Tamil Bayan Points

Category: பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்

u450

32) மேஜிக் செய்வது இணைகற்பித்தலா?

அடுத்து ஒரு கேள்வி கேட்கப்படுகின்றது. சூனியம் என்றால் மேஜிக் என்று சொல்கிறீர்கள். சூனியம் இணைவைப்பு என்றும் சொல்கிறீர்கள். அப்படியானால் மேஜிக் கற்றுக் கொள்வதும் மேஜிக் பார்ப்பதும் இணைவைத்தல் ஆகுமா? இந்தக் கேள்வியும் பரவலாகக் கேட்கப்படுகின்றது. வெளித் தோற்றத்தில் இரண்டு காரியங்கள் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் அதன் பின்னால் உள்ள நம்பிக்கையைப் பொருத்து இரண்டும் வேறு வேறு ஆகிவிடும். ஒரு தங்கச் செயினை எடுத்துக் கொள்வோம். இதைத் தாலியாகவும் அணிகிறார்கள். வெறும் நகையாகவும் அணிகின்றனர். தோற்றத்தில் அது […]

31) முன்னர் சொன்னதை மாற்றிச் சொல்வது ஏன்?

சூனியத்தின் மூலம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த முடியாது; அதிகபட்சமாக கணவன் மனைவியரிடையே பிரிவை ஏற்படுத்த முடியும் என்று முன்னர் நாம் கூறினோம். எழுதினோம். இப்போது கணவன் மனைவிக்கு மத்தியில் சூனியத்தின் மூலம் எந்தப் பிரிவையும் ஏற்படுத்த முடியாது என்று சொல்கிறோம். சூனியக் கட்சியினர் இதைத் தான் தங்களின் பெரிய ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர். தவ்ஹீதின் அடிப்படையே இதுதான். மனிதன் குறைவான அறிவுள்ளவன். அதனால் அவனிடம் தவறுகள் ஏற்படாமல் இருக்காது. முன்னர் சொன்னதில் சிலவற்றைப் பின்னர் மாற்றிக் கொள்ளாத […]

30) ஒன்றுமில்லாத சூனியம் எப்படி பாவமாக ஆகும்?

சூனியத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்ற கொள்கை உடையவர்கள் சூனியம் இருக்கிறது என்பதை நிலைநாட்ட ஒரு கேள்வியை எடுத்து வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிந்திக்கும் திறன் சிறிதளவும் இருப்பவர்களால் இது போல் கேட்க முடியாது. அந்தக் கேள்வி இதுதான். சூனியம் பெரும்பாவங்களின் ஒன்று நபியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். சூனியம் இறைமறுப்பில் தள்ளி விடும் என்று நீங்களும் சொல்கிறீர்கள். சூனியம் என்றால் ஒன்றுமே இல்லை என்று சொன்னால் ஒன்றுமே இல்லாததை எப்படி பாவம் என்றும் இறைமறுப்பு என்றும் […]

29) அதிகம் பேர் சொல்வது ஆதாரமாகுமா

சூனியத்தை நம்பாதவர்களை விட சூனியத்தை நம்புபவர்கள் அதிகமானவர்களாக இருக்கிறார்கள். அதிகமானவர்களாக இருப்பதால் இதனைச் சரி என்று ஏற்றுக் கொள்ள முடியுமா? இஸ்லாமியர்கள் அதிகமா, இணைவைப்பவர்கள் அதிகமா என்றால் இணைவைப்பர்கள் தான் அதிகமானவர்களாக இருப்பார்கள். இதனால் இஸ்லாத்திற்குத் தோல்வி என்று சொல்ல முடியுமா? மக்களில் பெரும்பாலும் அறியாதவர்கள் உள்ளார்கள். மக்களில் பெரும்பாலும் விபரமில்லாதவர்கள் உள்ளார்கள் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். பார்க்க : 7:187, 12:21, 12:40, 12:68, 16:38, 30:6, 30:30, 34:28, 34:36,40:57, 45:26 நாம் இந்த இரண்டு மாறுபட்ட […]

28) சூனியத்தை நல்லறிஞர்கள் மறுக்கவில்லையா?

முஃதஸிலா என்ற பெயரில் ஒரு கூட்டம் இருந்தார்கள். இவர்கள் ஹதீஸ்களை மறுக்கக் கூடியவர்கள். நபிமார்களின் அற்புதங்களையும் மறுப்பவர்கள். இவர்கள் வழிகெட்ட கூட்டம் என்று வரலாறுகளில் புறக்கணிக்கப்பட்டவர்கள். இந்தக் கூட்டம் ஒரு காலத்தில் இருந்தது. இப்போது கிடையாது. இந்தக் கூட்டத்தைத் தான் வழிகெட்டவர்களுக்கு உதாரணமாக அனைத்து நல்லறிஞர்களும் குறிப்பிடுவார்கள். இந்தக் கூட்டத்தினர் சூனியத்தை மறுத்திருக்கின்றார்கள். இப்போது சூனியத்திற்கு வக்காலத்து வாங்கக்கூடியவர்கள் சூனியத்தை மறுக்கும் நம்மைப் பார்த்து ”இவர்கள் சொல்வது முஃதஸிலாக் கொள்கை. முஃதஸிலா கூட்டத்தைப் போன்றே இவர்களும் சூனியத்தை […]

27) 113, 114 அத்தியாயங்கள் சூனியத்துக்கு ஆதாரமாகுமா?

சூனியத்துக்கு ஆற்றல் உள்ளது என்று சொல்பவர்கள் தமது கூற்றுக்கு ஆதாரமாக இன்னொரு வாதத்தையும் எடுத்து வைப்பார்கள். திருக்குர்ஆனில் 113, 114 ஆகிய இரு அத்தியாயங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட போது இறங்கியது என்பதும், ஒவ்வொரு வசனத்தை ஓதியவுடன் ஒரு முடிச்சு அவிழ்ந்து நபிகள் நாயகம் (ஸல்) குணமடைந்தார்கள் என்பதும் அவர்களின் வாதம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட முடியாது என்பதைத் தக்க ஆதாரங்களுடன் நாம் முன்னர் நிரூபித்துள்ளோம். அவர்களுக்குச் சூனியம் […]

26) 495 சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியாது

சூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று வாதிப்பவர்கள் இவ்வசனத்தை (2:102) தமக்குரிய மிகப்பெரிய ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர். சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று இவ்வசனம் சொல்வதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் இவ்வசனத்தைக் கவனமாகச் சிந்திக்கும் போது சூனியத்தால் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்பதைத்தான் இவ்வசனம் சொல்கிறது. மாற்றுக் கருத்துடையோர் சரியாகக் கவனிக்காத காரணத்தால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற கருத்தை இவ்வசனம் தருவதாக விளங்கிக் கொண்டனர்.. எனவே இது குறித்து விபரமாக […]

25) 2:102 வசனம் சொல்வது என்ன?

சூனியத்தின் மூலமாக சில காரியங்களைச் செய்யலாம் என்ற கருத்துடையவர்கள் திருக்குர்ஆன் 2:102 வசனத்தை எடுத்துக்காட்டி சூனியத்தினால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என இவ்வசனம் சொல்வதாக வாதிடுகின்றனர். இவ்வசனம் சொல்வது என்ன? என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது? இது சூனியத்துக்கு ஆற்றல் உள்ளது எனச் சொல்கிறதா? எதிராகச் சொல்கிறதா என்பதை நாம் விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டும். இதன் சரியான பொருளை அறிந்து கொள்வதற்கு முன்னால் மேற்கண்ட வசனத்திற்கு அப்துல் ஹமீது பாக்கவி, ஜான் ட்ரஸ்ட், ரஹ்மத் அறக்கட்டளை […]

24) தஜ்ஜால் செய்யும் அற்புதத்தை நம்புவது இணைவைத்தலாகாதா?

தஜ்ஜால் இனிமேல் வருவான் என்று நாம் நம்புகின்றோம். தஜ்ஜால் வந்து பல செயல்களைச் செய்து மக்களை தன் பக்கம் ஈர்ப்பான். அவன் செய்யக் கூடிய செயல்களில் இறந்தவரை உயிர்ப்பிப்பதும் அடங்கும். ஒருவரை இறக்கச் செய்து உயிர்ப்பித்துக் காண்பிப்பான். அல்லாஹ்வைப் போல யாரும் செயல்பட முடியாது என்று நாம் நம்பினால் தஜ்ஜால் இவ்வாறு செய்வதை எப்படி நம்ப முடியும்? அதுவும் இணைவைத்தல் ஆகாதா என்றும் எதிர்க்கேள்வி கேட்கின்றனர். இந்தக் கேள்வியை மேலோட்டமாகப் பார்த்தால் சரியாகத்தான் தெரியும். இதனைச் சிந்தித்துப் […]

23) சாமிரி செய்த அற்புத்தை நம்புவது இணைகற்பித்தலாகுமா

இறைவனிடமிருந்து வேதத்தைப் பெறுவதற்காக “தூர்” மலைக்கு மூஸா நபி அழைக்கப்பட்டார். தூர் மலை நோக்கி மூஸா நபி புறப்பட்டவுடன் அவரது சமுதாயத்தைச் சேர்ந்த ஸாமிரி என்பவன் அவர்களது நகைகளைப் பெற்று உருக்கி காளைச் சிற்பத்தை உருவாக்கினான். மூஸா நபியின் காலடி மண்ணை எடுத்து அதில் போட்டவுடன் அந்தச் சிற்பத்திலிருந்து ஒரு சப்தம் வந்தது. “இதுதான் கடவுள்; மூஸா வழிமாறிச் சென்று விட்டார்” எனக் கூறி அம்மக்களை ஸாமிரி நம்ப வைத்து அதற்கு வழிபாடு நடத்தச் செய்து விட்டான். […]

22) அற்புதங்களை நம்புதல் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலாகுமா

சூனியக்காரன் மனிதனைப் போல் செயல்படாமல் அல்லாஹ்வைப் போல் செயல்படுகிறான் என்ற கருத்தைத் தருவதால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது இணை கற்பித்தல் என்று நாம் சொல்கிறோம். இதை மறுப்பதற்குச் சில எதிர்வாதங்களையும் சூனியக் கட்சியினர் எடுத்து வைக்கிறார்கள். நபிமார்கள் அற்புதங்கள் செய்ததாக நீங்களும் நம்புகிறீர்கள். நாங்களும் நம்புகிறோம். நபிமார்கள் செய்த எந்த அற்புதமும் மனிதனின் செயலைப் போல் இருக்கவில்லை. அல்லாஹ்வின் செயலைப் போல் தான் உள்ளது. அற்புதங்களை நம்பும் போது நபிமார்கள் அல்லாஹ்வைப் போல் செயல்படுகிறார்கள் […]

21) ஜின்களை ஏவி விட்டு சூனியம் செய்யப்படுகிறதா?

சூனியத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புவது இணை வைப்பாக இருக்கிறது என்று நாம் கூறும் போது அதை மறுப்பதற்காக இன்னொரு வாதத்தை எடுத்து வைத்துச் சமாளிக்கிறார்கள். சூனியக்காரன் தானாக இதைச் செய்வதில்லை. அவன் ஜின்களை வசப்படுத்தி வைத்துக் கொண்டு செய்கிறான். எந்த சாதனத்தையும் அவன் பயன்படுத்தாவிட்டாலும் ஜின்களை ஏவிவிட்டு சூனியம் செய்கிறான். ஜின்கள் போய் பாதிப்பை ஏற்படுத்துவது நம் கண்களுக்குத் தெரியாததால் அல்லாஹ்வைப் போல் சூனியக்காரன் செயல்படுவதாக மக்களுக்குத் தெரிகிறது என்று புது விளக்கம் […]

20) அல்லாஹ் வழங்கிய ஆற்றலால் சூனியம் செய்யப்படுகிறதா

சூனியக்காரன் தனது சுயமான ஆற்றலால் இப்படிச் செய்யவில்லை. அல்லாஹ் அவனுக்கு அந்த ஆற்றலைக் கொடுத்துள்ளதால் தான் அப்படிச் செய்ய முடிகிறது. இது எப்படி இணைவைத்தலாகும்? என்பது தான் அவர்களின் முதல் ஆதாரம். நாங்களும் தவ்ஹீத்வாதிகள் தான் என்று சொல்லிக் கொள்ளும் கூட்டத்தினரும் இதே பதிலைச் சொல்லி இணைவைப்பை நியாயப்படுத்தப் பார்க்கின்றனர். இந்த வாதத்தைப் பார்க்கும் போது இவர்கள் ஏகத்துவத்தின் அரிச்சுவடியைக் கூட படிக்கவில்லை என்பது தெளிவாகிறது. எல்லா படைப்பினங்களின் செயல்பாடுகளும் அல்லாஹ் கொடுத்த அடிப்படையில் நடப்பவைதான். நாம் […]

