Tamil Bayan Points

Category: இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

u305d

7) சொட்டு மூத்திரம் ஒரு சோதனை அல்ல!

சொட்டு மூத்திரம் ஒரு சோதனை அல்ல! இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்பதைப் பட்டியலிட்டுக் கொண்டிருக்கும் இந்த இதழில், முஸ்லிம்கள் தங்களுக்குத் தாங்களே சிரமத்தை ஏற்படுத்திக் கொண்ட ஒரு விஷயத்தைப் பற்றி இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அது தான் சொட்டு மூத்திர நோய் பற்றிய சட்டமாகும். சிலர் தொழுகைக்காக உளூச் செய்து விட்டு, தொழுகையில் நிற்பர். ருகூவுக்குச் செல்லும் போது ஒரு சொட்டு சிறுநீர் வந்தது போன்று ஓர் உணர்வு ஏற்படும். சிலருக்கு ஒரு சொட்டு வந்து […]

6) இத்தா ஒரு விளக்கம்

இத்தா ஒரு விளக்கம் கணவனை இழந்த பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பிரசவிக்கும் வரையிலும், கர்ப்பமாக இல்லா விட்டால் நான்கு மாதம், பத்து நாட்கள் கழியும் வரையிலும் மறுமணம் செய்யக் கூடாது. இந்தக் கால கட்டம் “இத்தா’ எனப்படுகிறது. கணவனுடன் வாழ்ந்தவள் அவனது கருவைச் சுமந்திருக்கலாம்; அந்த நிலையிலேயே அவள் இன்னொருவனை மணந்து கொண்டால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிப்படையும். இரண்டாம் கணவன் அக்குழந்தை தனது குழந்தை இல்லை எனக் கூறுவான். முதல் கணவனின் குடும்பத்தாரும் அது தமது […]

5) எளிய முறையில் விவாகரத்து

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் ஒரு பெண், ஓர் ஆடவனைத் திருமணம் முடித்த பின் அவன் எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் அவனுடன் தான் வாழ வேண்டும்; அவன் மூலம் வாழ்க்கைத் தேவை நிறைவேறாவிட்டாலும் அவனுடன் தான் வாழ வேண்டும் என்பது இந்து தர்மம். கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன் என்ற பழமொழி இதைத் தான் எதிரொலிக்கிறது. கிறித்தவ மதத்திலும் பைபிளின் அடிப்படையில் விவாகரத்து கிடையாது. இதை மாத்யூ 5:32 கூறுகின்றது. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: வேசித்தன முகாந்திரத்தினால் ஒழிய […]

4) இஸ்லாம் காட்டும் எளிய திருமணம்

இஸ்லாம் காட்டும் எளிய திருமணம் வீட்டைக் கட்டிப் பார்! கல்யாணத்தை நடத்திப் பார்! என்று கூறும் அளவுக்குத் திருமணம் என்பது மிகவும் சிரமமான காரியமாக ஆக்கப்பட்டு விட்டது. ஒருவன் திருமணம் முடிக்க வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் இருந்தால் தான் திருமணம் முடிக்க முடியும் என்ற நிலை சமுதாயத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாம் மார்க்கம் திருமணத்தை மிகவும் எளிமையாக ஆக்கி வைத்துள்ளது. அப்பெண்கள் உங்களிடமிருந்து கடுமையான உடன்படிக்கை செய்துள்ளனர். (அல்குர்ஆன் 4:21) திருமணம் என்றால் லட்சக் கணக்கில் […]

3) உடலை வருத்தும் நேர்ச்சைகள்

உடலை வருத்தும் நேர்ச்சைகள் மக்கள் தங்களுக்கு ஏதேனும் ஒரு காரியம் நிறைவேற வேண்டுமானால் அதற்காக நேர்ச்சை செய்வர். அலகு குத்துதல், தீச்சட்டி கையில் ஏந்துதல், காலில் செருப்பில்லாமல் ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து கோயிலுக்குச் செல்லுதல், கோயிலைச் சுற்றி அங்கப் பிரதட்சிணம் செய்தல் என்று தங்களைத் தாங்களே வருத்திக் கொள்கின்ற நேர்ச்சைகளை செய்து வருகின்றனர். பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு விதமான நேர்ச்சைகளைச் செய்வதை நாம் காண்கிறோம். இது போன்று கடுமையான நேர்ச்சைகளைத் தான் கடவுள் ஏற்றுக் கொள்வார் […]

2) சக்திக்கு ஏற்ப கடமை

சக்திக்கு ஏற்ப கடமை இஸ்லாம் மார்க்கம் மக்களுக்கு ஒரு வாழ்க்கை நெறியாக அமைந்துள்ளது. இந்த மார்க்கத்தின் கடமைகள் அனைத்தும், “சக்திக்கு அப்பாற்பட்ட சிரமம் இல்லை’ என்ற அடிப்படையிலேயே அமைந்துள்ளன. அதாவது இஸ்லாம் கூறும் ஒரு கடமையை, செயலைச் செய்வதற்குப் போதிய சக்தி இல்லாத நிலையில் ஒருவர் அந்தக் கடமையைச் செய்யாவிட்டால் அவர் மீது குற்றம் ஏற்படாது. இதைத் திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் சுட்டிக் காட்டுகின்றது. எவரையும் அவரது சக்திக்கு உட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அல்குர்ஆன் […]

1) எளிய மார்க்கம்

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கொளுத்தும் வெயிலில் கோயிலைச் சுற்றி தரையில் உருண்டு அங்கப் பிரதட்சிணம் செய்தல், வாயிலும், முதுகிலும் அலகு குத்திக் கொண்டு கொக்கிகளில் மாட்டி அந்தரத்தில் தொங்குதல், ஆணியில் நடப்பது, தீச்சட்டிகளைக் கையில் ஏந்துதல், தீ மிதித்தல், மொட்டைத் தலையில் தேங்காய் உடைத்து மண்டையையும் பிளப்பது, நரபலி கொடுத்தல் கணவனை இழந்த பெண் அதிகப்பட்சமாக “சதி’ என்ற பெயரில் தற்கொலை செய்து கொள்ளுதல், குறைந்தபட்சமாக மொட்டையடித்துக் கொண்டு, வெள்ளாடை உடுத்தி, மூளியாக மூலையில் முடங்கிக் […]