […]

03) தாய் மொழியை இஸ்லாம் அவமதிக்கிறது

தாய் மொழியை இஸ்லாம் அவமதிக்கிறது முஸ்லிம்கள் தங்கள் பெயர்களை அரபு மொழியிலேயே சூட்டிக் கொள்கின்றனர். அவர்கள் தமது வழிபாடுகளை அரபு மொழியிலேயே நடத்துகின்றனர். பள்ளி வாசல்களில் தொழுகைக்காக விடப்படும் அழைப்பும் அரபு மொழியிலேயே அமைந்துள்ளது. அரபு நாட்டில் அரபு மொழியில் இவை அமைந்திருந்தால் அதில் நியாயம் இருக்கும். தமிழ் நாட்டிலோ, அரபு மொழி தெரியாத இன்ன பிற பகுதிகளிலோ அரபு மொழியில் இவை அமைந்திருப்பது மற்ற மொழிகளை மட்டம் தட்டும் காரியமே என்பது இஸ்லாத்திற்கு எதிராகக் கூறப்படும் […]

02) குடும்பக்கட்டுப்பாடை இஸ்லாம் எதிர்க்கிறது

குடும்பக்கட்டுப்பாடை இஸ்லாம் எதிர்க்கிறது மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக இந்தியாவில் வறுமை தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில் குடும்பக் கட்டுப்பாட்டை இஸ்லாம் எதிர்க்கிறது. முஸ்லிமல்லாதவர்கள் குடும்பக்கட்டுப்பாட்டைக் கடைபிடித்து வரும் போது முஸ்லிம்கள் மட்டும் மக்கள் தொகையைப் பெருக்கி பெரும்பான்மையாகி வருகின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருந்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் கூறும் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும். இந்தக் குற்றச்சாட்டைப் பல வழிகளில் அலசிப்பார்க்க வேண்டும். மக்கள் தொகைப் பெருக்கத்தால் […]

01) முன்னுரை

பதிப்புரை இஸ்லாம் குறித்து எழுப்பப்படும் எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளிக்கும் நோக்கத்தில் மூன்று நூல்களை  நாம் வெளியிட்டுள்ளோம். இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிப்பதற்காக முதல் நூலை வெளியிட்டோம். அந்த நூலில் தலாக், பர்தா, பலதார மணம், பாகப்பிரிவினையில் பாரபட்சம் போன்ற பெண்கள் சம்பந்தமான முஸ்லிமல்லாதவர்கள் எழுப்பும் எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் மிக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. அந்த நூல் பல பதிப்புகள் வெளியானதிலிருந்து அதன் தாக்கத்தை அறிந்து கொள்ளலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல […]