Tamil Bayan Points

Category: பயான் செய்யும் முறைகள்

u480

16) எத்தி வைக்கும் யுக்திகள் – 2

எத்தி வைக்கும் யுக்தி -2    ஏகத்துவத்தை எடுத்துச் சொல்ல வெட்கம் தடையாகலாமா? தாயீக்கள் (அழைப்பாளர்கள்) மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக எவ்வளவு சிரமங்களை எதிர் கொள்கிறார்கள் என்பதைப் பற்றியும் தங்களது சொற்பொழிவுகளை அவர்கள் எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் கடந்த தொடரில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இந்த தொகுப்பில் நாம் காண இருக்கின்றோம். மார்க்கத்தை எத்தி வைக்க வெட்கம் தடையாக இருக்கக்கூடாது. வெட்க உணர்வை இஸ்லாமிய மார்க்கம் வரவேற்கின்றது. அகிலத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட அண்ணல் […]

15) எத்தி வைக்கும் யுக்திகள் – 1

எத்தி வைக்கும் யுக்தி ஏகத்துவக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டு சத்தியப் பாதையில் இலட்சியப் பயணம் மேற்கொண்டிருக்கின்ற நாம் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மட்டுமே இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள் என்று கூறி அதன் பக்கம் மக்களை அழைத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த ஏகத்துவக் கொள்கையை மக்களுக்கு மத்தியில் எத்தி வைப்பதற்காக நம் கொள்கைச் சொந்தங்கள் படுகின்ற கஷ்ட நஷ்டங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல; ஏராளம் என்று கூறலாம். எல்லோரும் சந்தோஷமாக இருக்கின்ற விடுமுறை நாட்களிலும் கூட அவர்கள் ஓய்வெடுக்க […]

03b) உரை துவங்கும் முன் கூற வேண்டியவை.?

உரை துவங்கும் முன் கூற வேண்டியவை.? உரையை துவங்குவதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் கூறியவைகள்: إِنَّ الْحَمْدَ لِلَّهِ، نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ இன்னல்ஹம்(d)த லில்லாஹ், நஹ்ம(d)துஹு, வநஸ்தஈநுஹ். மய்யஹ்(d)திஹில்லாஹு ஃபலா மு(dh)ழிள்ள லஹ், வமய் யு(dh)ழ்லில் ஃபலா ஹாதியலஹ், […]

14) கண்டிப்பாக அறிய வேண்டிய பலவீனமான செய்திகள்

சரியான செய்திகளை அறிவதை விட, தவறான, பலவீனமான செய்திகளை கண்டிப்பாக ஒரு பேச்சாளர் அறிந்திருக்க வேண்டும். மிக அதிகமாக மக்களிடத்தில் புழக்கத்தில் உள்ள சில பலவீனமான செய்திகளை மட்டும் பட்டியலிட்டுள்ளேன். இன்னும் ஏராளமான செய்திகள் உள்ளன.  அவற்றையும் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப உரை நிழத்த வேண்டும். முரண்பட்ட மற்றும் பலவீனமான செய்திகள், அதன் விளக்கங்களுடன். ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்புக் கேட்டு திருந்துபவர்களே! இந்த ஹதீஸ் ளயீஃபானது என்றாலும், இதே […]

13) பயானுக்கு தயாராகுதல்

பயானுக்கு தயாராகுதல் இந்த நூலின் இறுதி பகுதிக்கு வந்துவிட்டோம். இப்போது உங்களை ஒரு பயான் செய்ய அழைத்திருக்கிறார்கள். ஒரு சிறந்த உரைக்கு தேவையான திட்டமிடுதல், குறிப்புகளை எடுத்தல் மற்றும் பயிற்சி எடுத்தல் பற்றி பார்ப்போம். பயானை ஜந்து பகுதிகளாக பிரிக்கலாம். Motive      Data collection     Plan      Practice      Delivery   நோக்கம் மற்றும் விசாரிப்பு குறிப்புகளை சேகரித்தல் திட்டமிடுதல் மனப்பாடம் செய்து, பயிற்சி எடுத்தல் பாடிலாங்குவேஜ், ஏற்றஇறங்கங்களுடன் வெளிப்படுத்துதல்   u நோக்கம் மற்றும் விசாரிப்பு பேசுவதற்கு பயான் […]

