Tamil Bayan Points

Category: திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்

u461

13) முடிவுரை

முடிவுரை : திருக்குர்ஆனில் காணப்படும் அதிஅற்புதமான ஞானமாம் பேரண்டவியல், வானியல் மற்றும் வான் இயற்பியல் போன்ற வற்றிலிருந்து சில செய்திகளை மட்டுமே நாம் இந்நூலில் குறிப்பிட்டுள்ளோம். ஆனால் ஆய்வுக்கண் கொண்டு இம் மாமறையை ஆராய்பவர்களுக்கு அறிவியலின் பிரதான துறைகளைச் சார்ந்த ஏராளமான அறிவியல் உண்மைகளை அதில் அவர்கள் காணமுடியும். அச்செய்திகள் யாவும் திருக் குர்ஆன் ஒருக்காலும் மனித சக்தியால் இயற்ற முடியாதததும் இறைவனால் மட்டுமே வெளிப்படுத்தக் கூடியாதாகும் என்பதற்கு வலுவான ஆதாரங்களாகும். அறிவியல் ஆதாரங்கள் மட்டுமன்றி வரலாறு, இலக்கியம், தத்துவம் போன்ற […]

12) கேள்விக் கணைகள்!

அத்தியாயம் 11 கேள்விக் கணைகள்! “கடவுளுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்பதே மனிதர்களிடமிருந்து கடவுள் எதிர்பார்ப்பதாக இருந்தால் எல்லா மனிதர்களையும் அப்படிப்பட்டவர்களாகவே கடவுள் படைத்திருக்கலாமே! ஏன் கடவுள் அவ்வாறு செய்ய வில்லை? ஆத்திகர்களை விமர்சிப்பதற்காக நாத்திகர்கள் பரவலாக எழுப்பி வரும் தாத்வீகமான கேள்வியே இதுவாகும். மேலோட்டமாகப் பார்க்கும் போது நியாயமாகத் தோன்றும் இக்கேள்வி குறையுள்ளதாகும். ஏனெனில் இறைவனுடைய கட்டளைக்கு ஒரு போதும் ஒரு விதத்திலும் மாறு செய்யாமல் வாழக் கூடியவர்களை இறைவன் ஏராளமாகப் படைத் துள்ளான். ஆனால் அவர்கள் […]

11) பேரண்டம் படைக்கப்பட்டது எதற்காக?

அத்தியாயம் 10 பேரண்டம் படைக்கப்பட்டது எதற்காக? சென்ற அத்தியாயத்தில் மனிதனை ஒரு சமூக விலங்காக கொள்வது தவறு எனக் கண்டோம். மனிதன் தன்னுடைய உயிரியல் அமைப்பில் விலங்கைப் போன்ற வனாக இருப்பினும் அவனுடைய வாழ்கையைப் பொருத்த வரை இரண்டு இலட்சியங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று அவனுடைய உலகியல் வாழ்க்கையை அமைதிக்கு அடிப் படையாக அமைத்தலாகும். அவனுடைய சமூக வாழ்க்கை இந்த இலட்சியத்தை நிறைவேற்றுவதற்காக அமைக்கப்பட்ட தாகும். மனித வாழ்க்கையின் மற்றொரு இலட்சியம் அவனுடைய ஆன்மாவைத் தூய்மைப் படுத்தலாகும். இந்த […]

10) மனிதனின் சுயரூபம்

அத்தியாயம் 9 மனிதனின் சுயரூபம் சென்ற அத்தியாயத்தில் நாம் விவாதித்தது பேரண்டம் படைக்கப்பட்டதா? அல்லது தாமாகத் தோன்றியதா? என்பதைப் பற்றியதாகும். பேரண்டம் படைக்கப்பட்டதே என்றும் நாம் அந்த அத்தியாயத்தில் ஐயமறக் காண்டோம். பேரண்டம் தாமாகத் தோன்றியதாக இருந்திருப்பின் பேரண்டம் ஏன் தோன்றியது? என்பதை நாம் கண்டுபிடிப்பது அரிதாகும். ஏனெனில் இந்த ஆய்வில் தத்துவ ஞானிகள் மற்றும் அறிவியலாளர்கள் எனப் பலரும் ஈடுபட்டு ஆளுக் கொரு காரணத்தைக் கூறி அவற்றுள் எந்தக் காரணம் சரி என்று விளங்கிக் கொள்ள இயலாத சூழலை ஏற்படுத்தி விடும். […]

