Tamil Bayan Points

Category: அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுப்பூர்வமான பதில்கள்

u305e

67) மறுமை என்பது உண்மையா?

கேள்வி: நான் வேலை செய்யும் கடைக்கு வந்த, நாத்திகர் ஒருவரிடம் நம் மார்க்கத்தையும், அதன் சிறப்பையும் கூறும் பொழுது, அவர் ஓர் கேள்வி கேட்டார். அதாவது, மறுமை என்பதை எவ்வாறு நீங்கள் உண்மை என்று கூறுகிறீர்கள்? ஆதாரம் உள்ளதா? மரணத்திற்குப் பின்பு மனித உடல் மட்கியவுடன் எவ்வாறு அவை திரும்ப எழுப்பப்படும்? எரிக்கப்படுபவர் அல்லது மீன் விழுங்கி மரணம் அடைந்த வர்கள் எவ்வாறு மீள முடியும்? மண்ணறையில் வேதனை நடைபெற்றால் மண்ணறையைத் தோண்டிப் பார்க்கும் போது அவ்வாறு […]

66) பரத நாட்டியம், கதகளி போன்ற கலைகளை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

கேள்வி : பெண்கள் பரத நாட்டியம், கதகளி, குச்சிப்புடி போன்ற பல வகையான கலைகளில் ஈடுபட இஸ்லாம் அனுமதிக்கிறதா? அனுமதிக்கவில்லை என்றால் நாட்டின் கலை கலாச்சாரம் எப்படி வளரும்? அதிகமான பேருக்கு வேலையில்லாமல் போய் விடுமே? விளக்கம் தரவும். சுரேஷ், திருக்குறுங்குடி பதில் : பெண்களைப் போகப் பொருளாக்கி ஆண்கள் ரசிக்கவே நீங்கள் குறிப்பிடும் நாட்டியங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன் பரிணாம வளர்ச்சியாக சினிமாவும், நீலப்படங்களும் உருவாகியுள்ளன. பெண்கள், கண்டவர்களும் ரசித்து, அனுபவிக்கும் போகப் பொருட்கள் என்பதை இஸ்லாம் […]

65) இறந்த மீன்களைச் சாப்பிடுவது ஏன்?

கேள்வி : இறந்த ஆடு, மாடு, கோழிகளை சாப்பிட மறுக்கும் நீங்கள் ஏன் இறந்த மீன்களைமட்டும் சாப்பிடு கிறீர்கள் என்று என் பக்கத்து வீட்டு அன்பர் கேட்கிறார். இராயப்பேட்டை அஸ்ரப் சென்னை. பதில் : நீர் வாழ் உயிரினங்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நீர் வாழ் உயிரினங்களுக்கு ஓடுகின்ற இரத்தம் கிடையாது. அதை உயிருடன் பிடித்துஅறுத்தாலும் அதில் இரத்தம் சிறிதளவு கசியுமே தவிர இரத்தம் ஓடாது. வடிவது கூடஇல்லை இஸ்லாமிய நம்பிக்கையின் படி ஓட்டப்படும் இரத்தம் […]

64) ஆதம், ஹவ்வா ஆகியோரின் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் திருமணம் செய்தது ஏன்?

கேள்வி: ஆதம், ஹவ்வா இருவர் மூலமே மனித குலம் பல்கிப் பெருகியதாக இஸ்லாம் கூறுகிறது. ஆதம், ஹவ்வா ஆகியோரின் நேரடிப் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் தானே திருமணம் செய்திருக்க முடியும்? சொந்தச் சகோதரியை மணப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறதா? என்று எனது மாற்று மத நண்பர் கேட்கிறார். விளக்கம் தரவும் – எம். தவ்ஃபீக் அஹ்மத், தமாம். பதில்: ஆதம், ஹவ்வா ஆகிய இருவர் வழியாகவே மனித குலம் தோன்றியது என்பது தான் இஸ்லாத்தின் கோட்பாடு. இந்த இருவரைத் […]

63) பிராணிகளுக்கு சுவர்க்கம் -நரகம் உண்டா?

கேள்வி: இறைவன் மறுமையில் மனிதனை எழுப்பி கேள்வி கேட்பான் என்றால், உலகத்தில் வாழும் விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகள் இறந்து விட்டாலும், அதையும் மறுமையில் எழுப்பி கேள்வி கேட்பானா? அதற்கும் சுவர்க்கம் – நரகம் உண்டா? என்று என்னிடம் மாற்று மத அன்பர் கேட்கிறார். – எம். முஹம்மது முஸ்தபா, சிவகாசி. பதில்: அவற்றுக்கும் விசாரணை உண்டு. ஆயினும், மனிதர்களுடைய விசாரணையிருந்து அது வித்தியாசமானது. மனிதர்களுக்கு பகுத்தறிவு இருப்பதால் அவர்களுக்கு மட்டுமே நன்மை தீமைகளுக்கு ஏற்றவாறு சொர்க்கம், […]

62) ஈஸா நபியின் தோற்றம் ஏது?

கேள்வி : இஸ்லாமிய நம்பிக்கையின் படி ஈஸா நபி (இயேசு) திரும்பி வருவார். அப்படி வரும் போது கிறித்தவர்கள் ஈஸா நபியின் உருவத்தை தற்போது வைத்துள்ளது மாதிரி தான், ஈஸா நபியின் (இயேசுவின்) உருவம் இருக்குமா? அல்லது வேறு மாதிரியாக இருக்குமா? -எம். கண்ணன், அபுதாபி பதில்: ஈஸா நபியின் உருவமாக இன்று அறிமுகமாகியிருக்கும் உருவத்திற்கும் ஈஸா நபிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இயேசு நாதரின் சீடர்கள் யாரும் இயேசு நாதரை வரையவும் இல்லை. இயேசுநாதர் காலத்திற்கு […]

61) ஈஸா நபி பிறந்த தினத்தை ஏன் கொண்டாடக் கூடாது?

கேள்வி : ஏசு என்னும் ஈஸா நபியை இறைத் தூதர் என்று ஏற்றுக் கொள்கிறீர்கள். அப்படியானால் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் நீங்கள் ஈஸா நபியின் பிறந்த நாளை ஏன் கொண்டாடக் கூடாது? என்று மாற்று மத நண்பர் கேட்கிறார். விளக்கம் தரவும். எஸ். செய்யது அலி ஜின்னா, மும்பை – 72 பதில் : முஸ்லிம்கள் செய்யும் ஒரு தவறு இன்னொரு தவறை நியாயப்படுத்த உதவாது. இஸ்லாத்தில் மீலாது விழா என்பது கிடையாது. நபிகள் […]

60) இயேசு இறங்கும் போது கிறித்தவர்கள் அனைவரும் அவர் தான் ஈஸா நபி என்று அடையாளம் தெரிந்து கொள்ள முடியுமா?

கேள்வி : என்னுடைய கிறித்தவ நண்பரிடம் ஈஸா நபி (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட வில்லை. அவரை இறைவன் தன் பால் உயர்த்திக் கொண்டான் என்பதைக் குர்ஆன் ஆதாரத்துடன் காண்பித்தேன். மேலும் ஈஸா நபி அவர்கள் டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரில் இறங்குவார்கள் என்றும் சொன்னேன். இதற்கு இயேசு இறங்கும் போது கிறித்தவர்கள் அனைவரும் அவர் தான் ஈஸா நபி என்று அடையாளம் தெரிந்து கொள்ள முடியுமா? அவரை ஏற்றுக் கொண்ட கிறித்தவ மதம் அப்போது இருக்காதா? அவர் […]

59) ரஹ், அலை, ஸல், ரலி – என்றால் என்ன?

கேள்வி: முன் சென்றவர்களின் பெயருக்குப் பின்னால் ஸல், அலை, ரலி, ரஹ் என்றெல்லாம் முஸ்லிம்களாகிய நீங்கள் குறிப்பிடுவதன் கருத்து என்ன என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறார். எப்படி விளக்கம் கூறுவது? – தஸ்லீம், சென்னை. பதில்: ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதன் சுருக்கமாகும். எழுத்தில் ஸல் என்று கூறப்பட்டாலும் வாசிக்கும்போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று வாசிக்க வேண்டும். ‘அவர் மீது அல்லாஹ் சிறப்பருள் புரியட்டும். சாந்தியை வழங்கட்டும்’என்பது இதன் பொருள். நபிகள் நாயகம் […]

58) தாடி வைப்பது எதற்கு?

கேள்வி: ஒரு மாற்றுமத நண்பர், முஸ்லிம்களில் ஆண்கள் தாடி வைக்கின்றார்கள். அது எதனால் என்றும், ஆண்களுக்கும் – பெண்களுக்கும் முகத்தில் வேறுபாடு காண்பிப்பதற்கு என்று கூறினால், நவீன யுகத்தில் ஆடை மூலமோ அல்லது பெண்களிடம் உள்ள மற்ற வேறுபாடுகள் மூலமோ அறிந்து கொள்ளலாமே என்று கூறுகிறார். – முஹம்மது அலி, தென்காசி விளக்கம்: வேறுபாடு காட்டுவதற்காக என்று கூறுவது இதற்கான முழுமையான பதிலாக ஆகாது ஆண் என்பவன் தன்னை முழு அளவில் ஆண் என்று வெளிப்படுத்த வேண்டும். […]

57) குரைசி வம்சத்திற்கு மாத்திரம் ஏன் சிறப்புத் தகுதி?

கேள்வி: நபிகள் நாயகத்திற்குப் பிறகு வரும் ஆட்சித் தலைவர்கள் குரைசி என்ற (நபியவர்களின்) வம்சத்தைச் சார்ந்தவராகத் தான் இருக்க வேண்டும் என்பது நபி வாக்கு. குரைசி வம்சத்திற்கு மாத்திரம் ஏன் இந்த சிறப்புத் தகுதி? மற்றவர்களால் ஆட்சி செய்ய முடியாதா? என்று மாற்று மத சகோதரர் கேட்கிறார். – ஹெச்.எம். ஹில்மி, அக்கூரன, இலங்கை. பதில்: குரைஷி என்னும் குலத்துக்குத் தான் சிறப்புத் தகுதி என்ற அடிப்படையில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறவில்லை. மாறாக, இது […]

56) நபி (ஸல்) அவர்கள் கதீஜாவை மணந்தது எதற்காக?

கேள்வி: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய செல்வச் சீமாட்டி கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தது ஏன்? பணம் இருந்ததால் தான் விதவைப் பெண்ணான கதீஜா (ரலி) அவர்களை மணம் முடித்தார்கள் என்று ஒரு மாற்று மத சகோதரி கூறுகிறார்! இதற்கு என்ன விளக்கம்? – சி. முஹம்மது வாசிம், கொள்ளுமேடு. பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் தான் இறைவனின் தூதராக நியமிக்கப்பட்டார்கள். அவர்களின் நாற்பதாம் வயது முதல் மரணிக்கும் […]

55) பாபரி மஸ்ஜிதைக் காக்க அபாபீல் பறவை வராதது ஏன்?

கேள்வி: இறைவன் தனது ஆலயமான கஃபாவை அழிக்க வந்தவர்களைச் சிறு பறவைகள் மூலம் அழித்து ஒன்றுமில்லாமல் ஆக்கினான் என்கிறீர்கள். ஆனால், பாபர் மஸ்ஜித் இடிப்பின் போது இது போன்ற நிகழ்வுகள் ஏன் நடைபெறவில்லை என்ற என் நண்பரின் கேள்விக்கு எவ்வாறு பதில் கூறலாம்? – ஹெச். முகைதீன், சென்னை-113. பதில்: இரண்டு காரணங்களால் இந்தக் கேள்வியே தவறானது என்பதை அவருக்குப் புரிய வையுங்கள்! திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் அடிப்படையில் கஃபாவும் உலகின் ஏனைய பள்ளிவாசல்களும் சமமானவை […]

54) பட்டிமன்றம் நடத்தலாமா?

கேள்வி: எமது நாட்டில் அரபு மத்ரஸாக்களுக்கு மத்தியில் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒரு தனியார் நிறுவனத்தின் அனுசரனை யுடன் வாரம் தோறும் விவாத நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. ஹாரூன் ரஷீதுடைய காலத்திலும் இது போன்ற நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது என்று சொல்லிக் கொண்டு பல தலைப்புக்களிலும் பட்டி மன்றம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவின் பட்டிமன்றம் போலவே இதன் முறை அமைந்திருக்கின்றது. இதற்கு நடுவராக இந்தியர் ஒருவரே இருக்கின்றார். இந்தியத் தமிழ் பட்டி மன்றம் போன்று இது […]

53) உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவமா?

கேள்வி : தாவரங்களுக்கு மைய நரம்பு மண்டலம் (ஈங்ய்ற்ழ்ஹப் சங்ழ்ஸ்ர்ன்ள் நஹ்ள்ற்ங்ம்) இல்லாததால் அவை வலியை உணர முடியாது. உணவுக்காகக் கொல்லும் போது தாவரங்களுக்கு வலிப்பதில்லை. ஆனால் விலங்குகளுக்கு மைய நரம்பு மண்டலம் (ஈங்ய்ற்ழ்ஹப் சங்ழ்ஸ்ர்ன்ள் நஹ்ள்ற்ங்ம்) இருப்பதால் அவைகளால் வலியை உணர முடியும். அதனால் உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவம் என்று வாதிடுகிறார்கள். இதற்கு தங்களின் பதில் என்ன? விளக்கம் தரவும். பி.எம். அஜீஸ், திருத்துறைப்பூண்டி. பதில் : ஒரு உயிரை எப்படிக் கொல்லலாம்? கொன்று […]

52) மறு பிறவி உண்டா?

கேள்வி : என்னுடைய ஒரு ஹிந்து நண்பன் மறு பிறவி இல்லையென்பதை நிரூபித்தால் நான் இஸ்லாத்தில் வந்து விடலாம் எனக் கூறியுள்ளான். எனவே தயவு செய்து பதில் தந்தால் அந்த நண்பனின் சந்தேகம் தீர்க்க வாய்ப்பாக அமையும். ஹெச்.ஜாஃபர் சாதிக், கேரளா. பதில் : மறு பிறவி என்பது கற்பனையே தவிர வேறில்லை என்பதைச் சிரமமின்றி நிரூபித்து விடலாம். அதற்கு முன்னால் மறு பிறவி என்பது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மனிதர்கள் இன்று நல்ல […]

51) அத்தாட்சிகளை மறுக்கலாமா?

கேள்வி: தங்களின் பார்வைக்கு மரம் ருகூவு செய்வது போன்ற புகைப்படத்தின் காப்பியை அனுப்பி உள்ளேன். இது போன்ற வேறு சில புகைப்படங்களும் கை வசம் உள்ளன. மீன் வயிற்றில் அல்லாஹ் என்றும் முஹம்மது என்றும் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மன் நாட்டில் ஒரு மரத்தில் (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்ற அரபி பதம் தெளிவாக தெரியும் வகையில் அமைந்த புகைப் படங்களும் உள்ளன. இது போன்ற விஷயங்களை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற கருத்தோடு நானும் இணைகிறேன். […]

50) நல்லதை அறிய அறிவு மட்டும் போதுமா?

கேள்வி : மனிதனின் அறிவு நல்லதை மட்டும் ஏவுமா, தீயதையும் ஏவுமா? காரல் மார்க்ஸ் வாதிகள் ‘மனிதனின் அறிவாற்றல் தான் எல்லாமே; மற்ற எந்த நம்பிக்கையும் வீண்’ என்கிறார்கள். கல்லூரி மாணவிகள் இதைப் பற்றி அறிய பெரிதும் ஆவல் கொள்கிறார்கள். விளக்கவும்! -ஜுலைஹா புதல்வி, தருமாபுரம், காரைக்கால் பதில் : மனிதனின் அறிவு மகத்தானது என்பதில் ஐயமில்லை. பல விஷயங்களை அறிவு சரியாகவே கண்டு பிடித்து விடும். ஆயினும் சில விஷயங்களில் அறிவு தவறிழைத்து விடுவதும் உண்டு. […]

49) கருவளர்ச்சி காலம் பற்றி குர்ஆன் கூறுவது சரியா?

கேள்வி: மனித வளர்ச்சியில் கருவறையின் காலம் சராசரி பத்து மாதங்கள். குர்ஆனில் وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ أَرَادَ أَنْ يُتِمَّ الرَّضَاعَةَ 2:233-வது வசனம் பால்குடியின் காலம் 2 வருடம் எனக் கூறுகிறது. இவை இரண்டும் சேர்ந்தால் மொத்த மாதங்கள் முப்பத்து நான்கு ஆகிறது. இப்படியிருக்க, அல்குர்ஆனின் وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا 46:15-வது வசனத்தில் கருவறை மற்றும் பால்குடியின் […]

48) குளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா?

