Tamil Bayan Points

Category: ஏகத்துவமும் இணை வைப்பும்

u451

18) இணைவைப்பில் விழுவதற்கான காரணங்கள்

இணைவைப்பில் விழுவதற்கான காரணங்கள் தவறான கற்பனைகளாலும் அவசியம் அறிய வேண்டிய விசயங்களை அறியாததாலும் அதிகமான மக்கள் இணைவைப்பில் விழுந்து கிடக்கிறார்கள். எனவே இணைவைப்பதற்கு அடிப்படைக் காரணமாக உள்ள விசயங்களில் உண்மை நிலையை இவர்கள் அறிந்து கொண்டால் ஒருபோதும் இணைவைக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் அருளை விட்டும் நிராசையடைதல் பாவம் செய்பவர்களால் அல்லாஹ்வை நெருங்க முடியாது என்ற நம்பிக்கையால் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதை விட்டுவிட்டு மற்றவர்களிடம் கையேந்துகிறார்கள். இவர்கள் மகான்கள் என்று யாரைக் கருதுகிறார்களோ அவர்கள் அல்லாஹ்வை விட கருணை மிகுந்தவர்கள் […]

17) மக்களிடயே நிலவும் இணைவைப்புகள்-4

மார்க்கம் கூறாத முறையில் ஓதிப்பார்க்கக் கூடாது ஓதிப் பார்ப்பதற்கு நபி (ஸல்) அவர்களிடம் சிலர் அனுமதி கேட்ட போது ஓதிப் பார்க்கும் முறையைத் தன்னிடம் கூறுமாறு நபியவர்கள் கூறினார்கள். அதில் குறை ஏதும் இல்லை என்று அவர்கள் அங்கீகாரம் அளித்த பிறகே ஓதிப் பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள். எனவே நம் இஷ்டத்திற்கு ஆதாரமில்லாம் மனதில் தோன்றியவாரெல்லாம் ஓதிப்பார்க்கக் கூடாது. எப்படி ஓதிப்பார்க்க வேண்டும் என்று மார்க்கம் கற்றுத் தந்துள்ளது. அந்த அடிப்படையில் ஓதிப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் […]

16) மக்களிடயே நிலவும் இணைவைப்புகள்-3

மக்களிடயே நிலவும் இணைவைப்புகள்-3 ஸியாரத் என்ற பெயரில் இணைவைப்பு மண்ணறைகளைச் சந்தித்து வரும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனென்னறால் மண்ணறைகளை காணும் போது நமக்கு மரணபயம் ஏற்படும். நமது செயல்பாடுகளைத் திருத்தி நல்லவர்களாக வாழ்வதற்கு இந்தப் பயம் உதவும். எனவே எல்லோரும் அடக்கம் செய்யப்படுகின்ற மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள் அரங்கேறாத பொது மையவாடிக்குச் சென்று மரண பயத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை […]

15) மக்களிடயே நிலவும் இணைவைப்புகள்-2

மக்களிடயே நிலவும் இணைவைப்புகள்-2 தரீக்காவைப் பின்பற்றுவது இணைவைப்பாகும் தங்களுடைய சைகுமார்கள் மறைவான விசயங்களையெல்லாம் அறிவார்கள் என்று தரீக்காவைப் பின்பற்றக் கூடியவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மறைவான ஞானம் அல்லாஹ்விற்கு மட்டும் இருப்பதால் இவ்வாறு நினைப்பது இணைவைப்பாகும். அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா? […]

14) மக்களிடயே நிலவும் இணைவைப்புகள்-1

மக்களிடயே நிலவும் இணைவைப்புகள் அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தித்தல் இணைவைப்பாகும் மனிதர்களிடம் கேட்பதற்கும் அல்லாஹ்விடம் கேட்பதற்கும் இடையேயுள்ள வித்தியாசங்களை புத்தகத்தின் ஆரம்பத்தில் விளக்கியுள்ளோம். மனிதர்களிடம் பேசுவது போல் அல்லாஹ்விடம் நாம் பேசுவது கிடையாது. சப்தமில்லாமல் பல இலட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு மொழியில் அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் அல்லாஹ்வையன்றி வேறு யாரும் சக்திபெறாத விசயங்களில் அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தனை செய்கின்றனர். இந்த அடிப்படையில் மண்ணறைகளை வழிபடக்கூடியவர்கள் இறந்து போனவர்களிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். […]