09) பேரண்டத்திற்குக் கடவுளின் தேவை

அத்தியாயம் 8 பேரண்டத்திற்குக் கடவுளின் தேவை நாம் இது வரை பண்டைகால உலகை அடியோடு மாற்றி அமைத்த அறிவியல் உலகில் அறிவுப்புரட்சியை (Intellectual revolution) ஏற்படுத்திய சில அதி மகத்தான அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பார்த்தோம். இதன் விளைவாகப் பேரண்டம் என்றால் என்ன? என்றும் அது எவ்வாறு தோன்றி யது? எவ்வாறு செயல்படுகிறது? என்பதையும் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் பேரண்டம் எதற்காகத் தோன்றியது? என்ற வினாவை ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம். ஒரு விதத்தில் இந்த வினா சிலருக்கு விரும்பத்தகாத தாகவே […]

08) சுழற்றும் பூமி

அத்தியாயம் 7 சுழற்றும் பூமி சென்ற அத்தியாயத்தில் பூமியில் நடைபெறும் இராப்பகல் மாற்றம் சூரிய மையக் கோட்பாட்டை அடிப்படை யாகக் கொண்டதே எனத் திருக்குர்ஆன் கூறுவதை ஐயத்திற்கிடமின்றி மிகத் தெளிவாகக் கண்டு விட்டோம். இருப்பினும் எந்த அறிவியல் உண்மையை நவீன அறிவியல் உலகின் விஞ்ஞானிகள் கூறிய போது உலகில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியதோ அந்த அளவிற்கு உலகில் தாக்கத்தை ஏற்படுத்திய அறிவியல் உண்மை;  எந்த அறிவியல் கண்டுபிடிப்பு நவீன அறிவியல் உலகின் படைப் பிற்கு ஆரம்பமாகவும், அடிப்படையாகவும் அமைந்ததோ அந்த […]

07) நாள்தோறும் நடைபெறும் இராப்பகல் மாற்றம்

அத்தியாயம் 6 நாள்தோறும் நடைபெறும் இராப்பகல் மாற்றம் நாம் வாழும் இந்தப் பூமியில் எண்ணிலடங்காத உயிரினங் கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உயிரினங்களின் வாழ்க்கைக்கு பூமியின் மீது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராப்பகல் மாற்றம் மிகவும் அவசியமாகும். பூமியில் நடை பெறும் இராப்பகல் மாற்றத்தைக் குறித்து பல வசனங்களில் திருக்குர்ஆன் குறிப்பிட்டுள்ளது. அவை பிரதானமாக இராப்பகல் மாற்றத்தால் உயிரினங்கள் அடையும் பயன்பாடு பற்றியதும்,இராப்பகல் மாற்றம் நடைபெறச் செய்கின்ற அதன் அமைப்பைப் (Function) பற்றியதுமாகும். இராப்பகல் மாற்றங்களால் நாம் அடையும் பயன்பாடுக ளில் […]

06) பூமியின் வடிவம் உருண்டை

அத்தியாயம் 5 பூமியின் வடிவம் உருண்டை பூகோளத்தின் மீது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மிக முக்கியமான இயற்பாடுகளில் ஒவ்வொரு நாளும் காலம் தவறாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராப்பகல் மாற்றமும் ஒன்றாகும். மனித இனம் உலகில் வாழத் துவங்கிய காலம் முதல் தவறாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த விந்தையைப் பார்த்து வியப்படைந்தவாறே வாழ்ந்து வந்தது. இதை ஆராய்ந்த பழங்கால அறிவியலாளர்கள் இதற்கான கோட்பாடு ஒன்றை உருவாக்கினர். புவி மையக் கோட்பாடு (The earth centeric theory) என்பது இதன் பெயராகும். பூகோளம் […]

05) சீராக அமைந்த வானங்கள்

அத்தியாயம் 4 சீராக அமைந்த வானங்கள் சென்ற அத்தியாயத்தில் பேரண்டத்தின் சில முக்கிய மான இயற்பியல் குணங்கள் பற்றி தெரிந்து கொண்டோம். அந்த முக்கியமான பண்புகளில் ஒன்று நமது பேரண்டத்தின் சீரான மற்றும் ஒழுங்கான (uniform and regular) அமைப்பும் அதன் வழவழப்பான (smooth) தன்மையுமாகும். மொத்த அறிவியல் உலகையும் பேரண்டத்தின் இப்பண்பு பெரும் வியப்பிற்குள் ஆழ்த்தும் போது அறிவியலாளர்களில் ஒரு பிரிவாராகிய இறை மறுப்பாளர்களை வியப்பிற்கு பதிலாக பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நமது சிற்றினம் (species) இந்த […]