12) அழைப்பாளரின் பொறுப்புகள், கடமைகள்

v சகஜமாக பழகுங்கள். வலுக்கட்டாயமாக பேசுங்கள். பிற மதங்களில், கொள்கைகளில், கட்சிகளில், ஒருவர் பேச்சாளர் ஆகிவிட்டால், சாதாரண மக்களிடத்திலிருந்து விலகி நடக்க ஆரம்பித்துவிடுவார். இதுபோன்ற தன்மையை ஒருபோதும் ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். மக்களிடம், நிர்வாகிகளிடம் நீங்களாக வலியச்சென்று பேசுங்கள். கிளைகளின் செயல்பாடுகளை பற்றி விசாரியுங்கள். தெரிந்தால் ஆலோசனை கூறுங்கள். குறிப்பாக, பாமர மக்கள் அருகில் வந்து, அன்போடு எதாவது கேட்பார்கள், ”அப்ப.. தர்காவுக்கு போனா நன்மை கிடைக்காதா பாய்?” என்பது போல அப்பாவித்தனமாக எதாவது கேட்டால், ”கிழிஞ்சுது பொழப்பு. இவ்வளவு […]

11) உடல்ரீதியாக கவனிக்கவேண்டியவை

 உடல்ரீதியாக கவனிக்கவேண்டியவை. v சுறுசுறுப்பு உற்சாகம். பயான் நிகழ்த்தும்போது உற்சாகமாக இருந்தால், குறைவான குறிப்புகள் இருந்தாலும், நிறைவாகவும் தெளிவாகவும் பேசமுடியும். எனவே, பயான் நிகழ்த்தும் போது, ஃபிரஷ்ஷாக உற்சாகமாக இருக்க, முடிந்தவரை முயற்சியுங்கள். வெளியூருக்கு போகும்போது, முடிந்தால் ஓய்வு எடுப்பதற்கு தகுந்தவாறு 2 மணி நேரம் முன்னதாகவே செல்லுங்கள். உரை நிகழ்த்துவதற்கு முன்னர், குளிர்ந்த நீரை குடிக்கலாம். உளு செய்து கொள்ளலாம். எப்போதும் ஒரு எலக்ட்ரால் பவுடரை பையில் வைத்துக் கொண்டு சோர்வாக உள்ள போது பயன்படுத்திக்கொள்ளுங்கள். […]

10) விவாதம் மற்றும் மாற்றுமத தாஃவா

விவாதம் மற்றும் மாற்றுமத தாஃவா v புதியவர்கள், இஸ்லாம் இனிய மார்க்கம் நடத்த முடியுமா? பிறமத மக்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியாததாக இருந்தது. அல்லாஹ்வின் அருளால், சில அறிஞர்களின் உழைப்பின் வாயிலாக, இன்றைக்கு இஸ்லாம் சம்பந்தமான எந்த கேள்விக்கும் ரெடிமேட் பதிலை வைத்திருக்கிறோம். எனவே இந்த பகுதியில், பதில் சொல்லும் ஒருசில அடிப்படையைகளை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். எந்த கேள்விக்கு பதில் சொல்லும்போதும், முதலில் இஸ்லாத்தின் நிலைப்பாட்டை ஒரிரு […]

09) புதியவர்களுக்கான மேலும் சில அறிவுரைகள்

v புதியவர்களுக்கான மேலும் சில அறிவுரைகள் பிரச்சாரம் என்பது ஒரு கலை. புதிதாக பிரச்சாரம் செய்பவர்கள் அனுபவத்தின் மூலமாகவே ஒவ்வொரு தவறையும் சரிசெய்யவேண்டியிருக்கும். அதனால் தான் பத்துவருட அனுபவம் உள்ளவர்களின் பேச்சிற்கும், புதியவர்களின் பேச்சிற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. இந்த பகுதியில் அனுபவமுள்ளவர்களின் சில அறிவுரைகள் தரப்பட்டுள்ளன. அவற்றை கவனித்து செயல்படுத்துங்கள்.   மேடைப்பேச்சு என்பது எளிதானது தான். எனினும் உங்களுக்கு மேடைப்பேச்சு வராவிட்டால், திக்கல் தங்கல் ஏற்பட்டால் பேசஆரம்பிக்கும் முதல் நான்கைந்து தடவைகள் சாதாரண லோக்கல் […]

08) புதியவர்களின் சந்தேகமும், சில ஆலோசனைகளும்.