13) இணைவைப்பவர்கள் இழக்கும் பாக்கியங்கள்-1

இணைவைப்பவர்கள் இழக்கும் பாக்கியங்கள் அல்லாஹ்வைக் காண்பது சொர்க்கவாசிகளுக்குக் கிடைக்கும் இன்பங்களில் மிகப் பெரியதாகும். இந்த பாக்கியத்தை அல்லாஹ்விற்கு இணைவைத்தவர்கள் இழந்து விடுவார்கள். அவ்வாறில்லை! அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள். அல்குர்ஆன் (83 : 15) நபி (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் சிலர், அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ஆம்! (காண்பீர்கள்.) மேகமே இல்லாத நண்பகல் வெளிச்சத்தில் சூரியனைப் பார்க்க ஒருவரை […]

12) இணைவைப்பின் அபாயங்கள்

இணைவைப்பின் அபாயங்கள் பேரழிவை உண்டாக்கும் பெரும்பாவம் நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைகற்பிப்பது என்று சொன்னார்கள். நான், நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான் என்று சொன்னேன். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல் : புகாரி (4477) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பேரழிவை உண்டாக்கும் பெரும் பாவங்களைத் தவிர்த்து […]

11) இணைவைப்பிற்கு எதிராக நபிமார்களின் வீரியப் பிரச்சாரம்

இணைவைப்பிற்கு எதிராக நபிமார்களின் வீரியப் பிரச்சாரம் இணைவைப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்காக அதிகமான இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் இணைவைப்பிற்கு எதிராக மக்களிடத்தில் பிரச்சாரம் செய்தார்கள். அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம். அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரும் அச்சமுதாயத்தில் இருந்தனர். வழிகேடு உறுதியானவர்களும் இருந்தனர். எனவே பூமியில் பிரயாணம் செய்து பொய்யெனக் கருதியோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைக் கவனியுங்கள்! அல்குர்ஆன் (16 […]

10) இணைவைப்பின் அபாயங்கள்

இணைவைப்பின் அபாயங்கள் பேரழிவை உண்டாக்கும் பெரும்பாவம் நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைகற்பிப்பது என்று சொன்னார்கள். நான், நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான் என்று சொன்னேன். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல் : புகாரி (4477) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பேரழிவை உண்டாக்கும் பெரும் பாவங்களைத் தவிர்த்து […]

09) அல்லாஹ் அல்லாதவர்களின் பலவீனங்கள்

அல்லாஹ் அல்லாதவர்களின் பலவீனங்கள் செவியுற மாட்டார்கள் இறந்துவிட்ட நல்லடியார்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றுவார்கள் என்ற எண்ணத்தில் பலர் அல்லாஹ் அல்லாதவரிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் வேண்டுவதை கேட்கும் ஆற்றல் இறந்தவர்களுக்கு இல்லை. இவர்களின் தேவைகளை நிறைவேற்றும் சக்தியும் இறந்தவர்களுக்கு இல்லை. நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் […]

08) இறைவனுடைய பண்புகளில் இணைவைக்கக்கூடாது

இறைவனுடைய பண்புகளில் இணைவைக்கக்கூடாது படைக்கப்படாமலும் தாய் தந்தை இல்லாமலும் இருத்தல் எந்தப்பொருளின் பக்கமும் தேவையுறாமல் இருத்தல் தூங்காமல் இருத்தல் சோர்வடையாமல் இருத்தல் தவறிழைக்காமல் இருத்தல் மறக்காமல் இருத்தல் மறைவானவற்றை அறிதல் மரணிக்காமல் இருத்தல் இவையெல்லாம் இறைவனின் பண்புகளாகும். இத்தகைய பண்புகள் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. யாருக்காவது இத்தகைய பண்புகள் இருப்பதாக ஒருவன் நினைத்தால் அவன் இணைவைத்தவனாகி விடுவான். அல்லாஹ்விற்குத் தூக்கம் இல்லை அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். […]

07) மறைவான ஞானம் அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ளது

மறைவான ஞானம் அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ளது  மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். அவன் தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை. அல்குர்ஆன் (6 : 59) தூதர்களை அல்லாஹ் ஒன்று திரட்டும் நாளில் உங்களுக்கு என்ன பதில் அளிக்கப்பட்டது? என்று கேட்பான். எங்களுக்கு […]

06) இறைவனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டவைகள்

இறைவனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டவைகள் காத்தல் அல்லாஹ்வின் அதிகாரம் அழிவுகளிலிருந்தும், ஆபத்துகளிலிருந்தும் காக்கும் ஆற்றல் அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ளது.    قُلِ ادْعُوا الَّذِيْنَ زَعَمْتُمْ مِّنْ دُوْنِهٖ فَلَا يَمْلِكُوْنَ كَشْفَ الضُّرِّ عَنْكُمْ وَلَا تَحْوِيْلًا‏ அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ மாற்றவோ அவர்களுக்கு இயலாது என்று கூறுவீராக! அல்குர்ஆன் (17: 56) فَاللّٰهُ خَيْرٌ حٰفِظًا‌ وَّهُوَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ‏ அல்லாஹ்வே சிறந்த பாதுகாவலன். அவன் கருணையாளர்களில் […]