கேள்வி: மாற்று மதத்தவர் ஒருவர் – அல்லாஹ் தான் படைப்பவன் என்றால் மனிதனை இப்போது குளோனிங் முறையில் படைக்கிறார்களே, அவர்கள் எல்லாம் அல்லாஹ்வை வணங்க வேண்டியதில்லையா? என்று கேட்கிறார். விளக்கம் தரவும்! -எஸ். ராஜா முஹம்மது, காயல்பட்டணம் விளக்கம்: இறைவன் உயிரினங்களில் ஏற்கனவே படைத்து வைத்துள்ள கோடிக்கணக்கான மரபணுக்களில் ஒன்றை எடுத்து அதை வளர்த்துக் காட்டுவது தான் குளோனிங். இது படைத்தல் ஆகாது. மண்ணிலிருந்தோ, உலோகத்திலிருந்தோ ஒரு உயிரணுவையோ, அல்லது மரபணுவையோ படைக்கச் சொல்லுங்கள்! எறும்பின் மரபணுவைக் […]

47) இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா?

இறந்தவரின் உறுப்புகளைக் கொண்டே தவிர வேறு எந்த சிகிச்சையாலும் மனித உயிரைக் காப்பாற்ற முடியாது என்ற இக்கட்டான நிலை வரும் போது இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாமிய ஷரீஅத் அனுமதிக்கிறதா? கூடுமா? ஏனெனில், அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உடல் உறுப்புகளை அமானிதமாக வழங்கியுள்ளான். அந்த அமானிதத்தை முழுமையாக அவனிடத்தில் சேர்ப்பது மனிதனின் கடமையாகும். மறுமையில் அல்லாஹ்வுடைய சந்நிதானத்தில் நாம் முழுமையான உடலுறுப்புகளுடன் நிறுத்தப்பட்டு கேள்வி கணக்கு கேட்கப்படுவோம் என்பதற்கு குர்ஆனுடைய வசனங்கள் சான்று […]

46) சிந்திப்பது இதயமா? மூளையா?

குர்ஆன், இரட்டை வேடம் போடுபவர்களைக் குறிப்பிடும் போது, அவர்கள் செவியிருந்தும் கேளாதவர்கள்; பார்வை இருந்தும் குருடர்கள்; இதயம் இருந்தும் சிந்திக்க மாட்டார்கள்’ என்று ஓர் இடத்திலும் (இந்த) குர்ஆனை அவர்கள் ஆராய்ந்து பார்க்க மாட்டார்களா? அல்லது (அவர்களுடைய) இதயங்களின் மீது பூட்டுகள் (போடப்பட்டு) இருக்கின்றனவா?’ (47:24) என்று ஓர் இடத்திலும் கூறுகின்றது. இந்த வசனங்களை மாற்று மதத்தவர்கள் படிக்கும் போது, சிந்திப்பது மூளை தானே? அல்லாஹ் இதயத்தைக் குறிப்பிடுகிறானே? இதயத்தின் வேலை சிந்திப்பது இல்லையே? என்று கேட்கிறார்கள். […]

45) திருமணத்திற்கு இரண்டு சாட்சிகள் போதுமா?

கேள்வி : என்னுடைய இந்து நண்பர் அல்குர்ஆன் தமிழாக்கம் படித்து வருகிறார். அவர் அத்தியாயம் 24:13 படித்து விட்டு ஆயிஷாவை குற்றம் கூறியவர்களைப் பார்த்து இறைவன் நான்கு சாட்சிகள் கேட்கிறான். ஆனால் நான் பல முஸ்லிம் திருமணங்களில் பெண் வீட்டார் ஒரு சாட்சி மாப்பிள்ளை வீட்டார் ஒரு சாட்சி ஆக இரண்டு சாட்சிகளுடன் திருமணம் முடிக்கிறார்களே இது கூடுமா? என்று கேட்கிறார். விளக்கம் தரவும். -எம். திவான் மைதீன், பெரியகுளம் பதில் : இஸ்லாமியச் சட்டப்படி கொடுக்கல்-வாங்கல், […]

44) முத்தலாக் மூலம் பெண்களின் உரிமைகளை இஸ்லாம் பறிப்பது ஏன்?

கேள்வி : முத்தலாக் போன்ற விவகாரங்களின் மூலம் இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கின்றதே? என்று முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கிறார்களே? சாஜிதா ஹுஸைன், சென்னை. பதில்: விவாகரத்துச் செய்த பின் அதனால் பெண் களே அதிகம் பாதிக்கப்படுவதால் பெண்களின் உரிமை பாதிக்கப்படுவது போல் தோற்றமளிக்கிறது. ஆனால் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் தலாக் என்னும் விவாகரத்து முறையினால் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்ற உண்மையை அறியலாம். விவாகரத்து செய்யும் உரிமை கணவனுக்கு இல்லா விட்டால் அந்த உரிமையைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை […]

43) விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்ய கேவலமான பந்தனை ஏன்?

கேள்வி: இஸ்லாமிய முறைப்படி ஒரு மனிதன் தன் மனைவியை மூன்றாவது தடவையாக விவாகரத்து செய்து விட்டால் மீண்டும் அவளைத் திருமணம் செய்ய முடியாது; அவ்வாறு திருமணம் செய்ய வேண்டுமென்றால், அந்தப் பெண் வேறொருவனைத் திருமணம் முடித்து, அவன் அந்தப் பெண்ணுடன் தாம்பத்திய உறவு கொண்டு அவளை விவாகரத்து செய்த பின்பு தான் முதல் கணவனை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? என்று முஸ்லிமல்லாத நண்பர் என்னிடம் கேட்டார். நான் ஆமாம் என்று சொன்னேன். அதற்கு மாற்றுமத நண்பர், […]

42) குழந்தை பெறும் தகுதியற்றவர்களுக்கு இத்தா’ அவசியமா?