03) விரிந்து செல்லும் பேரண்டம்

அத்தியாயம் 2 நிறமாலை நோக்கி சூரியனின் சாதாரண வெண்ணிற ஒளி வெவ்வேறு அதிர்வெண்களையும் வெவ்வேறு நிறங்களையும் கொண்ட வெவ்வேறு ஒளிகளின் கலவை என நியூட்டன் சோதனைகள் மூலம் நிரூபித்தார். அவர் சூரிய ஒளியை ஒரு முப்பட்டைக் கண்ணாடிக்குள் (Prism) செலுத்தி ஒளிப் பிரிகை செய்து வெவ்வேறு நிறங்களை உடைய வெவ்வேறு ஒளிக் கற்றைகளாக வெளிப்படுத்திக் காட்டினார். அதன் பிறகு அந்த வெவ்வேறு வர்ணங்களை உடைய வெவ்வேறு ஒளிக் கற்றைகளை ஒன்று குவித்து வெண்ணிறமுள்ள ஒரே ஒளிக் கற்றையாக […]

04) ஆகாயங்களைப் படைக்கும் அதிசயக் குரங்கு (?)

அத்தியாயம் 3 ஆகாயங்களைப் படைக்கும் அதிசயக் குரங்கு (?) மனித இனம் உலகில் தோன்றி எவ்வளவு காலம் ஆயிற்று என்ற வினாவிற்கு சிலர் 30,000வருடங்கள் என்றும், வேறு சிலர் 2,00,000 வருடங்கள் என்றும் கூறுகின்றனர். இவைகளன்றி சில மாற்றுக் கருத்துக்களும் அதில் நிலவு கிறது. ஆனால் எவ்வளவு தொன்மை காலத்தில் மனிதன் தோன்றி இருப்பினும் வானம் இப்போது இருப்பது போல் அப்போதும் இருந்தது. அந்த வானை இப்போது நாம் பார்ப்பது போன்று அப்போதும் மக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆயினும் மனிதன் தோன்றிய காலம் முதல் […]

02) பேரண்டப் படைப்பின் சுருக்கமான வரலாறு

அத்தியாயம் 1 பேரண்டப் படைப்பின் சுருக்கமான வரலாறு கல் தோன்றி முள் தோன்றி பற்பல பாலூட்டிகளும் தோன்றிய பின் மானிடனும் தோன்றி விண்ணை நோக்கி வியக்கத் துவங்கினான். அப்போது அவனுக்கு விண்ணகம் என்பது ஒரு சூரியனும், ஒரு சந்திரனும், துளித்துளியாய் ஒளிரும் ஏராளமான விண்மீன்களுமேயாகும். எல்லையற்ற பேருருவாய் விரிந்திருக்கும் பேரண்டம் பற்றி வேறொன்றும் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆயினும் மனிதர்களில் பலர் விண்ணகப் பொருட்களைத் தெய்வங்களாகக் கருதி அவைகளுக்கு ஆலயங்களை எழுப்பி வழிபடத் தொடங்கினர். பேரண்டம் வடிவமைத்த வல்லோன் வையகத்தை வழிநடத்த அவ்வப்போது […]

01) முன்னுரை

முன்னுரை புகழனைத்தும் அல்லாஹ்விற்கு! நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்நூல் திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்பைப் படிக்கத் தொடங்கிய ஒரு எளிய வாசகனால் எழுதப்பட்ட நூலாகும். அறிவியலைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டதன் காரணமாக இளம் வயதிலேயே அது தொடர்பான நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். அறிவியல் செய்திகளில் ஓரளவு தனி ஈடுபாடு எனக்குள் இருப்பதைத் தாமதியாமல் புரிந்து கொண்டேன். சில வருடங்கள் கழித்து திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்பு ஒன்று கிடைக்கப்பெற்று அதையும் படிக்கத் தொடங்கினேன். அப்போது அறிவியல் நூல்களில் நான் படித்த சில […]