05) அல்லாஹ்வின் அதிகாரத்தில் இணைகற்பிக்க வேண்டாம்

அல்லாஹ்வின் அதிகாரத்தில் இணைகற்பிக்க வேண்டாம் அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு மட்டும் உட்பட்ட விசயங்களைப் பிறராலும் செய்ய முடியும் என்று நம்பினால் அதுவும் இணைவைப்பாகும். உதாரணமான மழையை வரவழைப்பது, பஞ்சத்தைக் கொடுப்பது, வறுமையை நீக்குவது, செல்வத்தை வழங்குவது, உலகத்தைப் படைப்பது, குழந்தையைத் தருவது, கவலையை அகற்றுவது, மரணிக்கச் செய்வது, உயிர் கொடுப்பது இது போன்று வேறு எவராவது செய்வார் என்று நம்பினால் இதுவும் இணைவைப்பாகும். يُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ ۙ وَسَخَّرَ الشَّمْسَ […]

04) இணைவைப்பின் வகைகள்

இணைவைப்பின் வகைகள் 1 . வணக்க வழிபாடுகளில் இணைவைக்கக் கூடாது அல்லாஹ்விற்கு மட்டும் நாம் செய்ய வேண்டிய வணக்கங்களைப் பிறருக்குச் செய்தால் அதுவும் இணைவைப்பாகும். உதாரணமாக சத்தியம் செய்வது, நேர்ச்சை செய்வது, அறுத்துப் பலியிடுவது, தொழுவது, பிரார்த்திப்பது, நோன்பு நோற்பது, சிரம் பணிவது இது போன்று அல்லாஹ்விற்கு மட்டும் செய்ய வேண்டிய வணக்கங்களை எவருக்காவது ஒருவன் செய்து விடுவானால் அவன் இணைவைத்தவனாகி விடுவான். வணக்கங்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது. இவற்றில் எதையாவது பிறருக்குச் செய்து விட்டால் […]

03) இணை கற்பித்தல்

இணை கற்பித்தல் இணை கற்பித்தல் என்றால் என்ன? அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன் பார்ப்பவன். அல்குர்ஆன் 42-11 அவனுக்கு நிகராக யாருமில்லை. அல்குர்ஆன் 1124 மேற்கண்ட வசனங்கள் தான் இணை வைப்பைப் புரிந்து கொள்வதற்கு அடிப்படையாகும். முதல் வசனத்தில் இறைவனுக்குப் பார்க்கும் கேட்கும் ஆற்றல் உள்ளது என்று கூறப்படுவதுடன் அவனைப் போன்று யாருமில்லை என்பதும் சேர்த்துக் கூறப்படுகிறது. அல்லாஹ்வைப் போன்று எதுவும், எவரும் இருக்க முடியாது. அவனுடைய தன்மைகள் பண்புகள் செயல்பாடுகளைப் போன்று எவரது […]

02) ஏகத்துவம்

ஏகத்துவம் இறைவனுடைய பண்புகளையும் அதிகாரங்களையும் முறையாக விளங்கி, அப்பண்புகளில் அவனுடன் மற்றவர்களை இணையாக்கி விடாமல் அவனை மட்டும் வணங்கி, அவன் கூறிய விஷயங்களை நம்பிக்கை கொண்டு, அவனது உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பது ஏகத்துவம் ஆகும். ஏகத்துவம் ஒரு மாபெரும் பாக்கியம்  செல்வமும், சொத்துக்களும் தான் பாக்கியம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் விட உயர்ந்த ஈடு இணையில்லாத ஒரு பாக்கியமாக ஏகத்துவம் இருக்கின்றது. எத்தனையோ கோடீஸ்வரர்களுக்கும், அரசர்களுக்கும், படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கும் வழங்காத ஏகத்துவ […]

01) முன்னுரை

01) முன்னுரை கடவுள் ஒருவன் தான் என்ற கருத்தை எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்தக் கொள்கையைப் பல நேரங்களில் மறந்து விடுகிறார்கள்; அல்லது அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். இதனால் இறைவன் ஒருவன் என்ற சரியான கொள்கைக்கு மாற்றமான செயல்பாடுகளில் ஈடுபட்டுப் பல கடவுள் கொள்கைக்குச் சென்று விடுகிறார்கள். கடவுள் ஒருவன் தான் என்று இவர்களின் நாவு கூறினாலும் இவர்களின் நம்பிக்கையும். செயல்பாடுகளும் பல கடவுட்கொள்கையைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன. இஸ்லாம் மட்டுமே ஓரிறைக் […]