கேள்வி: இஸ்லாமிய மார்க்கத்தில் மாதவிடாய் வரக்கூடிய குழந்தை பெறத் தகுதியுடையவர்கள், கணவன் இறந்த பின்பு இத்தா’ இருப்பது (4 மாதம் + 10 நாள்) ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று. ஆனால், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள், மாதவிடாய் பிரச்சனை காரணமாக, கர்ப்பப் பையை அகற்றியவர்கள், தள்ளாத வயதுடைய கிழவி இவர்களுக்கு இத்தா’ அவசியமா! -பாட்சா பஷீர், அல்-ஜூபைல். பதில்: இறந்து போன கணவனின் கருவை மனைவி சுமந்திருக்கிறாரா? என்பதை அறிவது இத்தாவுடைய நோக்கங்களில் மிகவும் முக்கியமானதாகும். கணவன் […]

41) ஆண்களிடமிருந்து பெண்கள் வரதட்சணை வாங்குவது ஆண்களுக்குக் கஷ்டமாகாதா?

கேள்வி: திருமணத்தின் போது ஆண்கள் பெண்களிடமிருந்து வரதட்சணை வாங்குவதைஇஸ்லாம் மார்க்கம் தடை செய்கிறது. ஆனால், திருமணத்தின் போது பெண்கள்ஆண்களிடமிருந்து வரதட்சணை வாங்குவதை அனுமதிக்கிறது. இது ஆண்களுக்குக்கஷ்டமாகாதா? என்று என் நண்பர் ஒருவர் கேட்கிறார் . – அப்துல் முனாப், அல்-அய்ன். விளக்கம் : கொடுப்பது எப்போதுமே கஷ்டமானது தான். இதில் எந்தச் சந்தேகமும்இல்லை. மனைவிக்குச் சோறு போடுவதும் உடைகள் மற்றும் அணிகலன்கள் எடுத்துக்கொடுப்பதும் கூட ஆண்களுக்குக் கஷ்டமானது தான். அதற்காக ஆண்கள் மீது அந்தச் சுமையைச் சுமத்தக் […]

40) பெண் நபி ஏன் இல்லை?

கேள்வி : ஏராளமான நபிமார்களை (ஆண்களை மட்டும்) தேர்ந்தெடுத்து இவ்வுலகத்திற்குஇறைவன் அனுப்பியுள்ளான் என்கிறது உங்கள் மதம். அப்படியென்றால் நபியாக ஒருபெண்ணைக் கூட தேர்ந்தெடுக்கவில்லையே ஏன்? அல்லது ஒரு பெண் நபியாகவருவதில் உங்கள் இறைவனுக்கே உடன்பாடில்லையா? இப்படியிருக்கும் பட்சத்தில்பெண்களுக்கு உங்கள் மதத்தில் தான் சம உரிமை இருக்கிறது என்கிறீர்கள். ஏன் இந்தமுரண்பாடு? என்று வாதிடுகிறார் மாற்று மத நண்பர். எஸ். சீனி சலாப்தீன், மண்டபம். பதில் : (முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம்.அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், […]

39) இஸ்லாம் ஏன் போரை விதிக்க வேண்டும்?

கேள்வி : எங்கள் பக்கத்து வீட்டு இந்து நண்பரிடம் எனக்கு நீண்ட நாளாக பழக்கம் உண்டு. அவரிடம் இஸ்லாத்தை அறிமுகம் செய்தேன். குர்ஆனையும் அவருக்கு படிக்கக் கொடுத்தேன். அவருக்கு அதில் சந்தேகம் ஏற்பட்டது. அதில் இஸ்லாம் ஏன் போரை விதிக்க வேண்டும், மனிதனை மனிதன் கொன்று குவிப் பதும் பொருளாதாரத்தைச் சேதப்படுத்துவதும் தன்னு டைய பாதையில் போர் செய்வதாக சிறப்பித்துக் கூறு வதா? இது இறைவனின் மகா கருணைக்கு இழுக்காக இல்லையா? என்று கேட்கிறார் விளக்கம் தரவும். […]

38) மற்ற மதங்களை விமர்சிக்கக் கூடாதா?

கேள்வி: ஏனைய மதங்களை விமர்சிக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால், திருக் குர்ஆனே பல இடங்களில் ஏனைய மதங்களையும், ஏனைய மதங்களின் கடவுள் கொள்கையைப் பற்றியும் விமர்சிக்கின்றதே? ஏன் இந்த முரண்பாடு? – ஹெச்.எம். ஹில்மி, அக்கூரன, இலங்கை. பதில்: ஏனைய மதங்களை விமர்சிக்கக் கூடாது என்று திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. பிற மதத்தவர்கள் கடவுளர்களாகக் கருதுவோரை ஏசக் கூடாது என்று தான் குர்ஆன் கூறுகிறது. அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக் கிறார்களோ அவர்களை […]

37) மாற்று மதத்தினரிடமிருந்து பள்ளிவாசலுக்காக அன்பளிப்பு வாங்க தடையிருக்கிறதா?

மாற்று மதத்தினரிடமிருந்து பள்ளிவாசலுக்காக அன்பளிப்பு வாங்க தடையிருக்கிறதா? கேள்வி : எனது மாற்று மத நண்பர் ஒருவர் வருத்தத்தோடு என்னிடம் சொன்னார். நான் பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளுக்காகவும், நோன்புக் கஞ்சிக்காகவும் ஒரு தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தேன். நான் இந்து என்பதால் வாங்க மறுத்து விட்டார்கள். இது சரி தானா? என்று கேட்கிறார். எஸ்.ஏ. இர்பான் பாஷா, தர்மபுரி பதில் : பள்ளிவாசல்களிலேயே சிறந்த பள்ளிவாசல் கஃபா ஆலயம் தான். சிதிலமடைந்த இந்த ஆலயம் நபிகள் நாயகம் (ஸல்) […]

36) மாற்று மதத்தவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது ஏன்?