புதியவர்களின் சந்தேகமும், சில ஆலோசனைகளும்.   v எனக்கு புது செய்திகள் நினைவிற்கு வருவதில்லையே! ”ஒரு செய்தியை பேசிக்கொண்டிருக்கும் போது, வேறுவேறு செய்திகள் நினைவிற்கு வரும். அதை பயன்படுத்தி பேசுங்கள்” என்பது ஒரு பொதுவான அறிவுரை. அந்தந்த நேரத்தில் நினைவிற்கு வரும் புதுச்செய்திகள் தலைப்பிற்கு தொடர்பு உடையவையாகவும் இருக்கும். உரையை நீட்டவும் உதவும். புதிதாக பேசத்துவங்கும் தாயிக்களில் அதிகமானவர்களுக்கு ஏற்படும் சந்தேகம் என்னவென்றால், ”பேசிக்கொண்டிருக்கும் போது எனக்கு புதுபுது செய்திகள் எதுவும் நினைவிற்கு வருவதில்லை. பேசுவதற்கு எடுத்துக்கொண்டு […]

07) பேச்சாளர் சந்திக்கும் பிரச்சனைகள்

பேச்சாளர் சந்திக்கும் பிரச்சனைகள். புதிதாக எந்த வேலையை செய்ய ஆரம்பித்தாலும் அதில் சிரமங்கள் வருவது இயற்கை. பிரச்சாரம் இதற்கு விதிவிலக்கல்ல. அல்லாஹ்வுக்காக, சொந்த வேலைகளை விட்டுவிட்டு, நேரத்தை ஒதுக்கி பயானுக்கு குறிப்பெடுத்து, பேசவரும்போது, இதெல்லாம் பயானா? சொதப்பீடிங்க. என்று யாராவது கூறினால், மிகப்பெரும் இடி விழுந்தது போல் இருக்கும். இதுபோன்ற பேச்சாளர் சந்திக்கும் ஒருசில பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் காண்போம்.   v ஏற்கனவே கேட்டவர் இருப்பதை பெரிதுபடுத்தாதீர்கள். நீங்கள் ஒரு இடத்தில் பேசிய பேச்சை, மீண்டும் […]

06) கேள்விக்கு பதிலளிக்கும் போது கவனிக்கவேண்டியவை

கேள்விக்கு பதிலளிக்கும் போது கவனிக்கவேண்டியவை முதலில், நீங்கள் நிகழ்த்திய உரையில் எதிர்பார்க்கப்படும் கேள்விகளுக்குரிய பதில்களை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். எடுத்துவந்த தலைப்பின் கீழுள்ள சட்டங்களே சரியாக தெரியாமல் இருப்பது சரியல்ல. எனவே எதைப் பேசினீர்களோ அதுபற்றி சட்டதிட்டங்களை அறிந்துவைத்துக் கொள்ளுங்கள். இதுதவிர, பதிலளிக்கும் போது, கீழ்காணும் ஒழுங்குமுறைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.   v மார்க்க அறிவு அவசியம். பயான் செய்வதற்கு அனைத்து சட்டங்களும் தெரிந்த ஆலிமாக இருப்பது கட்டாயமில்லை என்று இந்த நூலின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தோம். எனினும் கேள்விபதில் நிகழ்ச்சிக்கு […]

05) பேச்சில் தவிர்க்கவேண்டியவை

பேச்சில் தவிர்க்கவேண்டியவை.  v சந்தேகத்திற்குரியதை ஒருபோதும் பேசிவிடாதீர்கள். ஒரு செய்தியை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, வேறுவேறு ஹதீஸ்கள் நினைவிற்கு வரும். அப்போது சில ஹதீஸை, சட்டத்தை பற்றி இது சரியா தவறா என்று சந்தேகமாக இருக்கும். சொல்லலாமா. வேண்டாமா என்று நொடிப்பொழுதில் முடிவெடிக்கவேண்டியிருக்கும். குழப்பமே வேண்டாம். சந்தேகம் வந்துவிட்டால், அந்த செய்தியை, ஹதீஸை கண்டிப்பாக சொல்லாதீர்கள். உனக்கு திட்டவட்டமான அறிவு இல்லாததைப் பின்பற்றாதே. (குர்ஆன் 17:36) என்று அல்லாஹ் நமக்கு கற்றுத்தரும் விதியை, பேச்சில் மட்டுமல்ல எல்லா […]