19) சூனியத்தை நம்புதல் இணை கற்பித்தலே

சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் குற்றமாக அமைந்துள்ளது. அது எப்படி என்று பார்ப்போம். அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். இரண்டு கடவுள்களில் அல்லாஹ்வும் ஒருவன் என்றோ, மூன்று கடவுள்களில் அல்லாஹ்வும் ஒருவன் என்றோ நம்புவது தான் இணை கற்பித்தல் என்று சிலர் நினைக்கின்றனர். இதுவும் இணை கற்பித்தல் தான் என்றாலும் இணை கற்பித்தல் இதை விட விரிவான அர்த்தம் கொண்டதாகும். அல்லாஹ்வுக்கு ஏராளமாக பண்புகள் உள்ளன. […]

18) அல்லாஹ்வின் பார்வையில் சூனியம்

சூனியம், சூனியம் செய்பவர், சூனியம் செய்யப்பட்டவர் ஆகிய சொற்கள் திருக்குர்ஆனில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்தில் இச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வேறு சில இடங்களில் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியாது; அது தந்திரமாக ஏமாற்றுவதுதான் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற கருத்தில் தமது கருத்தை நிலைநாட்டுவதற்கு உதவும் வசன்ங்களை எடுத்துக் காட்டி சூனியத்தால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று சாதிக்கின்றனர். முரண்பட்ட வகையில் அல்லாஹ் […]

17) சூனியத்தை மறுக்கும் நபிகள் நாயகம் (ஸல்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சூனியத்தை நம்பக்கூடாது தெளிவாகக் கூறியுள்ளனர். .مسند أحمد – (ج 45 / ص 477) 26212 – حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ السُّوَيْدِيُّ قَالَ حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ سُلَيْمَانُ بْنُ عُتْبَةَ الدِّمَشْقِيُّ قَالَ سَمِعْتُ يُونُسَ بْنَ مَيْسَرَةَ عَنْ أَبِيإِدْرِيسَ عَائِذِ اللَّهِ عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ […]

16) சூனியம் செய்யப்பட்டதை மறுக்கும் திருக்குர்ஆன்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், முந்தைய நபிமார்களும் தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று சொன்னபோது, அதை ஏற்க மறுத்த காஃபிர்கள் சொன்ன காரணங்கள் என்ன? சாப்பிடுகிறீர்கள், பருகுகிறீர்கள், எங்களைப் போல் மனிதர்களாக இருக்கிறீர்கள், நீங்கள் சோதிடக்காரர்கள் திறமை வாய்ந்த புலவர்கள் உங்களுக்கு யாரோ சூனியம் வைத்ததால் இப்படி புத்தி பேதலித்து உளறுகிறீர்கள் என்று சொன்னார்கள். இவர்களின் மற்ற விமர்சனங்களை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் நபிமார்களுக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று கூறுவதையும், சோதிடக்காரர், புலவர் என்று கூறுவதையும் கடுமையான […]

15) அற்புதங்களை அர்த்தமற்றதாக்கும் சூனிய நம்பிக்கை

இன்னொரு காரணத்தினாலும் நபியவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு இருக்க முடியாது என்பது உறுதியாகின்றது. ஒருவரை இறைத்தூதர் என்று நம்புவதற்கு இறைவன் எத்தகைய ஏற்பாட்டைச் செய்திருந்தான்? இறைத்தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள். எல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தூதராக மனிதரையா  அல்லாஹ் அனுப்பினான்? என்று அவர்கள் கூறுவதுதான், மனிதர்களிடம் நேர்வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் […]

14) குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் சூனிய நம்பிக்கை

இஸ்லாத்தின் மிகப் பெரிய அற்புதம் திருக்குர்ஆன். ஒவ்வொரு நபிமார்களும் சில அற்புதங்களைச் செய்வார்கள். அந்த அற்புதங்களைப் பார்த்துவிட்டு அவர் இறைத்தூதர் என மக்கள் நம்புவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசி நபி என்பதால் அவர்களுக்குப் பின் இறைத்தூதர்கள் வர மாட்டார்கள். இந்த வாய்ப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று அவர்களின் காலத்துக்குப் பின்னர் வந்தவர்கள் எவ்வாறு நம்புவது? அவர்களுக்கும் ஒரு அற்புதம் வேண்டுமே […]

13) நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் சொல்வது என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் சில அறிவிப்புகள் இவை தான். 3268 – حدثنا إبراهيم بن موسى، أخبرنا عيسى، عن هشام، عن أبيه، عن عائشة رضي الله عنها، قالت: سحر النبي صلى الله عليه وسلم، وقال الليث: كتب إلي هشام أنه سمعه ووعاه عن أبيه، عن عائشة قالت: سحر النبي صلى الله عليه وسلم، حتى […]

12) அந்நியப் பெண் இளைஞருக்கு பாலூட்டலாமா?

சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே சாலிம் பின் மஅகில் என்னுடைய வீட்டிற்கு வரும் போது அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் பார்க்கிறேன் என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபாவின் அடிமை ஆவார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ (சாலிமுக்கு) அவருக்குப் பால் கொடுத்துவிடு என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள் அவர் பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே அவருக்கு நான் எவ்வாறு பாலூட்டுவேன்? என்று கேட்டார்கள். […]

11) வானவரின் கன்னத்தில் மூஸா நபி அறைந்தார்களா?

இன்னொரு செய்தியைப் பாருங்கள்! 3407 حدثنا يحيى بن موسى، حدثنا عبد الرزاق، أخبرنا معمر، عن ابن طاوس، عن أبيه، عن أبي هريرة رضي الله عنه، قال: ” أرسل ملك الموت إلى موسى عليهما السلام، فلما جاءه صكه، فرجع إلى ربه، فقال: أرسلتني إلى عبد لا يريد الموت، قال: ارجع إليه فقل له يضع يده على متن ثور، […]

10) சுலைமான் நபியைக் கொச்சைப்படுத்தலாமா?

இதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள பின்வரும் ஹதீஸையும் பாருங்கள்! 5242 حدثني محمود، حدثنا عبد الرزاق، أخبرنا معمر، عن ابن طاوس، عن أبيه، عن أبي هريرة، قال: ” قال سليمان بن داود عليهما السلام: لأطوفن الليلة بمائة امرأة، تلد كل امرأة غلاما يقاتل في سبيل الله، فقال له الملك: قل إن شاء الله، فلم يقل ونسي، فأطاف […]

09) குர்ஆன் வசனம் காணாமல் போகுமா?

குர்ஆன் வசனம் காணாமல் போகுமா? அடுத்து இன்னொரு செய்தியைப் பாருங்கள். 3670 حدثنا يحيى بن يحيى قال قرأت على مالك عن عبد الله بن أبى بكر عن عمرة عن عائشة أنها قالت كان فيما أنزل من القرآن عشر رضعات معلومات يحرمن. ثم نسخن بخمس معلومات فتوفى رسول الله -صلى الله عليه وسلم- وهن فيما يقرأ من القرآن. பத்து […]

08) அன்னியப் பெண்ணுடன் நபியவர்கள் நெருக்கமாக இருந்தார்களா?

இதுபோல் அமைந்த இன்னொரு ஹதீஸைக் காணுங்கள். 7001 حدثنا عبد الله بن يوسف، أخبرنا مالك، عن إسحاق بن عبد الله بن أبي طلحة، أنه سمع أنس بن مالك، يقول: كان رسول الله صلى الله عليه وسلم يدخل على أم حرام بنت ملحان وكانت تحت عبادة بن الصامت، فدخل عليها يوما فأطعمته، وجعلت تفلي رأسه، فنام رسول الله […]

07) உலகத்தைப் படைக்க ஏழு நாட்களா?

மற்றொரு ஹதீஸைக் காணுங்கள்! 7231 حَدَّثَنِى سُرَيْجُ بْنُ يُونُسَ وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ قَالاَ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِى إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ عَنْ أَيُّوبَ بْنِ خَالِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ مَوْلَى أُمِّ سَلَمَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ أَخَذَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- بِيَدِى فَقَالَ « خَلَقَ اللَّهُ عَزَّ وَجَلَّ التُّرْبَةَ […]

06) ஏர் கலப்பை பழிப்பிற்கு உரியதா?