 மாற்று மதத்தவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது ஏன்? கேள்வி: மாற்று மதத்தவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் என்று குர்ஆனில் உள்ளதே! ஆதலால் எங்களை நண்பர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ள மாட்டீர்களா? என்று மாற்று மத நண்பர் கேட்கிறார். ஏ.கே. அப்துல் சலாம், நாகர்கோவில் திருக்குர்ஆனின் 3:28, 4:89, 4:139, 4:144, 5:51, 5:80, 9:23 ஆகிய வசனங்களில் நீங்கள் சுட்டிக் காட்டுகின்ற கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது. இஸ்லாம் இன வெறியைத் தூண்டுவதாக இவ்வசனங்களைப் பார்க்கும் சிலர் […]

35) மாற்று மதத்தவர்கள் நோன்பு வைக்கலாமா? தொழலாமா?

மாற்று மதத்தவர்கள் நோன்பு வைக்கலாமா? தொழலாமா? கேள்வி : மாற்று மத நண்பர்கள் இருவர் நோன்பு வைத்தும், தொழுதும் வந்தார்கள். அதை நமது சகோதரர் ஒருவர் நீங்கள் நோன்பு நோற்பதும், தொழுவதும் பாவம். அதனால் இனி நோன்பு வைக்காதீர்கள் என்று சொல்லி இருக்கிறார். அவர்களிடம் நீங்கள் சுன்னத் செய்யவில்லை. கலிமா சொல்லவில்லை என்றும் கூறியிருக்கிறார். அவர்கள் நோன்பு வைக்கலாமா? தொழலாமா? அவர்களுக்கும் நன்மை கிடைக்குமா? குடவாசல் எம். கமால் பாட்சா, மயிலை. பதில் : இதில் இரண்டு […]

34) புத்தர் பற்றி குர்ஆன் கூறுவது என்ன?

 புத்தர் பற்றி குர்ஆன் கூறுவது என்ன? கேள்வி: புத்தர் பற்றி திருக்குர்ஆன் கூறுவது என்ன? என்று புத்த மத நண்பர் கேட்கிறார். அவருக்கு எப்படி விளக்கம் கூறுவது? – இலங்கை எம்.ஜே.எம். நிஜாம்தீன், ஜித்தா பதில்: குர்ஆன், உலகத்தில் வந்த ஒவ்வொருவரையும் பற்றி குறிப்பிடும் வரலாற்றுப் புத்தகமல்ல. அவ்வாறு எழுதப்படுவதாக இருந்தால் இப்போது இருப்பதை விட ஆயிரம் மடங்கு பெரிதாக குர்ஆன் ஆகி விடும். மனிதன் இவ்வுலகில் எப்படி வாழ்ந்தால் அது நன்மை தரும் என்பதை மட்டுமே […]

33) ஏன் தத்து எடுக்கக் கூடாது?

ஏன் தத்து எடுக்கக் கூடாது? கேள்வி : ஒரு இந்து மத நண்பர் என்னிடம் இஸ்லாத்தில் தத்து எடுத்தல் கூடாது என்று உள்ளது பெரிய குறையாக உள்ளது. குழந்தையே இல்லாது தங்களுக்குக் குழந்தை வேண்டும் என்று விரும்புவோர் என்ன செய்வது? விபத்து, பெற்றோரின் நடத்தை சரியில்லாமல் பிரியும் குழந்தைகளுக்கு நாம் ஒரு வழிகாட்டியாக திகழலாம். இது கூடாது என்பதினால் இதை விட மோசமான டெஸ்ட் டியூப் பேபி’ என்ற முறையைத் தேர்ந்தெடுகிறார்கள் என்று கேட்டதற்கு என்னால் பதில் […]

32) அசையும் பூமியை அசையாத பூமி என்று குர்ஆன் கூறுவது ஏன்?

 அசையும் பூமியை அசையாத பூமி என்று குர்ஆன் கூறுவது ஏன்? கேள்வி : …உங்களுடைய பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுவினான். திருக்குர்ஆன் 16:15 என்று இறைவசனம் கூறுகின்றது. ஆனால் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. சுற்றுவதும் அசைவுகளால் நிகழ்வது தானே. ஆனால் இறைவன் அசையாதிருப்பதற்காக மலைகளை நிறுத்தியுள்ளோம் என இறை வசனத்தில் வருகிறதே! குழப்பமாக உள்ளது. விளக்கம் தரவும். -ஜீ. முஹம்மது ஜலீல், நாகப்பட்டிணம் பதில் […]

31) இஸ்லாம் வாரிசு அரசியலை ஏற்கிறதா?

இஸ்லாம் வாரிசு அரசியலை ஏற்கிறதா? கேள்வி : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறை வுக்குப் பின், கலீஃபாக்களாக அபூபக்கர் (ரலி), அலீ (ரலி) மற்றும் ஹசன் (ரலி) ஆட்சி பொறுப்பேற்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆண் வாரிசு இல்லாததால் தான் முறையே மாமனார், மருமகன், பேரன் என பொறுப்பேற்க முடிந்ததா? இஸ்லாம் வாரிசு அரசியலை ஏற்கிறதா? மறுக்கிறதா? என்று முஸ்லிம் அல்லாதவர்கள் கேட்டால் என்ன பதில் கூறுவது. விளக்கம் தரவும். -கா.ஷபீயுல்லாஹ், ஏரிப்புதூர் பதில்: […]

30) இஸ்லாமும், வாஸ்து சாஸ்திரமும்!

 இஸ்லாமும், வாஸ்து சாஸ்திரமும்! கேள்வி : இஸ்லாமிய மார்க்கச் சகோதரர்களில் சிலர் வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் வீடு, கடைகள் அமைக்கின்றார்களே? இஸ்லாம் எப்படி அறிவுப்பூர்வமான மார்க்கம் எனக் கூற முடியும் என்று சிலர் கேட்கிறார்கள். விளக்கம் தரவும். மு. ஷேக்மைதீன், தென்காசி. பதில் : முஸ்லிம்களில் அறிவீனர்கள் செய்யும் செயலை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்தக் கூடாது. இஸ்லாம் ஆதரிக்கிறதா என்பதைத் தான் கவனிக்க வேண்டும். கடவுளை நம்புவோர் மனிதனை விட கடவுளுக்கு அறிவு அதிகம் என்பதை […]

29) திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பு அருளப்பட்டதற்கான ஆதாரம் என்ன?

திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பு அருளப்பட்டதற்கான ஆதாரம் என்ன? கேள்வி: திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியது என்பதற்கான ஆதாரம் என்ன? என்று மாற்றுமத சகோதரர் கேட்கிறார். – ஆஸிப் இப்ராஹீம், புதுக்கோட்டை-1. பதில்: முஹம்மது நபியவர்கள் கற்காலத்தில் வாழ்ந்தவ ரல்லர். வரலாறுகள் எழுதப்படுகிற காலத்தில் வாழ்ந்தவர். முஹம்மது நபியவர்கள் வாழ்ந்த காலம், அவர்களது பிரச்சாரம், சாதனை யாவும் வரலாற்றில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. முஸ்லிமல்லாதவர்களும் இவ்வரலாற்றைப் பதிவு செய்துள்ளனர். அந்த வரலாற்றின்படி நபிகள் நாயகம் (ஸல்) […]

28) காட்டுவாசிகளின் நிலை என்ன?

காட்டுவாசிகளின் நிலை என்ன? கேள்வி: இஸ்லாத்தை ஏற்காதவர்களுக்கு நரகம் எனக் கூறுகிறீர்கள். அப்படியானால் இஸ்லாமிய போதனைகள் சென்றடையாத காட்டுவாசிகள் போன்றோரின் நிலை என்ன என்று முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கின்றனர். எஸ். சீனி சலாபுதீன், எம். ராஜா முஹம்மது, எம். சாஹுல் ஹமீது, டி. சீனிநைனா, எஸ். சித்தீக், பி. அப்துல் ரஹ்மான் ஷாஹிது கூல்பார், பெரிய கடை வீதி, மண்டபம் (டஞ) பதில் : மூஸா நபியவர்கள் ஃபிர்அவ்னிடம் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த போது நீங்கள் […]

27) முஹம்மது நபி, இயேசுவை விட சிறந்தவரா?

முஹம்மது நபி, இயேசுவை விட சிறந்தவரா? கேள்வி: என்னுடன் பணியாற்றும் பிப்பைன்ஸ் கிறிஸ்தவ நண்பர்கள் (1) இயேசு திரும்பிவருவார்; முஹம்மது வர மாட்டார் எனவும் (2) இயேசு இறைவனுடன் (மகனாக)இருக்கின்றார்; உங்கள் முஹம்மது ஏன் மரணித்தார்? இயேசு போல் ஏன் மேலேசெல்லவில்லை? எனவே இயேசு இறைவனின் மகன். அவரும் எங்கள் கடவுள் என்றுகூறுகின்றனர். இவர்களுக்கு எவ்வாறு விளக்கம் தரலாம்.  – ஜெ. அபூபக்கர், ஜித்தா. பதில்: தந்தையின்றி அவர் பிறந்தது, இன்றளவும் உயிருடன் இருப்பது போன்றகாரணங்களைக் கூறித் […]

26) திருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்?

 திருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்? கேள்வி: உலகம் முழுவதும் எத்தனையோ மொழிகள் பேசப்படுகின்றன. அத்தனை மொழிகளையும் விட்டு, விட்டு உங்கள் வேதமாகிய குர்ஆனை, ஏன் இறைவன் அரபி மொழியிலே இறக்கி வைத்தான்? என்று மாற்று மத நண்பர்கள் கேட்கிறார். – எஸ்.எம்.ஹெச். கபீர், கீழக்கரை. பதில்: மனிதர்களிலிருந்து தூதர்களைத் தேர்வு செய்து அவர்கள் மூலமே இறைவன் வேதங்களை வழங்கியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டனர். அத்தூதர்களின் தாய்மொழி எதுவோ அம்மொழியில் […]

25) முதலில் தோன்றிய மதம் எது?

 முதலில் தோன்றிய மதம் எது? கேள்வி: உலகில் மதம் மாற்றப்படும் அனைவரும் இந்துக்கள் தான் என்றும், அவர்களுக்கு மதங்கள் போதிக்கப்படுவதில்லை என்றும், புத்த மதம் உலகில் தோன்றிய முதல் மதம் என்றும், பின்பு கிறித்தவம். அதன் பின்பு இஸ்லாம் வந்தது என்றும் இவையனைத்திற்கும் முன்பு தோன்றியது இந்து மதம் என்றும் முஸ்லிமல்லாத என் நண்பர் கேட்கிறார். ராஜா கவுஸ், அல் படாயா, சவூதி அரேபியா. இந்து மதத்தின் தோற்றம் எப்போது என்பதற்கு வரலாற்றுக் குறிப்பு இல்லை. இஸ்லாம், […]

24) இஸ்லாம் மார்க்கமா? மதமா?

இஸ்லாம் மார்க்கமா? மதமா? கேள்வி: நான் நேரான பாதையில் செல்ல விரும்பு கிறேன். ஆகையால், இஸ்லாத்தின் வழி நடக்க எனக்குச் சில சந்தேகங்கள் உள்ளன. இந்து மதம், கிறித்தவ மதம், சீக்கிய மதம், பிராமண மதம் எனப் பல வகையான மதங்கள் உண்டு. ஆனால், இஸ்லாமிய மதம் என்று கூறாமல், இஸ்லாமிய மார்க்கம் என்று கூறுவது ஏன்? – டி. பாலு, கோவை. பதில்: முஸ்லிம்கள் இஸ்லாத்தை மதம் என்று கூறாமல் மார்க்கம் என்று கூறி வருகின்றனர். […]

23) இஸ்லாமிய மார்க்கம் அடிப்படையில் தோற்று விட்டது எனக் கருதலாமா?