04) பேச்சில் அலங்காரங்கள்

பேச்சில் அலங்காரங்கள் இதுவரை பேச்சின் பகுதிகளை பார்த்தோம். இனி மக்களை கவர்ந்திழுக்கும் பேச்சு முறைகளையும், அனுபவமுள்ளவர்களின் யுக்திகளையும், குர்ஆன் ஹதீஸை சுவைபட விளக்கும் முறைகளையும் காண்போம். v தகவல்கள் நிறம்ப பேசுங்கள் – (குர்ஆன், ஹதீஸில்) சிறந்த பேச்சாளர்களின் பேச்சுக்கும், காலத்தை கடத்தும் பேச்சாளர்களின் பேச்சுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளில் மிக முக்கியமான ஒன்று, சிறந்தவர்கள், தகவல்கள் நிறம்பப் பேசுவார்கள், அவர்களின் பயானிலிருந்து குறிப்புகள் எடுத்துக்கொள்ள முடியும் அளவிற்கு, தகவல்கள் இருக்கும். ஏனோதானோ என்று பயானையும், காலத்தையும் […]

03) பேச்சின் அங்கங்கள்

பேச்சின் அங்கங்கள் எளிய வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில், ஒரு பயான் என்பது ஒரு முன்னுரையும், நடுப்பகுதியும், முடிவுரையும் கொண்டதாகும். முன்னுரை நான்கைந்து பகுதிகள் கொண்ட நடுப்பகுதி முடிவுரை முன்னுரை பயானின் நோக்கத்தை தெரிவிக்கிறது. முடிவுரை, இதுவரை பேசிய செய்திகளை நினைவூட்டி மக்களை செயல்பட அழைப்பு விடுக்கிறது. நடுப்பகுதி பயானின் அனைத்து செய்திகளையும் உள்ளடக்கியது. எளிதாக புரியவைப்பதற்காகவும், நினைவில் வைப்பதற்காகவும் நடுப்பகுதி ஒன்றிற்கும் மேற்பட்ட பகுதிகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பகுதியும் சில குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், அதன் விளக்கங்கள் மற்றும் […]

02) இந்த நூலில் என்ன உள்ளது?

¢ இந்த நூலில் என்ன உள்ளது?  புதிதாக பிரச்சாரம் செய்யவிரும்பும் மக்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன? தவிர்க்கவேண்டியவை என்ன? பயத்தை வெல்லும் வழிமுறைகள் என்ன? பேச்சாளர் கவனிக்கவேண்டிய புறவிஷயங்கள் என்ன? என பல்வேறு செய்திகள் இந்த நூலில் உள்ளன. ”10 ஆண்டுகளாக பிரச்சாரம் செய்கிறேன். நான் பேசினால் யாரும் கேட்பதில்லை. என்னை யாரும் மதிப்பதில்லை” என்று புலம்பும் பேச்சாளர்கள், பிரச்சாரத்தில் செய்யும் தவறுகளையும். கடைபிடிக்கவேண்டிய யுக்திகளையும் இந்த நூல் பட்டியலிடுகிறது. குறிப்பாக மக்களை கவரும் வகையில் பிரச்சாரம் […]

01) முன்னுரை

⭐️முன்னுரை  :  பயான் என்ற அரபி வார்த்தைக்கு “தான் நினைப்பதை தெளிவுபடுத்துதல்” என்று பொருள். நடைமுறையில், குர்ஆனையும், ஹதீஸையும் உதாரணங்களைக் கொண்டும், கருத்துக்களைக் கொண்டும் மக்களுக்கு புரியும்படி விளக்குவதை, பயான் எனலாம். 🔶 பிரச்சாரமே ஆயுதம் 55:4 عَلَّمَهُ الْبَيَانَ ”(பேச்சை) விளக்கும் திறனை (அல்லாஹ் தான் மனிதனுக்கு) கற்றுக்கொடுத்தான். (55:4)” என்று இறைவன் தன் திருமறையில் சொல்லிக்காட்டுகிறான். வீரியமிகு பேச்சின் மூலம் நன்மையை ஏவ முடியும். தீமைகளை வேறோடு களைய முடியும். தர்காவே கதி என்று […]