மற்றொரு ஹதீஸைப் பாருங்கள். 2321 حدثنا عبد الله بن يوسف، حدثنا عبد الله بن سالم الحمصي، حدثنا محمد بن زياد الألهاني، عن أبي أمامة الباهلي، قال: ورأى سكة وشيئا من آلة الحرث، فقال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: «لا يدخل هذا بيت قوم إلا أدخله الله الذل»، قال أبو عبد الله: «واسم أبي أمامة […]

05) நபியாவதற்கு முன்னர் மிஃராஜ் நடந்து இருக்குமா?

இன்னொரு ஹதீஸைப் பாருங்கள். 3570 حدثنا إسماعيل، قال: حدثني أخي، عن سليمان، عن شريك بن عبد الله بن أبي نمر، سمعت أنس بن مالك، يحدثنا عن ” ليلة أسري بالنبي صلى الله عليه وسلم من مسجد الكعبة: جاءه ثلاثة نفر، قبل أن يوحى إليه، وهو نائم في مسجد الحرام، فقال أولهم: أيهم هو؟ فقال أوسطهم: هو […]

04) இப்ராஹீம் நபிக்கு எதிராக பல்லி தீ மூட்டுமா?

இதற்கு உதாரணமாக புகாரியில் இடம் பெற்ற பின்வரும் ஹதீஸை எடுத்துக் கொள்ளலாம். 3359 حدثنا عبيد الله بن موسى، أو ابن سلام عنه، أخبرنا ابن جريج، عن عبد الحميد بن جبير، عن سعيد بن المسيب، عن أم شريك رضي الله عنها، أن رسول الله صلى الله عليه وسلم، ” أمر بقتل الوزغ، وقال: كان ينفخ على إبراهيم عليه السلام […]

03) திருக்குர்ஆனையும், ஹதீஸ்களையும் எவ்வாறு புரிந்து கொள்வது

சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது இணை கற்பித்தல் என்பதற்கு ஆதாரமாக திருக்குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் நாம் எடுத்துக் காட்டும்போது சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று சொல்பவர்களும் சில குர்ஆன் வசனங்களை ஆதாரமாகக் காட்டுவார்கள். சில ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டுவார்கள். அதாவது சூனியத்தால் பாதிப்பு ஏற்படாது என்பதற்கு ஆதாரம் இருப்பது போல் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்பதற்கும் ஆதாரம் உண்டு என்பது போன்ற குழப்பம் இதனால் மக்களுக்கு ஏற்படும். திருக்குர்ஆன் ஒருக்காலும் முரண்பட்ட இரண்டு கருத்துக்களைச் […]

02) மார்க்கம் இரு வகை!

பில்லி, சூனியம், ஏவல், மாயம், மந்திரம் என்று சொல்லப்படும் ஸிஹ்ர் மூலம் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எல்லா சமுதாயத்திலும் இருப்பது போல் அதிகமான முஸ்லிம்களிடமும் உள்ளது. சூனியம் என்பது தந்திரம் செய்து ஏமாற்றுவது தானே தவிர சூனியத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்ற கருத்து உடையவர்களும் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ளனர். நாமும் இந்தக் கருத்தில் தான் இருக்கிறோம். இந்த இரண்டு நம்பிக்கைகளில் எது சரியானது என்பதைத் தக்க ஆதாரங்களுடன் நாம் அறிந்து கொள்ளக் […]

01) அறிமுகம்

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் என்ற தலைப்பில் 2014 ஆம் ஆண்டு ரமளான் மாதத்தில் பத்து நாட்கள் நான் தொடர் உரை நிகழ்த்தினேன். இந்த உரையை நூல் வடிவில் வெளியிட வேண்டும் என்று பல சகோதரர்கள் கேட்டுக் கொண்டதால் நூல் வடிவில் அதைத் தொகுத்துத் தந்துள்ளேன். உரை நடையை அப்படியே எழுத்தாக ஆக்கினால் அது வாசிப்பவர்களை ஈர்க்காது. அதைத் தவிர்ப்பதற்காக உரையின் கருத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எழுத்து நடைக்கு மாற்றப்பட்டுள்ளது. உரையில் ஆதாரங்களை எடுத்துக் காட்டும்போது அதன் […]