 இஸ்லாமிய மார்க்கம் அடிப்படையில் தோற்று விட்டது எனக் கருதலாமா? கேள்வி: இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்கள் தனி மனிதனிடம் ஒழுக்க நெறிகளையும், நேர்மைப் பண்பு களையும் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துவதில்லை. ஒரு மதம் ஒருவன் செய்யும் பாவ புண்ணியங்களை அது அவனின் முன் ஜென்ம வினை (ஊழ்வினை) என்று ஒதுங்கிக் கொள்கிறது. மற்றொரு மதமோ என்ன தவறு செய்துவிட்டாலும் பாவ மன்னிப்பு பெற்றுவிட்டால் போதும் என்கிறது. எனவே, இம்மதங்கள் தோற்றுப்போகவோ, அழியவோ வழியில்லை. ஆனால் இஸ்லாமிய மார்க்கம் தனிமனிதனுக்கு […]

22) முஸ்லிம் நாடுகள் தமக்குள் ஏன் சண்டையிட்டுக் கொள்கின்றன?

 முஸ்லிம் நாடுகள் தமக்குள் ஏன் சண்டையிட்டுக் கொள்கின்றன? கேள்வி: இஸ்லாத்தில் மனித நேயம் இருக்கின்றது சரி. அது நடைமுறையில் இருக்கின்றதா? அப்படி இருந்தால் ஏன் இஸ்லாமிய நாடுகள் தங்களுக்குள் சண்டையிடுகின்றன. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துப் போக வேண்டியது தானே! என்று நண்பர் ஒருவர் வினவுகிறார். மேலும், உங்களை நீங்கள் சரி செய்து கொள்ளுங்கள் என்றார். – ஏ.ஆர். சைபுல்லாஹ், யு.ஏ.இ. பதில்: இந்தக் கேள்விக்குரிய சரியான விடை நம்மைத் திருத்திக் கொள்வது தான். இஸ்லாமிய நாடுகளின் […]

21) முஸ்லிம் பண்டிகைகள் நாட்டிற்கு நாடு மாறுபடுவது ஏன்?

 முஸ்லிம் பண்டிகைகள் நாட்டிற்கு நாடு மாறுபடுவது ஏன்? கேள்வி: முஸ்லிம் பண்டிகைகள் மட்டும் நாடுதோறும் மாறுபடுவதேன்? சரியான கணிப்பு உங்களிடம் கிடையாதா? என வினவுகிறார் எனது கிறித்தவ மத சகோதரி. தாங்கள் தக்க விளக்கம் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன். – ஏ. ஜம்ரூத் அஜீஸ், கொடுங்கையூர். விளக்கம் : முஸ்லிம் பண்டிகைகள் மட்டுமின்றி மற்ற பண்டிகைகளும் கூட நாடுகள் தோறும் மாறுபட்டே வரும். அது தான் உலக அமைப்பாகும். உலகில் ஒவ்வொரு பகுதியினருக்கும் ஒவ்வொரு நேரமாக இருப்பதை […]

20) முஸ்லிம்கள் இந்த உலகின் வளர்ச்சிக்கு எந்த விதப் பங்கும் ஆற்றாதது ஏன்?

 முஸ்லிம்கள் இந்த உலகின் வளர்ச்சிக்கு எந்த விதப் பங்கும் ஆற்றாதது ஏன்? கேள்வி: இன்றைய உலகில் கண்டுபிடிப்புகளுக்கும், விஞ்ஞான வளர்ச்சிகளுக்கும் முழுவதும் காரணமாக இருந்தவர்கள், இருப்பவர்கள், மேற்கத்திய நாட்டினர் தான். இவர்களால் உலகில் சில தீமைகள் ஏற்பட்டிருக்கலாம். அதை விடப் பன்மடங்கு நன்மைகளை உலகிற்குச் செய்துள்ளனர். இன்று அரபு தேசங்களில் மக்கள் வசதியாக வாழ்வதற்கு வழி வகுத்தவர்கள் மேற்கத்திய நாட்டினர். எண்ணெய்க் கண்டுபிடிப்பு, கடல்நீரைக் குடிநீராக மாற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம். ஆனால், முஸ்லிம்கள் […]

19) பணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏன்?

 பணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏன்? கேள்வி: பணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி இருக்கின்றதே ஏன்? பதில்: பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமிடையே இடைவெளி என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டு எங்குமே உள்ளது தான். ஆனால் மற்ற சமுதாயத்துப் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை விட முஸ்லிம் பணக்காரர்களுக்கும், முஸ்லிம் ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைவாக உள்ளதே தவிர அதிகமாக இல்லை. ஏழைகளுக்காக வாரி வாரி வழங்கக்கூடியவர்கள் முஸ்லிம்களில் […]

18) இஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்?

இஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்? கேள்வி: கிறித்துவத்தைப் போன்று, இஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாத காரணத்தினாலும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சேவைக்கு அவசியம் இல்லாததினாலும், ஒடுக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவத்தை நோக்கிச் செல்கின்றார்களாமே? சாஜிதா ஹுஸைன், சென்னை. பதில்: இஸ்லாமிய மார்க்கம் சேவைகள் புரிவதை வயுறுத்தினாலும் கூட முஸ்லிம்கள் பின் தங்கியே உள்ளனர் என்பது உண்மை தான். இது போன்ற சேவைகள் செய்வதற்கு பெரிய அளவு பணம் தேவைப்படுகிறது. கிறித்தவ நாடுகள் அதிகமாக உதவுவது போல் முஸ்லிம் நாடுகள் உதவுவதில்லை. […]

Next Page »